உண்டான் தீவு
உண்டான் தீவு (மலாய்: Pulau Undan; ஆங்கிலம்: Undan Island) என்பது மலேசியா, மலாக்கா மத்திய மலாக்கா மாவட்டம், மலாக்கா நீரிணையில் அமைந்துள்ள ஒரு தீவு.[1] மலாக்கா கடற்கரையில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள இந்தத் தீவில் மக்கள் வசிக்கவில்லை.
புவியியல் | |
---|---|
அமைவிடம் | மலேசியா தென் கிழக்கு ஆசியா |
ஆள்கூறுகள் | 2°02′53″N 102°20′02″E / 2.04806°N 102.33389°E |
பரப்பளவு | 0.045 km2 (0.017 sq mi) |
நிர்வாகம் | |
இதனுடன் மேலும் ஒரு சின்ன தீவும் உள்ளது. அந்தச் சிறிய தீவுடன் இணைக்கப்பட்டுள்ளது. குறைந்த கடல் அலைகள் இருக்கும் போது அந்தச் சிறிய தீவிற்கு நடந்து செல்ல முடியும்[2]
பொது
தொகுமலாக்கா மாநகராட்சியின் கீழ், மலாக்கா மாநிலத்திற்குச் சொந்தமான இந்தச் சிறிய தீவில் நிரந்தரமான குடியிருப்பாளர்கள் எவரும் இல்லை. அங்கு உண்டான் தீவு கலங்கரை விளக்கம் எனும் பெயரில் ஒரு கலங்கரை விளக்கம் உள்ளது. 1800-ஆம் ஆண்டில் பிரித்தானியர்கள் கட்டியது. அந்தக் கலங்கரை விளக்கத்தில், எப்போதும் ஒரு காவலரும் மற்றும் பராமரிப்பு ஊழியர்களும் தொடர்ந்து கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள்.[3]
உண்டான் தீவு பல்வேறு பவளப்பாறைகள், பாறைகள் மற்றும் மணல் கடற்கரைகளால் சூழப்பட்டுள்ளது. இந்தத் தீவை படகுகள் மூலம் மட்டுமே அணுக முடியும். மீன்பிடித்தல், நீரடி நீந்தல் (Scuba Diving; Snorkelling) போன்ற கேளிக்கை நடவடிக்கைகளுக்காக மக்கள் அங்கு வருகிறார்கள்.[4]
கூழைக்கடா கடல் பறவை
தொகுஉண்டான் தீவு, மலாக்கா நீரிணையில் உள்ள புலாவ் பெசார் தீவுக்குப் பின்னால் மறைந்துள்ளது. முந்தைய காலங்களில், பிரித்தானியர்களால் இந்தக் கலங்கரை விளக்கம் கட்டப் படுவதற்கு முன்பே, இந்தத் தீவு கடற்கொள்ளையர்களின் மையமாக அறியப்படுகிறது.[5]
ஒரு காலத்தில் இந்தத் தீவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வாழ்ந்த கூழைக்கடா கடல் பறவையால்; உண்டான் தீவு என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. மலாய் மொழியில், "உண்டான்" என்றால் கூழைக்கடா பறவையைக் குறிக்கிறது. இங்கு பாறை மீன்கள் அதிகம் உள்ளன.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "The island of Pulau Undan is hidden behind the larger Pulau Besar in the Straits of Melaka". பார்க்கப்பட்ட நாள் 1 June 2023.
- ↑ "Undan Island". malaysiatravelpedia.com. பார்க்கப்பட்ட நாள் 1 June 2023.
- ↑ "Islands off Melaka to be gazetted as first national marine park". The Vibes. Bernama. 2 October 2021. பார்க்கப்பட்ட நாள் 1 June 2023.
- ↑ Mohamad Fazrul Abdul Majid (2 October 2021). "Tiga pulau di Melaka bakal diwarta Taman Laut Negara". melakahariini.my. பார்க்கப்பட்ட நாள் 5 June 2023.
- ↑ Siti Salehah (24 July 2022). "Pulau Undan, Nangka, Dodol diwartakan hujung tahun ini". melakahariini.my. பார்க்கப்பட்ட நாள் 5 June 2023.
- ↑ Diyanatul Atiqah Zakarya (27 February 2022). "Boleh snorkeling, skuba di Pulau Undan bila-bila masa". Kosmo. பார்க்கப்பட்ட நாள் 1 June 2023.