உமா பெம்மாராஜு

உமா தேவி பெம்மாராஜு ( மார்ச் 31, 1958 - 8 ஆகஸ்ட் 2022) [2] ஒரு இந்திய-அமெரிக்க பத்திரிகையாளர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். ஃபாக்ஸ் நியூஸ் கேபிள் நெட்வொர்க்கின் 1996 பிரீமியரில் அசல் தொகுப்பாளர்களில் ஒருவராக இருந்தார். பெம்மராஜு, இந்தியாவில் பிறந்து, டெக்சாஸின் சான் அன்டோனியோவில் வளர்ந்தவர், நியூயார்க்கில் உள்ள ஃபாக்ஸ் நியூஸிற்காக "அமெரிக்காவின் செய்தித் தலைமையகம் ஃபாக்ஸ் நியூஸ் இன் நேரலைத் தொகுப்பாளராக இருந்தார். மேலும், இவர் ப்ளூம்பெர்க் நியூஸுக்காகவும் அறிக்கை செய்தார்.

உமா பெம்மாராஜு
உமா பெம்மாராஜு-1982 இல்
பிறப்பு(1958-03-31)31 மார்ச்சு 1958
ராஜமன்றி, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இறப்பு8 ஆகத்து 2022(2022-08-08) (அகவை 64)
நியூயார்க்கில் உள்ள ஓசினிங்கில் உள்ள தனது இல்லத்தில்
படித்த கல்வி நிறுவனங்கள்டிரினிடி பல்கலைக்கழகம்
பணிநிருபர், செய்தி தொகுப்பாளர்
பணியகம்ஃபாக்ஸ் நியூஸ்
பிள்ளைகள்கிரினா (மகள்)
விருதுகள்சிறந்த செய்தி தொகுப்பாளர், "பாஸ்டன் பத்திரிகை"[1]

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

பெம்மாராஜு இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ராஜமுந்திரியில் பிறந்தார், மேலும் அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள சான் அன்டோனியோவில் வளர்ந்தார். டெக்சாஸில் உள்ள டிரினிட்டி பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் இளங்கலை கலைப் பட்டம் பெற்றார்.

தொழில் தொகு

 
1982 இல் டபிள்யூ.எம்.ஏ.ஆர். டி.வி.க்காக வேட்பாளர்களான கர்ட் ஆண்டர்சன் மற்றும் ஜார்ஜியா கோஸ்லீ ஆகியோரை பெம்மாராஜு நேர்காணல் செய்கிறார்

பெம்மாராஜுவின் ஆரம்பகால தொலைக்காட்சி வாழ்க்கையானது அவரது சொந்த மாநிலமான டெக்சாஸில் கே.இ.என்.எஸ். - டி.வி. மற்றும் சான் அன்டோனியோ எக்ஸ்பிரஸ்-நியூஸ் செய்தித்தாளில் தயாரிப்பாளராகவும் நிருபராகவும் டிரினிட்டி பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் போது தொடங்கியது. இவர் தனது கல்லூரி செய்தித்தாளின் ஆசிரியராகவும் பணியாற்றினார். அடுத்ததாக டல்லாஸில் உள்ள கே.டி.வி.டி.-11 க்கு, செய்தி தொகுப்பாளராகவும், நிருபராகவும், பின்னர் பால்டிமோரில் உள்ள டபிள்யூ.எம்.ஏ.ஆர். - டி.வி. க்கு சென்று எம்மி விருதை வென்றார். [3] [4] பால்டிமோரில் இருந்து, இவர் பாஸ்டனில் உள்ள மேலும் இரண்டு தொலைக்காட்சி நிறுவனங்களில் பணிபுரிந்தார்.

அக்டோபர் 1996 இல் நெட்வொர்க் தொடங்கப்பட்டபோது பெம்மாராஜு அசல் ஃபாக்ஸ் நியூஸ் குழுவின் ஒரு பகுதியாக இருந்தார். நெட்வொர்க்கில் பல்வேறு செய்தி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் மற்றும் பல சிறப்பு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இவர் தலாய் லாமாவிலிருந்து விண்வெளி வீரர் எட்வின் ஆல்ட்ரின் , ஜோயல் ஓஸ்டீன், கார்லி சிமன், டோனால்ட் டிரம்ப் , ஹூபி கோல்ட்பர்க்,, சேரா பேலின், டி.சி. - இன் செனட்டர்கள் மற்றும் காங்கிரஸின் தலைவர்கள் ஆகியோருடன் நேர்காணல் செய்துள்ளார். "பாஸ்டன்' பத்திரிகையின் சிறந்த தொகுப்பாளர்" என்று அழைக்கப்பட்டார். மேலும், இவர் தலாய் லாமாவின் உயர்மட்ட செய்தி தயாரிப்பாளர்களையும் பேட்டி கண்டார். உமா பெம்மாராஜு தனது அறிக்கை மற்றும் புலனாய்வு இதழுக்காக எண்ணற்ற எம்மி விருதுகளைப் பெற்றுள்ளார். இவரது தொழில் வாழ்க்கையில் பெற்ற மற்ற மரியாதைகள் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அறிக்கையிடலுக்கான டெக்சாஸ் ஏபி விருது, அமெரிக்காவின் பிக் சிஸ்டர்ஸ் ஆர்கனைசேஷன் வழங்கும் தி வுமன் ஆஃப் அச்சீவ்மென்ட் விருது மற்றும் வுமன் இன் கம்யூனிகேஷன்ஸ் வழங்கும் மேட்ரிக்ஸ் விருது போன்றவை ஆகும்.

டிரினிட்டி உடனான பரிமாற்றத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஒரு வருடம் சர்வதேச உறவுகளைப் படிக்கும் அமெரிக்கப் பல்கலைக்கழகத்திலும் இவர் பயின்றார். [5]

இறப்பு தொகு

உமா பெம்மாராஜு ஆகஸ்ட் 8, 2022 அன்று நியூயார்க்கில் உள்ள ஓசினிங்கில் உள்ள தனது வீட்டில் இறந்தார். இறப்புக்கான காரணம் வெளியிடப்படவில்லை.

சான்றுகள் தொகு

  1. "Best of Boston 1994 BEST TV, Anchor Team". bostonmagazine.com. Boston Magazine. பார்க்கப்பட்ட நாள் 20 December 2016.
  2. "One Ethnicity and Raised in Another: Uma Pemmaraju's Married Life with Millionaire Husband". LiveRampup.com. LiveRampup. பார்க்கப்பட்ட நாள் 20 December 2016.
  3. Robinson, John (11 February 1993). "The inside story on Uma Pemmaraju's latest career move". Boston Globe. https://culteducation.com/group/1243-yogaville/26547-yogaville3.html. 
  4. "The inside story on Uma Pemmaraju's latest career move". Boston Globe. 11 February 1993 இம் மூலத்தில் இருந்து 8 டிசம்பர் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171208231434/https://www.highbeam.com/doc/1P2-8214596.html. 
  5. "Uma Pemmaraju (biography)". Fox News. 13 January 2011. http://www.foxnews.com/on-air/personalities/uma-pemmaraju/bio/#s=m-q#ixzz1jSEq94V2. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உமா_பெம்மாராஜு&oldid=3706032" இலிருந்து மீள்விக்கப்பட்டது