சேரா பேலின்
சேரா ஹீத் பேலின் (அல்லது சாரா ஹீத் பேலின்) (Sarah Heath Palin, பி. பெப்ரவரி 11, 1964) அமெரிக்காவின் அரசியலாளர்,விமர்சகர் மற்றும் நூலாசிரியர் ஆவார். 2006முதல் 2009 வரை அலாஸ்கா ஆளுநராகப் பதவி வகித்தவர். அலாஸ்காவின் முதலாம் பெண் ஆளுநரும் அலாஸ்கா வரலாற்றில் மிக இளவயது ஆளுநரும் இவரே.
Sarah Palin சேரா பேலின் | |
---|---|
அலாஸ்கா ஆளுனர் சேரா பேலின் | |
அலாஸ்காவின் 11வது ஆளுனர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் டிசம்பர் 4, 2006 | |
முன்னையவர் | ஃபிராங்க் முர்க்கவுஸ்கி |
பின்னவர் | பதவியில் உள்ளார் |
அலாஸ்கா, வாசிலா நகரின் தலைவர் | |
பதவியில் 1996–2002 | |
பின்னவர் | டயான் கெலர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பெப்ரவரி 11, 1964 சான்ட்பாயின்ட், ஐடஹோ, அமெரிக்கா |
அரசியல் கட்சி | குடியரசுக் கட்சி |
துணைவர் | டாட் பேலின் (மணம் 1988) |
வாழிடம் | வாசிலா, அலாஸ்கா |
முன்னாள் கல்லூரி | ஐடஹோ பல்கலைக்கழகம் |
தொழில் | செய்தியாளர் / அரசியல்வாதி |
சமயம் | கிறிஸ்தவம்: கடவுளின் அவைகள்[1] |
2008, ஆகஸ்ட் 29ஆம் தேதி 2008 குடியரசுத் தலைவர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கெய்ன் பேலினை துணைத் தலைவர் வேட்பாளராகத் தேர்ந்தெடுத்தார். இதனால் இவர் குடியரசுக் கட்சி வரலாற்றில் முதலாம் பெண் துணைத் தலைவர் வேட்பாளர் ஆனார். அமெரிக்க வரலாற்றிலேயே ஜெரல்டீன் ஃபெராரோக்கு பிறகு ஒரு முக்கிய கட்சியைச் சேர்ந்த இரண்டாம் பெண் துணைத் தலைவர் வேட்பாளர் ஆவார்.
அலாஸ்காவின் வசில்லா நகர கவுன்சில் உறுப்பினராக 1992 - 1996 வரை இருந்தார், 1996 - 2002 வரை அந்நகரின் மேயராக இருந்தார்.
குறிப்புகளும் மேற்கோள்களும்
தொகு