உத்தரகாண்டு நாள்

உத்தராகண்ட மாநிலம் உருவான நாள்

உத்தரகாண்ட் தினம் (Uttarakhand Day) உத்தரகாண்ட் ஸ்தாபன திவாஸ் என்றும் குறிப்பிடப்படுகிறது. இது இந்திய மாநிலமான உத்தராகண்டின் மாநில நிறுவன நாளாகக் கொண்டாடப்படுகிறது. இது 2000 ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் நவம்பர் 9 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. [1] [2]

உத்தராகண்ட தினம்
அதிகாரப்பூர்வ பெயர்உத்தராகண்ட தினம்
பிற பெயர்(கள்)உத்தராகண்ட ஸ்தாபன திவாஸ்
கடைபிடிப்போர்உத்தராகண்டம்
வகைState Foundation Day
நாள்9 நவம்பர் 2000

உத்தரகாண்டின் தொடக்கம்

தொகு

இந்தியாவின் சுதந்திரத்தைத் தொடர்ந்து, முந்தைய ஐக்கிய மாகாணங்களின் இமயமலை மாவட்டங்கள் பிராந்திய இலக்கியங்களில் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெறத் தொடங்கின. 1949 இல்,கார்வால் நாடு இந்தியாவுடன் இணைந்தது . 1950 இல் இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன், ஐக்கிய மாகாணங்கள் உத்தரப் பிரதேசம் என மறுபெயரிடப்பட்டு இந்தியாவின் மாநிலமாக மாறியது. சுதந்திரம் அடைந்து பல தசாப்தங்களுக்குப் பிறகும், இமயமலைப் பகுதியில் உள்ள மக்களின் நலன்களை நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பை உத்தரப்பிரதேச அரசால் பூர்த்தி செய்ய முடியவில்லை. வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை, போதிய உள்கட்டமைப்பு இல்லாமை, பொது வளர்ச்சியின்மை மற்றும் சிறந்த வாய்ப்புகளைத் தேடி மலைப்பகுதிகளில் இருந்து பூர்வீக (பஹாரி மொழி பேசும்) மக்கள் இடம்பெயர்ந்தமை ஆகியவை இறுதியில் தனி மலை மாநிலம் உருவாக்கப்படுவதற்கான மக்களின் கோரிக்கைக்கு வழிவகுத்தது. மாநில அந்தஸ்தை அடைவதற்காக உத்தரகாண்ட் கிராந்தி தளம் உருவானதைத் தொடர்ந்து, எதிர்ப்புகள் வேகம் கூடியது. மேலும், 90 களில் பிராந்தியம் முழுவதும் பரவலான மாநில இயக்கத்தின் வடிவத்தை எடுத்தது. 1994 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி, முசாபர்நகரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது உத்தரப் பிரதேசக் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில், ஏராளமானோர் கொல்லப்பட்டதால், இயக்கம் வன்முறையாக மாறியது.

மாநில உரிமை ஆர்வலர்கள் அடுத்த பல ஆண்டுகளாக தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதன் விளைவாக உத்தரபிரதேச மறுசீரமைப்புச் சட்டம், 2000 மூலம் உத்தரகாண்ட் மாநிலம் 9 நவம்பர் 2000 அன்று உத்தராஞ்சல் மாநிலமாக உருவாக்கப்பட்டது. இது முந்தைய உத்தரபிரதேச மாநிலத்தை இரண்டாகப் பிரித்தது. ஜனவரி 1, 2007 அன்று, உத்தராஞ்சல் மாநிலத்திற்கு முன்னர் அறியப்பட்டிருந்த பெயரை மீட்டெடுத்து, உத்தரகாண்டம் என மறுபெயரிடப்பட்டது. [3]

2016 ஆண்டு

தொகு

உத்தரகாண்டம் மாநிலத்தின் 16வது ஆண்டு விழாவில் உத்தரகாண்ட் ரத்னா விருதை அம்மாநில முதல்வர் ஹரீஷ் ராவத் வழங்கினார். [4]

சான்றுகள்

தொகு
  1. Goyal, Shikha (7 November 2019). "Uttarakhand Foundation Day: All you need to know". Jagran Josh. பார்க்கப்பட்ட நாள் 1 June 2020.
  2. "Uttarakhand to celebrate state foundation week from Nov 3". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 31 October 2019. பார்க்கப்பட்ட நாள் 1 June 2020.
  3. "Uttarakhand: Festivals". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்.
  4. Rai, Mayank (9 November 2016). "राज्य स्थापना पर शुरू किया गया उत्तराखंड रत्न पुरस्कार". News18 Hindi (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 4 June 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உத்தரகாண்டு_நாள்&oldid=3823008" இலிருந்து மீள்விக்கப்பட்டது