உம்பலப்பாடி

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கிராமம்

உம்பலப்பாடி தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். இவ்வூரின் தெற்கு எல்லையாகக் கொங்கன் வாய்க்காலும் வடக்கு எல்லையாக மண்ணியாறும் அமைந்துள்ளன. மேற்கில் சருக்கையும் கிழக்கில் நக்கம்பாடியும் எல்லையாக உள்ளன. நூற்று எட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்கவித்தலம் இவ்வூரில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

உம்பலப்பாடி
ஊர்
நாடுஇந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தஞ்சாவூர்
வட்டம்பாபநாசம்
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்4,530
மொழிகள்
 • அதிகாரபூர்வம்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)

இவ்வூர் பழமையும் சிறப்பும் கொண்ட ஊராகும். இந்த ஊரின் பழமைக்குச் சான்றாக இங்குள்ள சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலின் மூலவர் நிலாவணை மகாதேவர், இறைவி ஆனந்தவல்லி. இங்குள்ள கல்வெட்டு மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தைச் சேர்ந்தது எனக் கல்வெட்டு ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன் குறிப்பிட்டுள்ளார்.[சான்று தேவை] இக்கல்வெட்டில் இவ்வூரின் பெயர் உம்பலப்பாடி என்று பொறிக்கப்பட்டுள்ளது. மக்கள் வழக்கிலும் அரசு ஆவணங்களிலும் உம்பளப்பாடி என்றும் இவ்வூர் அழைக்கப்படுகிறது.

மக்கள்

தொகு

உம்பலப்பாடியில் 2001-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை- 4530 ஆண்கள்- 2291 மற்றும் பெண்கள்-2231 . பாலின விகிதம் 970 ஆக உள்ளது.. கல்வியறிவு விகிதம் 73.69 உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  • "Primary Census Abstract - Census 2001". Directorate of Census Operations-Tamil Nadu. Archived from the original on 2009-06-07. பார்க்கப்பட்ட நாள் 2017-07-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உம்பலப்பாடி&oldid=3545090" இலிருந்து மீள்விக்கப்பட்டது