உப்பிலியர்
உப்பிலிய நாயக்கர் (Uppiliya naicker) அல்லது உப்பிலியர் (Uppiliyar) எனப்படுவோர் தமிழகத்தில் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர்.[1] இச்சமூகத்தினரின் தாய்மொழி தமிழ் மொழி ஆகும். தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியலில், இவர்கள் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ளனர்.[2] இவர்களோடு தெலுங்கு பேசும் உப்பாரா இனத்தவர்களையும் இணைத்துள்ளனர். உப்பிலிய நாயக்கர் சமூக மக்கள் தங்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் சேர்க்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கின்றனர்.[3]
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
---|---|
தமிழ்நாடு | |
மொழி(கள்) | |
தமிழ் | |
சமயங்கள் | |
இந்து | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
உப்பாரா |
சொற்பிறப்பு
உப்பர, உப்பாரா மற்றும் உப்பாலிகா ஆகிய சொற்களின் வேர் திராவிட வேராகும். உப்புடன் தொடர்பு கொண்ட சகல தொழில்களையும் இது குறிக்கின்றது.[4]
தொழில்
உப்பு காய்ச்சுவது இவர்களது குல தொழிலாகும்.[5] தற்போது சிலர் அரசு அல்லது தனியார் வேலைகளில் பணியாற்றுகின்றனர். மேலும் சிலர் விவசாயம் மற்றும் வணிகத்திலும் ஈடுபடுகின்றனர்
பண்பாடு
உப்பிலியர் இனத்தவர்களின் திருமணத்தில், மணமகனுக்கு தாலி கட்டும் வழக்கம் உண்டு.[6] இச்சமூகத்தில் முன்னோர் வழிபாடு கடைபிடிக்கப்படுகிறது. [7] சுங்கலம்மா, திம்மப்பா, ஜம்புலம்மா ஆகிய தெய்வங்கள், இம்மக்கள் வழிபடும் சிறப்புத் தெய்வங்களாகும்.[8]
புராண கதை
விஷ்ணு புராணத்தில், உப்பிலியரைப் பற்றிய ஒரு கதை குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் உப்பிலிய இன பெண்கள் வளையல் அணியக்கூடாது என்பது அவர்களின் சம்பிரதாயம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு ஒரு கதையும் உண்டு. உப்பிலியன் ஒருவன் இறைவன் உண்பதற்கு தினமும் உப்பு கொடுத்து வந்தான், ஒரு நாள் உப்பிலியன் மனைவி இறைவனுக்கு எடுத்துவைக்கப்பட்ட உப்பை எடுத்து வளையல்காரனுக்கு கொடுத்து வளையல் வாங்கிவிட்டால் இதனை அறிந்து உப்பிலியன் தன் மனைவியை சுண்ணாம்புக் காளவாயில் வைத்து வேகவைத்தான், அப்போது அவன் மனைவி அங்காள பரமேஸ்வரி தியானித்த சுண்ணாம்புக் காளவாயின் அடித்துவாரம் வழியாக உயிரோடு வெளிவந்துவிட்டார். அன்று முதல் உப்பிலிய இன பெண்கள் வளையல் அணிவதில்லை என்று சபதம் எடுத்துக்கொண்டனர்.[9]
பிரிவுகள்
உப்பிலிய நாயக்கர் சமுகத்தில் 6 பட்டம், 27 நாடு மற்றும் 7 குலம் உள்ளதாக கூறபடுகிறது.
பட்டம்
- அரிய பட்டம் (ஏழுரான்)
- நிழழி பட்டம்
- பீடம்பள்ளி பட்டம்
- சிறுகளஞ்சி பட்டம்
- முடி கொண்ட பட்டம்
- பூந்துறை பட்டம்
குலம்
- பெரிய வீட்டார் (விஜய மங்களத்தார்)
- வெள்ளோட்டார்
- ஈரோட்டார்
- வெள்ள கோவிலார்
- தாழக்கரையார்
- இலுப்பிலியர்
- இடையத்தார்
- பாழுதொழுவார்
- பிடாரியூரார்
- நங்கவரத்தார்
- பரஞ்சோதியார்
- இரங்கம்பாடியார்
- தொட்டியத்தார்
- பாடுவார்
- சேவூரார்
- உக்கரத்தார்
- மாம்பாடியார்
- பருத்திப்பொலியார்
- நிலையனூரார்
- ஆறுநாட்டார்
- ஆத்தூரார்
- நம்பியூரார்
- செருக்கலையார்
- சொட்ட வட்டியார்
- மருதூரார்
- காங்கேயத்தார்
- குறையலூரார்
மேற்கோள்கள்
- ↑ டி . எம் . காளியப்பா, ed. (1992). கோவை நகர வரலாறு. தேவி பதிப்பகம். p. 42.
