ஹேஹயதேசம்

South India Map 1794.jpg

ஹேஹகயதேசம் மகததேசத்திற்கு நேர் தெற்கிலும் சித்திரகூட மலை அடிவாரம் முதல், கிழக்கில் உத்கலதேசம் வரையிலும் பரவி தொடர்ந்து மகேந்திர மலை வரை பரவி இருந்த தேசம்.[1]

இருப்பிடம்தொகு

இந்த தேசத்தின் மேற்கு எல்லை பூமி உயர்ந்தும், கிழக்குபாகத்தில் மகாநதி உண்டாகுமிடத்தில் சரிவாய் சாய்ந்தும் மிகவும் நல்ல மண் வளத்துடன் இருக்கும் தேசமாகும். இந்த தேசத்தில் எப்போதும் மழை பெய்து கொண்டே இருக்கும்.[2]

மலை, காடு, விலங்குகள்தொகு

இந்த தேசத்தின் கிழக்குப்பாகத்தில் சிறு, சிறு குன்றுகளும், சிறு, சிறு காடுகளும் குறைவாயும், செழிப்பான நல்ல பூமி அதிகமாகவும் இருக்கும். இந்த மலைகளில் சித்ரகூட மலை என்னும் மலை மிகச்சிறந்தவை. இந்த மலைத்தொடருக்கு அருகில் பகுரூபம்என்னும் மலையும், தெற்கில் காஹள மலையும் உள்ளது. இம்மலைகளில் கொடிய விங்குகள் அதிகம் உண்டு.

நதிகள்தொகு

இந்த மகததேசத்தின் வடக்கில் சித்ரகூட மலைஎன்ற பெரியமலையும், அருகில் மகாநதி நதியும், பகுரூபம் மலையில் உருவாகும் நதியும் ஒன்று சேர்ந்து ஹேஹயதேசத்திற்கு வடமேற்கில் சோணாநதியுடன் சேர்ந்து கிழக்குக் கடலில் வீழ்கிறது.[3]

கருவி நூல்தொகு

சான்றடைவுதொகு

  1. "புராதன இந்தியா"-பி. வி. ஜகதீச அய்யர்-1918 - Published by- P. R. Rama Iyer & co-madaras
  2. புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 250 -
  3. புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 251 -
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹேஹயதேசம்&oldid=2076862" இருந்து மீள்விக்கப்பட்டது