உப்பிலிடுதல் (உணவு)
உப்பிலிடுதல் (salting) என்பது சமையல் உப்பைப் பயன்படுத்தி உணவுகளைப் பதப்படுத்தி வைக்கும் ஒரு முறை. ஊறுகாய் செய்தல், உப்பு நீரை பயன்படுத்தி பதப்படுத்தல் ஆகிய துறைகளில் இது பயன்படுகிறது. இது உணவைப் பாதுகாக்கும் முறைகளில் பழமையான முறை. மீன்களை உப்பிலிட்டு கருவாடாக மாற்றுதல் மற்றும் இறைச்சி வகைகளை உப்பிலிட்டு பதப்படுத்தி வைக்கும் முறைகள் பழங்காலம் முதலே மக்கள் பயன்படுத்தி வரும் முறைகள். ரன்னர், பீன்ஸ் மற்றும் முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளையும் இந்த முறையில் பதப்படுத்தி வைக்கலாம்.
பாக்டீரியா, பூஞ்சை மற்றும் பிற நோய்களை உருவாக்க சாத்தியமுள்ள நுண்ணுயிரிகள் உப்புச்சூழலில் வாழ இயலாது. உப்புச்சூழலில் இவ்வகை நுண்ணுயிரிகள் இறந்து விடும் அல்லது தற்காலிகமாக செயல்படாமல் இருக்கும்.
உப்பிலிடுதல் முரை 19 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. சாதரணமாக சாம்பல் நிறத்துக்கு மாறும் இறைச்சிகள் உப்பிலிட்டு வைத்தால் சிகப்பு நிறமாக மாறிவிடுகிறது. அந்த கால மக்கள் சிவப்பு நிற உணவை அதிகமாக விரும்பியதால் உப்பிலிடுதல் பிரபலமானது. மேலும் உப்பிலிடுதல் உணவினை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு தவிர்த்து பாக்டீரியா சிதைவிலிருந்தும் பாதுகாக்கப்படுகிறது.
மத வழக்கம்
தொகுயூத மற்றும் முஸ்லீம் உணவு சட்டங்களின் படி விலங்குகளி இறச்சிகளை அவற்றின் இரத்தத்தை முழுமையாக நீக்கிய பின்பே பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறது. இரத்தைத்தை நீக்குவதற்கு உப்பு மற்றும் உப்பு நீர் பயன்படுத்தப்படுகிறது.
மேலும் வாசிக்க
தொகு- குணப்படுத்தும் (உணவு பாதுகாப்பு)
- உணவு பாதுகாப்பு
- உணவு சேமிப்பு
- பட்டியல் உலர்ந்த உணவுகள்