உத்தம புத்திரன் (1940 திரைப்படம்)
திருச்செங்கோடு ராமலிங்கம் சுந்தரம் இயக்கத்தில் 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(உத்தமபுத்திரன், 1940 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
உத்தம புத்திரன் 1940-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] டி. ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. யு. சின்னப்பா, என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2] இப்படம் 5 லட்சம் ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது. இது ஹாலிவுட் படமான த மேன் இன் தி அயன் மாஸ்க் (1939) படத்தைத் தழுவி உருவாக்கப்பட்டிருந்து, இதன் கதை அலெக்சாந்தர் துமா எழுதிய பிரெஞ்சுக் கதையின் திரைவடிவமே. இதே கதை பின்னர் சிவாஜி கணேசன் முதன்முதலில் இரட்டை வேடத்தில் நடித்து உத்தம புத்திரன் என்ற பெயரில் 1958 இல் வெளியானது.[3][4]
உத்தம புத்திரன் | |
---|---|
இயக்கம் | டி. ஆர். சுந்தரம் |
தயாரிப்பு | டி. ஆர். சுந்தரம் (மாடர்ன் தியேட்டர்ஸ்) |
இசை | ஜி. ராமநாதன் |
நடிப்பு | பி. யு. சின்னப்பா என். எஸ். கிருஷ்ணன் காளி என். ரத்னம் டி. எஸ். பாலையா எம். வி. ராஜம்மா டி. எஸ். கிருஷ்ணவேணி டி. ஏ. மதுரம் |
வெளியீடு | அக்டோபர் 24, 1940 |
நீளம் | 19131 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பின்னர் | உத்தம புத்திரன் (1958 திரைப்படம்) |
நடிகர்கள்
தொகு- பி. யு. சின்னப்பா
- என். எஸ். கிருஷ்ணன்
- காளி என். ரத்னம்
- டி. எஸ். பாலையா
- எம். வி. ராஜம்மா
- டி. எஸ். கிருஷ்ணவேணி
- டி. ஏ. மதுரம்
பாடல்கள்
தொகுஜி. ராமநாதன் இப்படத்திற்க்கு இசை அமைத்துள்ளார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-21. இணையக் கணினி நூலக மைய எண் 843788919.
- ↑ ராண்டார் கை (2 மே 2008). "Utthama Puthran 1940". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/article3022854.ece. பார்த்த நாள்: 13 செப்டம்பர் 2016.
- ↑ "'டபுள் ஆக்ட்' படங்களுக்கு தாத்தா 'உத்தமபுத்திரன்'; பி.யு.சின்னப்பாவை சூப்பர் ஸ்டாராக்கிய மாடர்ன் தியேட்டர்ஸ்! 80 ஆண்டுகளுக்கு முன்பு 5 லட்ச ரூபாய் வசூல் செய்து சாதனை". இந்து தமிழ். 14 அக்டோபர் 2020. பார்க்கப்பட்ட நாள் 14 அக்டோபர் 2020.
- ↑ "சினிமாஸ்கோப் 36: அபூர்வ சகோதரிகள்". கட்டுரை. தி இந்து. 9 சூன் 2017. பார்க்கப்பட்ட நாள் 9 சூன் 2017.