உயிர் உரம்
உயிர் உரம் (Biofertilizer) என்பது உயிருள்ள நுண்ணுயிரிகளை கொண்ட மண் ஊட்டப்பொருள் ஆகும், இதை மண், விதை மற்றும் தாவரங்களில் பயன்படுத்தினால், மண்ணின் வேர் உயிர்கோளம் (ரைஸோஸ்பியர்) அல்லது தாவரத்தின் உட்பகுதிகளில் குடியேற்றம் செய்ய்யும். மேலும் இவ்வுயிருரம் தாவரங்களுக்கு முதன்மை ஊட்டச்சத்தை அளிக்கிறது (அல்லது), ஊட்டச்சத்து கிடைக்கும் தன்மையை அதிகரித்து வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.[1]
உயிர் உரப் பண்புகள்
தொகுஉயிர் உரங்கள் தழைச்சத்தை (நைட்ரஜன்) வேர்முடிச்சில் பொருத்துதல், மணிச் சத்தைக் கரைத்தல் (பாஸ்பரஸ் solubilizing), ஆகிய இயற்கை முறைகள் மூலம் சத்துக்களைச் சேர்க்கும், மற்றும் வளர்ச்சி ஊக்குவிக்கும் பொருட்களை உருவாக்கி அதன் மூலம் தாவர வளர்ச்சியைத் தூண்டும். இரசாயன உரங்கள் பயன்பாட்டை உயிர் உரங்கள் குறைக்குமென்பது உறுதி. உயிர் உரங்களிலுள்ள நுண்ணுயிர்கள் மண் இயற்கை ஊட்டச்சத்து சுழற்சியை மீட்டு மற்றும் மண் கரிமபொருட்களை அதிகரிக்கும்.
உயிர் உரங்கள் பயன்பாடு மூலம், செடிகள் ஆரோக்கியமாக வளரும், அதே சமயம் பேண்தகைமை மற்றும் மண் சுகாதாரம் அதிகரிக்கும். அவைகளுக்கு பற்பல உபயோகங்கள் இருப்பதால், இது போன்ற நன்மை விளைவிக்கும் பாக்டீரியாக்களுக்கு தகுந்த அறிவியல் பெயர் "தாவர வேர் வளர்ச்சி ஊக்குவிக்கும் பாக்டீரியாக்கள் (அ) ரைசோபாக்டீரியா (rhizobacteria) ஆகும். எனவே, அவை மண் வளத்தை மெருகேற்றவும் மற்றும் நுண்ணுயிர் மற்றும் அவற்றின் துணைப்பொருட்களினால் கரிம சத்து அளிப்பதன் மூலம் தாவர ஊட்டச்சத்து தேவைகளை நிறைவேற்ற மிகவும் சாதகமானதாக இருக்கின்றன. ஆகவே, உயிர் உரங்கள் மண்ணை கெடுக்கும் எந்த இரசாயன பொருட்களையும் கொண்டிருக்காது.
உயிர் உரங்கள் சூழல் நட்பு மிக்க கரிம விவசாய உள்ளீட்டை வழங்கும் மற்றும் ரசாயன உரம்களை விட குறைந்த செலவாகும். உயிர் உரங்களான ரைசோபியம், அஸோடோபாக்டர், அசோஸ்பைரில்லம் மற்றும் நீல பச்சை பாசி (நீபபா) ஆகியவை பல காலமாக உபயொகத்தில் உள்ளன. ரைசோபியம் இனோக்குலண்ட் முடிச்சு பயிர்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. அஸோடோபாக்டர் கோதுமை, சோளம், கடுகு, பருத்தி, உருளைக்கிழங்கு மற்றும் இதர காய்கறி பயிர்களுக்கு பயன்படுத்தலாம். அசோஸ்பைரில்லம் inoculations பெரும்பாலும் சோளம், கம்பு, சோளம், கரும்பு, கோதுமை ஆகியவற்றிற்கு பரிந்துரைக்கப்படுகிறது.
