உமா சுதிர்

இந்தியப் பத்திரிகையாளர்

உமா சுதிர் (Uma Sudhir) இந்தியாவைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர் ஆவார்.[1] தொலைக்காட்சி செய்தி வலையமைப்பான என்டிடிவி தொலைக்காட்சியின் தென்னிந்திய பிரிவின் நிர்வாக ஆசிரியராக உள்ளார். [2] ஏறக்குறைய 28 ஆண்டுகள் உமா ஒரு பத்திரிகையாளராக வாழ்ந்தார். தென்னிந்தியாவின் சில பெரிய செய்திகளை, குறிப்பாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களை உள்ளடக்கிய செய்திகளுக்கு இவர் பொறுப்பானவராக இருந்துள்ளார். அரசியல், குழந்தைகள் மற்றும் பெண்கள், மனித உரிமைகள் மற்றும் கிராமப்புற துயரங்கள் போன்ற செய்திகள் உள்ளிட்ட இவரது அற்புதமான பணிக்காக ராம்நாத் கோயங்காவின் சிறப்பான பத்திரிகை விருது மற்றும் சிறந்த பெண் ஊடகவியலாளர்களுக்கான சாமேலி தேவி செயின் விருது உட்பட பல விருதுகளை உமா சுதிர் பெற்றுள்ளார்.[3][4][5]

சுயசரிதை

தொகு

இந்தியாவின் கேரள மாநிலம் திருவனந்தபுரம் நகரில் பிறந்த உமா, தனது குழந்தைப் பருவத்தை மும்பை மற்றும் ஐதராபாத்து போன்ற இந்தியா முழுவதும் உள்ள பல நகரங்களில் கழித்தார். இறுதியாக தனது பள்ளிப் படிப்பையும் இளங்கலை படிப்பையும் புது தில்லியில் முடித்தார். 1989 ஆம் ஆண்டில் டைம்சு பத்திரிகையியல் பள்ளியில் ஒரு வருட பத்திரிகையியல் திட்டத்தின் மூலம் பத்திரிகை துறையில் உமா நுழைந்தார். புது தில்லியில் உள்ள டைம்சு ஆஃப் இந்தியா பத்திரிகையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 1994 ஆம் ஆண்டு பிரபஞ்ச அழகிப் போட்டி நடைபெற்ற போது உமா டைம்சு ஆப் இந்தியா செய்தித்தாளின் சிறப்பாசிரியராக இருந்தார். அப்போதைய வெற்றியாளரான சுசுமிதா சென்னையைப் பற்றிய கட்டுரையை இவர் எழுதினார். ஒரு பத்திரிக்கையாளரான டி.எசு. சுதிரை உமா சுதிர் திருமணம் செய்து கொண்டார். 1995 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் உமா சுதிர் ஐதராபாத்து நகருக்கு குடிபெயர்ந்தார்.[1]

ஆந்திர மாநிலத்தில் என்.டி.ராமா ராவுக்கு எதிரான என். சந்திரபாபு நாயுடுவின் அரசியல் கிளர்ச்சி தொடர்பான கட்டுரைகளுக்கு உம சுதிர் பொறுப்பேற்றார். இவர் ஐதராபாத்து தலைநகருக்கு இடம்பெயர்ந்த சில நாட்களுக்குப் பிறகு தொடங்கியது.[1] டைம்சு குழுமத்தில் இவர் வேலை செய்யும் போது, அதன் வணிகச் செய்திகளான தி எகனாமிக் டைம்சுடன் வேலை செய்வதிலும் இவர் ஈடுபட்டிருந்தார்.[6] 1998 ஆம் ஆண்டில், உமா புதிய தொலைக்காட்சி சேனலான இசுட்டார் நியூசுக்குச் சென்றார். பின்னர் இது என்டிடிவி என மறுபெயரிடப்பட்டது.[1] அதன் பின்வரும் காலகட்டத்தில், உமா ஐதராபாத் நகரில் குடியிருப்பு ஆசிரியராக நியமிக்கப்பட்டார் மற்றும் இறுதியில் என்டிடிவி தொலைக்காட்சி வலையமைப்பின் தென்னிந்திய பிரிவின் நிர்வாக ஆசிரியராகவும் ஆனார். [6]

2015 ஆம் ஆண்டில், ஒளிபரப்பு இதழியல் பிரிவில் ராம்நாத் கோயங்கா எக்சலன்சு பத்திரிகையாளர் விருதை உமா சுதிர் வென்றார்.[4] 2017 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 6 ஆம் தேதியன்று இவருடைய பகுப்பாய்வு அறிக்கைகள் பல்வேறு மாநிலங்களில் அடிப்படை யதார்த்தங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உதவியதாக குறிப்பிட்டு " சிறந்த பெண் ஊடகவியலாளர்களுக்கான சாமேலி தேவி செயின் விருதையும் உமா பெற்றார்.[7] இந்த விருது கடந்த 38 ஆண்டுகளாக பெண் பத்திரிக்கையாளர்களை ஒரு நிலையான பணி மூலம் சிறப்பான தரத்தை நிலைநிறுத்துவதை அங்கீகரிப்பதற்காக வழங்கப்பட்ட்டு வருகிறது. தனது தொழில் துறையில் ஒரு தொழில் தலைவராகவும் உமா சுதிர் இந்திய தொழில் கூட்டமைப்பால் அங்கீகரிக்கப்பட்டார்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 Issac, Anna (2018-03-05). "28 years in news: NDTV's Uma Sudhir wins Chameli Devi Jain award 2017". தி நியூஸ் மினிட் (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-27.
  2. Sudhir, Uma (2018-03-15). "'What Happens When the Journalism in the Journalist is Killed?'". The Quint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-27.
  3. "NDTV's Uma Sudhir gets 2017 Chameli Devi Jain award". 2018-03-04. https://www.business-standard.com/article/pti-stories/ndtv-s-uma-sudhir-gets-2017-chameli-devi-jain-award-118030400602_1.html. 
  4. 4.0 4.1 Kanojia, Ravi (2015-11-24). "Ramnath Goenka Excellence in Journalism Awards: List of winners". இந்தியன் எக்சுபிரசு (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-30.
  5. "Uma Sudhir". Indian School of Business. பார்க்கப்பட்ட நாள் 2020-11-27.
  6. 6.0 6.1 "Uma Sudhir". South Asian Women in Media (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-30.
  7. Agarwal, Cherry (6 March 2018). "Shouting matches on TV are the bane of good journalism: Uma Sudhir". Newslaundry. பார்க்கப்பட்ட நாள் 2020-11-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உமா_சுதிர்&oldid=3931489" இலிருந்து மீள்விக்கப்பட்டது