உயர்கல்வித் துறை (தமிழ்நாடு)

உயர்கல்வித் துறை (தமிழ்நாடு) (Department of Higher Education (Tamil Nadu)) என்பது என்பது தமிழ்நாடு அரசின் ஒரு துறை ஆகும். இத்துறை உயர்கல்வியை மாநிலம் முழுவதும் பரவலாக்கப்படுவதற்காக தொடங்கப்பட்டுள்ளது.

உயர்கல்வித் துறை (தமிழ்நாடு)
துறை மேலோட்டம்
அமைப்பு1811
ஆட்சி எல்லைதமிழ்நாடு
தலைமையகம்சென்னை
அமைச்சர்
 • [, உயர் கல்வித்துறை அமைச்சர்
அமைப்பு தலைமைகள்
 • எ. கார்த்திக், இ.ஆ.ப., அரசுச் செயலர்
 • ஆர். லில்லி, இ.ஆ.ப., இணைச் செயலர்
மூல அமைப்புதமிழ்நாடு அரசு
வலைத்தளம்Higher Education Department

வரலாறு

தொகு

தமிழ்நாட்டில் 1957ஆம் ஆண்டு அக்டோபர் 14ம் நாள் தொழில்நுட்பக் கல்வித்துறை தொடங்கப்பட்டது. 1997ஆம் ஆண்டு கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை எனத் தனித் துறைகளாகப் பிரிக்கப்பட்டது.[1]

குறிக்கோள்கள்

தொகு

உயர்கல்வித் துறையானது சமூகத்தின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு கொள்கைகள், சட்டங்கள், விதிமுறைகள் மற்றும் பலவேறு திட்டங்களை இயற்றி நடைமுறைப்படுத்துவதை அடிப்படை நோக்கமாக கொண்டுள்ளது.

 • உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி வழங்குதல்
 • ஏழை, எளிய குடும்பத்திலுள்ள இளைஞர்களுக்கு உயர் கல்வியை வழங்குதல்
 • உயர்கல்வியின் சமவாய்ப்பினை வழங்குதல்
 • 2020-க்குள் உயர்கல்வி அடைவு நிலையை 25 விழுக்காட்டிற்கு உயர்த்துதல்
 • கல்லூரிகளில் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்
 • பாடத்திட்டத்தை வளப்படுத்தி மேம்பாடு அடைய செய்தல்
 • உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வியின் தரத்தை மேம்படுத்துதல்
 • கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்களிடையே உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வியின் அவசியத்தை வலியுறுத்துதல்
 • மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்த்து அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி நடவடிக்கைகளை

ஊக்கப்படுத்துதல்.[2]

துணை - துறைகள்

தொகு
 • கல்லூரிக் கல்வி இயக்குநரகம் - கல்லூரிக் கல்வி இயக்குநரின் தலைமையில் செயல்படுகிறது.
 • தொழில்நுட்பக்கல்வி இயக்குநரகம்
 • ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித்துறை[3]

செயல்கள்/அமைப்புகள்

தொகு
 • தமிழ்நாடு மாநில உயர்க்கல்வி மன்றம்
 • தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம்
 • தமிழ்நாடு மாநில தொழில்நுட்பக் கழகம்
 • தமிழ்நாடு மாநில உருது அகாடமி
 • தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம்
 • அறிவியல் நகரம், சென்னை.[4]

உயர்கல்வித்துறை அமைச்சர்கள்

தொகு
பெயர் படம் அலுவல் காலம்
செ. அரங்கநாயகம் 30 சூன் 1977 17 பிப்ரவரி 1980
செ. அரங்கநாயகம் 9 சூன் 1980 9 பிப்ரவரி 1985
சி. பொன்னையன் 10 பிப்ரவரி 1985 30 சனவரி 1988
க. அன்பழகம்   27 சனவரி 1989 30 சனவரி 1991
இராம. வீரப்பன் 24 சூன் 1991 1995
க. அன்பழகன்   13 மே 1996 13 மே 2001
மு. தம்பித்துரை   14 மே 2001 1 மார்ச்சு 2002
செ. வெ. சண்முகம் 2 மார்ச்சு 2002 12 மே 2006
க. பொன்முடி 13 மே 2006 15 மே 2011
பெ. பழனியப்பன் 16 மே 2011 22 மே 2016
கே. பி. அன்பழகன் 23 மே 2016 6 மே 2021
க. பொன்முடி 7 மே 2021 2023

சான்றுகள்

தொகு

இணைப்புகள்

தொகு