உயர்-புரத உணவு
உயர்-புரத உணவு (High-protein diet) என்பது உடல் எடை பராமரிப்பிற்குத் தேவையான ஆற்றல் தினசரி உணவில் 20 சதவிகிதம் அல்லது அதற்கும் அதிகமான புரதத்திலிருந்து கிடைக்குமானால் அந்த உணவை உயர்-புரத உணவு எனக் கூறலாம்.[1] பல உயர் புரத உணவுகளில் நிறைவுற்ற கொழுப்பு அதிகமாக இருக்கும். கார்போவைதரேட்டு உட்கொள்ளலை உயர் புரத உணவு கட்டுப்படுத்துகிறது. [1]
மாட்டிறைச்சி, கோழி இறைச்சி, பன்றி இறைச்சி, முட்டை மற்றும் சோயா போன்றவை உயர் புரத உணவுக்கு சில் எடுத்துக்காட்டுகளாகும்.[2] கொழுப்பு இழப்பு மற்றும் தசைகளை கட்டியெழுப்புதல் போன்ற தேவையான சூழல்களில் உயர் புரத உணவுகள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. [3] [4] பேலியோ, அட்கின்சு போன்ற உணவு முறைகளில் எடையைக் குறைப்பதற்காக அதிக அளவு மீன், இறைச்சி, முட்டை, கொட்டை வகைகள், வெண்ணெய் ஆகியவை பரிந்துரைக்கப்படுகின்றன. இத்தகைய உணவுகள் கார்போவைதரேட்டு, இன்சுலின் எதிர்ப்பு மற்றும் கீட்டோசிசு பற்றிய தவறான எண்ணங்களை ஊக்குவிக்கின்றன. [5]
உடல்நல பாதிப்புகள்
தொகுபல்வேறு உயர் புரத உணவுகளின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு குறித்து ஆராய்ச்சியாளர்களிடையே தொடர்ந்து சர்ச்சை நிகழ்ந்தபடி உள்ளது.. இதனால் நினைத்த அளவுக்கு புரதம் சாப்பிடலாமா, அவ்வாறு புரதம் சாப்பிடுவது பாதுகாப்பானதா? அதிக புரதம் சாப்பிட்டால் என்னவாகும் போன்ற பல கேள்விகளும் எழுகின்றன.
செயல்திறன்
தொகுஅதிகரித்த புரத நுகர்வு தசை வளர்ச்சியை அதிகரிப்பதற்கும், உடற்பயிற்சிக்குப் பிந்தைய தசை மீட்பு மற்றும் மேம்படுத்தலுக்கும், ஆற்றல் மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறை காலங்களில் தசை இழப்பைக் குறைப்பதற்கும் உயர் புரத உணவின் தேவை பரிந்துரைக்கப்படுகிறது.[3] [6] அதிக புரதம் கொண்ட குறைந்த கலோரி உணவுகள் பெரும்பாலும் உடல் பருமனுக்கு சிகிச்சையளிப்பதில் பயன்படுத்தப்படுகின்றன. 2020 ஆம் ஆண்டின் மதிப்பாய்வில், உயர் புரத உணவு, நீரிழிவு நோயாளிகளில் இரத்த அழுத்தம் மற்றும் கிளைசெமிக் கட்டுப்பாட்டை கணிசமாக மேம்படுத்தாது என்று கண்டறியப்பட்டது. [7]
பாதுகாப்பு
தொகு2017 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒரு மதிப்பாய்வு, அதிக புரதச்சத்து நிறைந்த உணவு, சிறுநீரகத்தைப் பாதித்து வாழ்நாள் முழுவதும் ஆபத்தில் பங்களிக்கக்கூடும் என்று சுட்டிக்காட்டியது. நாள்பட்ட சிறுநீரக நோய் புதிதாகவும் தொடங்கும் அபாயமும் உள்ளது. [8] [9] அதிக அளவு நிறைவுற்ற கொழுப்பைக் கொண்ட உயர் புரத உணவுகள் கரோனரி தமனி நோய் மற்றும் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கின்றன. [5]
அட்கின்சு உணவு மற்றும் புரோட்டீன் பவர் போன்ற சில உயர் புரத உணவுகளுக்கு எதிராக அமெரிக்க இதய சங்கத்தின் ஊட்டச்சத்து அமைப்பு பரிந்துரை செய்துள்ளது. [5] இந்த உணவுமுறைகளின் ஆரோக்கிய அபாயங்கள் மற்றும் அவற்றின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பை ஆதரிக்க நீண்ட கால அறிவியல் ஆய்வுகள் எதுவும் இல்லை என்பதை குழு குறிப்பிட்டது. [5]
பின்வருபவை உயர்-புரத பற்று உணவுகளின் எடுத்துக்காட்டுகள்: [5] [10]
- அட்கின்சு உணவு
- புரோட்டின் பவர்
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "High-protein diet". The Gale Encyclopedia of Diets: A Guide to Health and Nutrition. Gale. 2008. pp. 524–526. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4144-2991-5.
- ↑ "High-Protein Diets: Do They Work?". WebMD. 8 October 2018. பார்க்கப்பட்ட நாள் 18 November 2018.
- ↑ 3.0 3.1 "A systematic review, meta-analysis and meta-regression of the effect of protein supplementation on resistance training-induced gains in muscle mass and strength in healthy adults". British Journal of Sports Medicine 52 (6): 376–384. March 2018. doi:10.1136/bjsports-2017-097608. பப்மெட்:28698222.
- ↑ "Clinical Evidence and Mechanisms of High-Protein Diet-Induced Weight Loss". Journal of Obesity & Metabolic Syndrome 29 (3): 166–173. September 2020. doi:10.7570/jomes20028. பப்மெட்:32699189.
- ↑ 5.0 5.1 5.2 5.3 5.4 "Dietary protein and weight reduction: a statement for healthcare professionals from the Nutrition Committee of the Council on Nutrition, Physical Activity, and Metabolism of the American Heart Association". Circulation 104 (15): 1869–1874. October 2001. doi:10.1161/hc4001.096152. பப்மெட்:11591629.
- ↑ "Recent Advances in the Characterization of Skeletal Muscle and Whole-Body Protein Responses to Dietary Protein and Exercise during Negative Energy Balance". Advances in Nutrition 10 (1): 70–79. January 2019. doi:10.1093/advances/nmy087. பப்மெட்:30596808.
- ↑ "Effects of high-protein diet on glycemic control, insulin resistance and blood pressure in type 2 diabetes: A systematic review and meta-analysis of randomized controlled trials". Clinical Nutrition 39 (6): 1724–1734. June 2020. doi:10.1016/j.clnu.2019.08.008. பப்மெட்:31466731.
- ↑ "Nutritional Management of Chronic Kidney Disease". The New England Journal of Medicine 377 (18): 1765–1776. November 2017. doi:10.1056/NEJMra1700312. பப்மெட்:29091561. https://escholarship.org/uc/item/02m5c6qr.
- ↑ "Long-Term Effects of High-Protein Diets on Renal Function". Annual Review of Nutrition 37 (1): 347–369. August 2017. doi:10.1146/annurev-nutr-071714-034426. பப்மெட்:28637384.
- ↑ "Fad diets and their effect on urinary stone formation". Translational Andrology and Urology 3 (3): 303–312. September 2014. doi:10.3978/j.issn.2223-4683.2014.06.01. பப்மெட்:26816783.