உமா மகேசுவரர் கோயில், கோனேரிராஜபுரம்

உமா மகேசுவரர் கோயில்,தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கோனேரிராஜபுரத்தில் அமைந்துள்ளது. இது, சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயிலாகும். இங்கு, சிவபெருமான் உமா மகேசுவரர் என்ற பெயரில் இலிங்க வடிவத்தில் வணங்கப்படுகிறார். இவரது மனைவி பார்வதி மட்டுவார் குழலம்மையாக வணங்கப்படுகிறார். இந்த கோயில், ஏழாம் நூற்றாண்டின் தமிழ் சைவ சமயப் படைப்பான தேவாரம் எனும் நூலில் நாயன்மார்கள் என்று அழைக்கப்படும் தமிழ் துறவிகளால் பாடல் பெற்ற திருத்தலம்என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இது, முதலில் வலிமைமிக்க சோழர்களால் கட்டப்பட்டது. பின்னர் மதுரை நாயக்கர்கள் மற்றும் விஜயநகர ஆட்சியாளர்களால் புதுப்பிக்கப்பட்டது. கோவிலில் உள்ள பெரிய வளாகம் 8 ஆம் நூற்றாண்டில் சோழ மன்னர் முதலாம் ஆதித்த சோழன் மற்றும் அவரது கொள்ளு பேரன் முதலாம் ராஜ ராஜ சோழன் ஆகியோரால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.

இக்கோயிலில் பல்வேறு நேரங்களில் ஆறுமுறையாக தினசரி சடங்குகள் நடைபெறுகின்றன. காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை இந்தக் கோயில் பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்படுகிறது. மேலும், ஒரு வருடத்திற்கு கோயில் நாட்காட்டியில் உள்ளபடி, 12 ஆண்டு விழாக்கள் கொண்டாடப்படுகிறது. தமிழ் மாதமான சித்திரையில் (ஏப்ரல் - மே) சித்திரை திருவிழா பதினைந்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இது கோயில் புராணத்துடன் தொடர்புடைய பல்வேறு நிகழ்வுகளை சித்தரிக்கிறது. இக்கோயில் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலைய வாரியத்தால் பராமரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.

கோயில் தொகு

 
ககோனேரிராஜபுரம் - சிவகாமி மற்றும் நடராஜர்

இந்த கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அம்மன் பெயர் அங்கவள நாயகி ஆகும். இக்கோயிலைப் போற்றும் பாடல்கள் திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசர் ஆகியோரால் இயற்றப்பட்டுள்ளன. கோயில் வளாகத்தில் பிரம்மா மற்றும் விஷ்ணு சன்னதிகளும் உள்ளன. விநாயகர் மற்றும் முருகன் வைத்தியநாதசுவாமி சன்னதிகளும் உள்ளன.

வரலாறு தொகு

தற்போதுள்ள கோவில் கி.பி 10 ஆம் நூற்றாண்டில் முதலாம் ராஜ ராஜ சோழனின் மூதாதையான செம்பியன் மகாதேவியால் கட்டப்பட்டது.[1]

ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் தொகு

இந்த ஆலயத்தின் முன் மண்டபத்தில் காணப்படும் அழகிய ஓவியங்களும், பிரதான தெய்வத்தின் கருவறைக்கு வெளியே காணப்படும் சிறிய சிற்பங்களும் பிரபலமானதாக அறியப்படுகிறது.

வழிபாடு மற்றும் திருவிழாக்கள் தொகு

கோயில் பூசாரிகள் திருவிழாக் காலங்களிலும், தினமும் பூஜை (சடங்குகள்) செய்கிறார்கள். தமிழ்நாட்டின் மற்ற சிவன் கோயில்களைப் போலவே, அர்ச்சகர்களும் பிராமண துணைச் சாதியான சைவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். கோயில் சடங்குகள் ஒரு நாளைக்கு ஆறு முறை செய்யப்படுகின்றன; விடியற்காலை 5:30 மணிக்கு உஷத்களம்; காலை, 8:00 மணிக்கு காலசாந்தி; முற்பகல்10:00 மணிக்கு உச்சிக்காலம்; மாலை, 6:00 மணிக்கு சாயரக்ஷைஎனப்படும் மாலை நேர பூஜை; இரவு, 8:00 மணிக்கு இரண்டாம் காலம் பூஜை; இரவு 10:00 மணிக்கு அர்த்த ஜாமம் பூஜை போன்றவை நடைபெறுகிறது. பூஜை வேளையில் உமா மகேசுவரர் மற்றும் மட்டுவார் குழல் அம்மன் இருவருக்கும் அபிஷேகம் (புனித ஸ்நானம்), அலங்காரம் , நிவேதனம் (உணவு பிரசாதம்) மற்றும் தீப ஆராதனை (விளக்குகளை அசைத்தல்) ஆகிய நான்கு படிகளை உள்ளடக்கிய சடங்குகள் முறையாக செய்யப்படுகிறது. பூசாரிகளால் வேதங்களில் உள்ள கருத்துக்கள் வாசிக்கப்படுகின்றன. மேலும், நாகஸ்வரம் (குழாய் வாத்தியம்) , தவில் (தாள வாத்தியம்), பிரதான கருவறைக்கு முன்பாக உள்ள கோயில் மண்டபத்தில் வழிபாடு செய்பவர்களுக்கு முன்பாக இசையுடன் கூடிய வழிபாடு நடைபெறுகிறது. சோமவாரம் என்கிற திங்கட்கிழமை சிறப்பு வழிபாடு போன்ற வாராந்திர சடங்குகள் உண்டு. மேலும், பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை வருகின்ற 'பிரதோஷம்' அமாவாசை , கிருத்திகை, பௌர்ணமி மற்றும் சதுர்த்தி போன்ற நாட்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. இந்த கோயிலிலுள்ள நடராஜப் பெருமானுக்கு வருடத்தில் 6 முறை அபிஷேகம் செய்யப்படுகிறது. மாசி, ஆவணி, புரட்டாசி ஆகிய மாதங்களில் வருகின்ற வளர்பிறை சதுர்த்தசி திதிகளிலும், சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், மார்கழி திருவாதிரை நட்சத்திர நாட்களிலும் [2] சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. இக்கோயில் காவிரி ஆற்றங்கரையில் கட்டப்பட்ட கோயில்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. "Of historic significance". The Hindu. 26 June 2015. 
  2. "Uma Maheswarar Temple". தினமலர். பார்க்கப்பட்ட நாள் 28 June 2015.