உத்கலதேசம்
உத்கலதேசம் சித்ரகூட மலைக்கு தெற்கிலும் ஹேஹயதேசத்திற்கு கிழக்கிலும், மகோத நதியின் கரை முதல் வைதரணீ நதி உற்பத்தியாகும் இடம் வரையிலும் பரவி இருந்த தேசம்.[1]
இருப்பிடம்
தொகுஇந்த தேசம் கோசலதேசத்திற்கு சமமாய் செழிப்பான தேசமாகும். மகோத நதியின் தென்பாகமெல்லாம் மேகலதேசம் என்றும், வடக்கில் வைதரணீ நதி அருகே உள்ள பூமியெல்லாம் பல்லாடதேசம் என்றும் இரு உபதேசங்களை உடையதாகிறது.[2]
மலை, காடு, விலங்குகள்
தொகுஇந்த தேசத்தின் மேற்கில் ஹேஹயதேசத்திற்கு அருகில் கந்தர்வகிரி என்ற மலையும், அடர்ந்த காடுகளும், நிறைந்து இருக்கிறது. இத்தேசத்தில் சிறு, சிறு குன்றுகளும், சிறு, சிறு காடுகளும் உண்டு.
நதிகள்
தொகுஇந்த உத்கலதேசத்தின் மேற்குபாகத்தில் மகோத நதி ஓடி இந்த தேசத்தை செழிக்க வைக்கின்றது. மகோத நதி இந்த உத்கலதேசத்தை கடந்து கிழக்குக் கடலில் வீழ்கிறது.
கருவி நூல்
தொகு- புராதன இந்தியா என்னும் 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009