உயரே
உயரே ( Uyare ) என்பது 2019 ஆம் ஆண்டு வெளியான இந்திய மலையாள மொழி குடும்ப நாடகத் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படம் மனு அசோகன் இயக்கி பாபி & சஞ்சய் எழுதி, மூன்று சகோதரிகளான ஷெனுகா, ஷெக்னா மற்றும் ஷெர்காவா ஆகியோரால் தயாரிக்கப்பட்டது. [1] இந்த படத்தில் சித்திக், அனார்கலி மரிக்கார் மற்றும் பிரதாப் போத்தன் ஆகியோருடன் பார்வதி மேனன் திருவொத்து, ஆசிப் அலி மற்றும் டோவினோ தாமசு ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இந்த கதை விமானப் பயணி பற்றி படிக்கும் பல்லவி ரவீந்திரன் (பார்வதி) பற்றியதாகும். இது ஒரு அமிலத் தாக்குதலில் இருந்து உயிர் பிழைத்தவரது வாழ்க்கையில் ஏற்பட்ட விளைவுகளைப் பற்றியதாகும்.[2] நவம்பர் 2018 இல் தொடங்கிய படப்பிடிப்பு ஜனவரி 2019 இறுதிக்குள் நிறைவடைந்தது.
உயரே இந்தியாவில் 26 ஏப்ரல் 2019 அன்று வெளியிடப்பட்டது. இது பரவலான நேர்மறை விமர்சனங்களையும், பாராட்டுகளையும் பெற்றது. மலையாளத்தில் அந்த ஆண்டில் வணிக ரீதியாக வெற்றி பெற்ற படங்களில் இதுவும் ஒன்றாக இருந்தது. 2019 நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெற்ற இந்தியாவின் 50 வது சர்வதேச திரைப்பட விழாவில் (ஐஎஃப்எஃப்ஐ) இந்தத் திரைப்படத்தின் இயக்குநர் சிறந்த இயக்குநருக்காக பரிந்துரை செய்யப்பட்டார். இது தி ஹிந்துவின் தசாப்தத்தின் முதல் 25 மலையாளப் படங்களில் சேர்க்கப்பட்டது மற்றும் புதிய அலை இயக்கத்தினை வரையறுக்கும் திரைப்படங்களில் ஒன்றாக பரவலாகக் கருதப்படுகிறது. [3]
கதை
தொகுபல்லவி ரவீந்திரனின் ( பார்வதி திருவொத்து ) லட்சியம் ஒரு விமானியாக வேண்டும் என்பதாகும். அவர் கோவிந்த் பாலகிருஷ்ணனை விரும்புகிறார். அவருக்கு மும்பையில் உள்ள ஒரு விமானபயிற்சி மையத்தில் சேர்க்கை கிடைக்கிறது. அந்தப் பயிற்சி மையத்தின் கால அட்டவணையினால் கோவிந்துடன் நேரம் செலவழிக்க இயலாமல் போகிறது. அதனால், இருவருக்குள்ளும் மோதல் ஏற்படுகிறது. அவளுடைய வகுப்புகளைக் கைவிடும்படி அவர் அழுத்தம் கொடுக்கிறார். அவளுடைய நண்பர்களுக்கு முன்னால் அவமானப்படுத்திய பிறகு, அவள் அவனை கோபமாக, தன் வாழ்க்கைக்கு நீ வேண்டாம் என்றும் பிரியும்படியும் கூறுகிறார். மறுநாள் கோவிந்த் காலையில் அந்தப் பெண் மீது அமிலத் தாக்குதலில் ஈடுபடுகிறார். காயங்களால் அவளுடைய கண்பார்வை குறைந்துவிட்டதால், அவளுடைய விமான உரிமம் ரத்து செய்யப்பட்டது.
கோவிந்த் கைது செய்யப்படுகிறார், ஆனால் ஆதாரம் இல்லாததால் வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. பல்லவி வீடு திரும்புகிறார். பயிற்சி மையத்தில் அவளுடைய தோழி தார்மீக ஆதரவிற்காக விமானத்தில் தன்னுடன் வரும்படி அவளிடம் கேட்கிறாள். அவர் விமானத்தின் உரிமையாளரின் மகன் விஷால் ராஜசேகரனை (டோவினோ தாமஸ் ) விமானத்தில் சந்திக்கிறார். பல்லவியின் சிதைந்த முகம் தன் குழந்தையை பயமுறுத்துவதாக ஒரு தாய் புகார் செய்யததால் அவள் வேறு இருக்கைக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. விஷால், அவளிடம் உங்களுக்கு என்ன விருப்பமோ அதனை நீங்கள் அடைய முடியும் என நம்பிக்கை தரும்படி கூறுகிறார். ஆனால் அவள் அதனை ஏற்க மறுக்கிறாள்.
விமானப் பயணத்திற்குப் பிறகு, விஷால் சவாலை ஏற்க முடிவு செய்து அவளை குழுவில் சேர்க்க முன்வருகிறார். அவரது தந்தை இந்த யோசனையை நிராகரித்தார், ஆனால் விஷால் அமிலத் தாக்குதலில் இருந்து தப்பியவரை பத்திரிக்கையாளர் சந்திப்பில் பணியமர்த்த முடிவு செய்வதாக கூறியதால், தனது தந்தைக்கு பின்வாங்க வழியில்லாமல் போகிறது.
சான்றுகள்
தொகு- ↑ "Uyare trailer: The sky's the limit for Parvathy". The Indian Express. 17 April 2019.
- ↑ "In Malayalam film 'Uyare', an acid attack survivor faces up to tragedy with courage". scroll.in.
- ↑ "The 25 best Malayalam films of the decade". The Hindu. 19 December 2019. பார்க்கப்பட்ட நாள் 29 May 2020.