உபிந்தர்ஜித் கவுர்

இந்திய அரசியல்வாதி

முனைவர் உபிந்தர்ஜித் கவுர் ( Upinderjit Kaur ) ஒரு இந்திய அரசியல்வாதியும் மற்றும் சிரோமணி அகாலி தளத்தைச் சேர்ந்தவரும் ஆவார். இவர் அகாலி தளம் சார்பில் பஞ்சாப் சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.

உபிந்தர்ஜித் கவுர்
சட்டப் பேரவை உறுப்பினர், பஞ்சாப்
பதவியில்
1997 - 2012
முன்னையவர்குர்மைல் சிங் (அரசியல்வாதி)
பின்னவர்நவ்நீத் சிங் சீமா
தொகுதிசுல்தான்பூர்
தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழில்துறை பயிற்சி அமைச்சர்
பதவியில்
1997 -2002
பின்னவர்இராஜிந்தர் கவுர் பட்டல்
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
பதவியில்
2007 -2010
முன்னையவர்அர்னம் தாசு சோகர்
பின்னவர்சேவா சிங் சேக்வான்
நிதி மற்றும் திட்டமிடல் துறை அமைச்சர்
பதவியில்
அக்டோபர் 2010 - மார்ச்சு 2012
முன்னையவர்மன்பிரீத் சிங் பாதல்
பின்னவர்பரிமிந்தர் சிங் திந்த்சா
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிசிரோமணி அகாலி தளம்
வாழிடம்(s)கபுர்த்தலா, பஞ்சாப்

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

இவரது தந்தை எஸ். ஆத்மா சிங் பஞ்சாப் அரசின் அமைச்சராகவும், அகாலிதளத் தலைவராகவும் இருந்தார். இவரது தாயார் பெயர் பீபி தேஜ் கவுர் என்பதாகும். இவர் தில்லி பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலையையும் மற்றும் சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பஞ்சாபியில் முதுகலையையும் , பாட்டியாலாவில் உள்ள பஞ்சாபி பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.

கல்வி வாழ்க்கை தொகு

இவர் பஞ்சாபி பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் கற்பித்துள்ளார். மேலும் அங்கு பொருளாதார பேராசிரியராகவும் இருந்தார். சுல்தான்பூர் லோதி மற்றும் கபூர்தலா மாவட்டத்தின் குருநானக் கல்சா கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றினார். இவர் 'தேவையின் கோட்பாடு வளர்ச்சி' மற்றும் 'சீக்கிய மதம் மற்றும் பொருளாதார வளர்ச்சி' ஆகிய இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார்.[1] இவரது இரண்டாவது புத்தகம் பொருளாதாரம் அல்லாத காரணிகளின் பங்கு பற்றியது. குறிப்பாக பொருளாதார வளர்ச்சியில் மதம் பற்றி விவரிக்கிறது. 'சீக்கிய சமுதாயத்தில் பெண்களின் இடம் மற்றும் நிலை' என்ற இவரது அசல் ஆய்வுக் கட்டுரைக்காக இவருக்கு முனைவர் கந்தா சிங் நினைவு விருது வழங்கப்பட்டது.

இவர் 1997 இல் சுல்தான்பூரில் இருந்து அகாலி தளம் சார்பில் பஞ்சாப் சட்டப் பேரவைக்கு முதல் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] இவர் பிரகாஷ் சிங் பாதல் அரசாங்கத்தில் மாநில அமைச்சராக நியமிக்கப்பட்டார். இவருக்கு தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழில்துறை பயிற்சி, கலாச்சார விவகாரங்கள் மற்றும் சுற்றுலா, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு ஆகிய துறைகள் வழங்கப்பட்டது.[3] இவர் 2002 மற்றும் 2007 இல் சுல்தான்பூரில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4][5] 2007 இல் மீண்டும் கல்வி, உள்ளூர் விமான போக்குவரத்து, லஞ்ச ஒழிப்பு மற்றும் நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். அக்டோபர் 2010 இல், மற்ற கட்சிகளுடன் மத்திய அரசிடமிருந்து கடன் தள்ளுபடி சலுகை குறித்த கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து மன்பிரீத் சிங் பாதல் நீக்கப்பட்ட பிறகு, இவர் நிதி அமைச்சராகி,[6] சுதந்திர இந்தியாவின் முதல் பெண் நிதியமைச்சர் என்ற பெயரைப் பெற்றார்.[7] பொதுக் கணக்குக் குழு, மதிப்பீட்டுக் குழு, பொது நிறுவனக் குழு, சட்டப்பேரவைக் குழு போன்ற பல்வேறு சட்டப்பேரவைக் குழுக்களில் உறுப்பினராக இருந்துள்ளார். 2012இல் நடந்த பஞ்சாப் சட்டப் பேரவைத் தேர்தலில் பெண்களில் 72 வயது நிரம்பிய மிகவும் வயதான வேட்பாளராக இருந்தார்.[8]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உபிந்தர்ஜித்_கவுர்&oldid=3926378" இலிருந்து மீள்விக்கப்பட்டது