உப்பிலியர் என்னும் மக்கள் மிகத் தொன்மையான திராவிடர்கள் . தமிழ் நாட்டில் வாழ்ந்தவர்களுக்கு உப்பிலியர் எனப் பெயர்
- ↑ "List of Backward Classes approved by Government of Tamil Nadu".
- ↑ உப்பிலிய நாயக்கர் சமுதாயத்தை எம்.பி.சி.,யில் சேர்க்க கோரிக்கை. தினமலர் நாளிதழ். ஜூலை 09,2012.
உப்பாரா, உப்பிலிய நாயக்கர் சமூகத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ டி . எம் . காளியப்பா, ed. (1992). கோவை நகர வரலாறு. தேவி பதிப்பகம். p. 42.
- ↑ Jogendra Nath Bhattacharya, ed. (1896). Hindu Castes and Sects: An Exposition of the Origin of the Hindu Caste System and the Bearing of the Sects Towards Each Other and Towards Other Religious Systems. Thacker, Spink. p. 265. Archived from the original on 2021-02-09. பார்க்கப்பட்ட நாள் 2021-02-12.
The salt manufacturing caste of the Madras Presidency are called Uppilian, Uppara and Upaliga
- ↑ கிருட்டிணவேணி (1975). காவிரிநாடன் (ed.). உலகத் திருமணங்கள். பாப்பா பதிப்பகம் , சென்னை. p. 116.
உப்பிலியர் இவர்களின் கல்யாணத்தில் மணமகன் தாலி கட்டுதல் உண்டு
{{cite book}}
: Missing|author1=
(help) - ↑ இரா . நாகசாமி, ed. (1979). தமிழ்நாடு வரலாற்றுக் கருத்தரங்கு. வரலாற்றுப் பேரவை வெளியீடு , சென்னை. p. 38.
முன்னோர் வழிபாடு , கம்பளத்து நாயக்கர் , உப்பிலியர் , பண்டாரம் , நாடார் ஆகியோர் பூசை செய்கின்றனர் .
- ↑ K. M. Venkataramaiah, ed. (1996). A handbook of Tamil Nadu. International School of Dravidian Linguistics. p. 425. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788185692203.
- ↑ டி . எம் . காளியப்பா, ed. (1992). கோவை நகர வரலாறு. தேவி பதிப்பகம். p. 42.
உப்பிலியரைப் பற்றிய புராணக் கதை விஷ்ணு விரிவாக்கப்பட்டுள்ளது உப்பிலியர் பெண்கள் வளையல் அணியக்கூடாது என்பது பழைய சம்பிரதாயம். அதற்கு ஒரு கதையும் உண்டு ! கடவுள் சாப்பிடுவதற்கு தினசரி உப்புக் கொடுத்து வந்தான் ஒரு உப்பிலியன் . ஒரு நாள் உப்பிலியன் மனைவி கடவுளுக்காக எடுத்துவைக்கப் பட்ட உப்பை வளையல்காரனுக்கு கொடுத்து வளையல் வாங்கி விட்டாளாம்.இதையறிந்த உப்பிலியன் , தன் மனைவியை சுண்ணாம்புக்காளவாயில்வைத்து வேக வைத்தானம். பரமேஸ்வரியை தியானித்த அந்தப்பெண் , சுண்ணாம்புக் காளவாயின் அடித்துவாரம் வழியாக உயிரோடு வந்துவிட்டாளாம் . அன்றுமுதல் வளையல் அணிவதில்லை ! என்று சபதம் எடுத்துக் கொண்டார்களாம்
{{cite book}}
: line feed character in|quote=
at position 62 (help)