பொது நீலநுண்ணுயிர் பேரினமாகிய, நாஸ்டாக் (Nostoc), அனபீனா (Anabaena), டோலிபொத்ரிக்ஸ் (Tolypothrix), அலொசிரியாவை (Aulosira) சேர்ந்த நீலப் பச்சைப் பாசி, வளிமண்டல நைட்ரஜனை பொறுத்தமட்டும் மேட்டுநில மற்றும் தாழ்வுநில சூழ்நிலையில் வளர்ந்த நெற்பயிர் சாகுபடியை ஊட்டம் செய்யப்பயன்படுகின்றன. அனபீனா (Anabaena) தண்ணீர் பன்னம் அசோலாவுடன் இணைந்து 60 கிலோ / ஹெக்டர் / பருவம் வரை நைட்ரஜன் அளிப்பதுடன் மண்ணிற்கு உயிர்ம பொருட்களை மிகுதிபடுத்துகிறது .[2] [1]
பான்சியா அக்லொமெரான்ஸ் (Pantoea agglomerans) திரிபு P5 அல்லது சூடோமோனாஸ் புட்டிடா திரிபு P13[3] என அழைக்கப்படும் பாஸ்பேட்டை கரைக்கும் பாக்டீரியாக்களால் கரிம மற்றும் கனிம பாஸ்பேட் ஆதாரங்களில் இருந்து கரையாத பாஸ்பேட்டை கரைக்க முடியும்.[4]. உண்மையில், Fe, Al, Ca அவைகளின் தாதுக்கள் அல்லது கரிம அமிலங்கள், மண்ணில் கிடைக்கும் பாஸ்பேட்டை முடக்கி அதன் விகிதத்தை (பிஎன்) தாவரங்களின் தேவையின் கீழே குறைத்து விடுகின்றன. கூடுதலாக, இரசாயன பிஎண் உரங்களும் முடக்கபடுகின்றன. இதனால் தாவரங்கள் 20%க்கு குறைவான உரத்தையே உறிஞ்சிக்கொள்கின்றன. எனவே, பிஎன் குறைபாட்டின் காரணமாகவும், ரசாயன பாஸ்பரஸ் பயன்படுத்துவதினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பின் காரணமாகவும் புது விதமான பாஸ்பேட் உரங்களை உலகம் நாடுகிறது. இவைகளை பாஸ்பேட்களைக் கரைக்கும் பாக்டீரியா (அ) பாஸ்பேட் உயிர் உரம் என்றும் அழைக்கிறோம்.[சான்று தேவை]
நன்மைகள்
தொகுஉயிர் உரம் பின்வரும் நன்மைகளை வழங்குகிறது:
- உயிர் உரம் ஒரு வாழும் பொருள் என்பதால் அவை தாவர வேர்களுடன் இனிய வழியில் இணைய முடியும். ஈடுபட்டிருக்கும் நுண்ணுயிரிகள் உடனடியாகவும் பாதுகாப்பாகவும் சிக்கலான கரிம பொருட்களை எளிய கலவைகளாக மாற்றிவிடும். இதனால் தாவரங்கள் இவற்றை எளிதில் எடுத்து கொள்ளும். நுண்ணுயிரி செயல்பாட்டின் கால அவகாசம் மிக அதிகம், இதனால் மண் வளம் அதிகரிக்கும். அது மண்ணின் இயற்கை வாழ்விடத்தை பராமரிக்கிறது. இது பயிர் விளைவை 20-30%மாக அதிகரித்து. ரசாயன நைட்ரஜன், மற்றும் பாஸ்பரஸ்ஸை, 25% குறைத்து, தாவர வளர்ச்சியை தூண்டுகிறது. இதனால் வறட்சி மற்றும் சில மண் மூலம் பரவும் நோய்களுக்கு எதிரான பாதுகாப்பை வழங்கக்கூடும்.
- உயிர் உரங்கள் ரசாயன உரங்களைக் காட்டிலும் விலை குறைந்தவை. இவைகளின் உற்பத்தி விலை, குறிப்பாக நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ்ஸின் பயன்பாட்டை குறித்து, குறைவாக இருக்கின்றது.
உயிரி உரங்களின் சில முக்கிய பிரிவுகள்
- அசோலா-அனபீனா கூட்டுயிரி : அசோலா ஒரு உலக பரவல் கொண்ட சிறிய, யூகார்யோடிக், நீர்வாழ் பன்னம் ஆகும். புரோகாரியோடிக் நீல பச்சை பாசி அனபீனா, அசோலா ஓர் உருவாக்கியாக (symbiont) ஆக அதன் இலைகளில் வாழும். அசோலா நைட்ரஜனின் மாற்று மூலாதாரமாக உள்ளது. இந்த பிரிவு, ரசாயன உரங்களுக்கு ஒரு மாற்று வழியாக இருக்கும் ஆற்றல் உள்ளதனால், உலக கவனம் இதன் மீது திரும்பியுள்ளது.
- ரைசோபியம்: பயிர் வகைகள் கொண்ட ரைசோபியம் செய்யும் கூட்டுயிரி நைட்ரஜன் நிலைப்படுத்துதல் மொத்த நைட்ரஜன் நிலைப்படுத்துதலுக்கு கணிசமாக பங்களிக்கிறது. நைட்ரஜன் அளவை உறுதி செய்ய ரைசோபியத்தை ஊட்டமிடல் ஒரு நன்கு அறியப்பட்ட வேளாண் நடைமுறையாகும்.
பயன்படுத்தும் விதம்
தொகுசாதாரணமாக 20 கிலோ விதைகளுக்கு 200 கிராம் ரைசோபியத்தை சோற்றுக்கஞ்சியுடன் கலந்து விதை நேர்த்தி செய்து ஒரு நாள் கழித்து விதைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் அதிக மகசூல் கிடைக்கிறது. மேலும் 3-ல் ஒரு பங்கு உரத் தேவையும் குறைகிறது.
- அசோஸ்பைரில்லம்: அசோஸ்பைரில்லம் என்ற நுண்ணுயிர் பாக்டீரியா நெல், மக்காச்சோளம், கம்பு, பருத்தி, கரும்பு உள்ளிட்ட பயிர்களின் வேர்ப்பகுதிகளில் வளர்ந்து காற்றில் உள்ள தழைச்சத்தை நிலைநிறுத்துகிறது. இதை பயன்படுத்தும்போது ஏக்கருக்கு 10 கிலோ வரை தழைச்சத்து (22 கிலோ யூரியா அளவு) சேர்க்கப்படுகிறது. மேலும் ஜிப்பர்லிக் அமிலம், இன்டோல் அசிட்டிக் அமிலம் போன்ற பயிர் வளர்ச்சி ஊக்கிகளையும் அசோஸ்பைரில்லம் உற்பத்தி செய்வதால் பயிர் நன்கு வளர்ந்து விளைச்சல் அதிகமாகிறது. இதை விதை நேர்த்தி செய்தும், நாற்றின் வேர்ப்பாகத்தில் நனைத்தும் மக்கிய தொழு உரத்துடன் கலந்து மண்ணில் இட்டும் பல வகைகளில் பயன்படுத்தலாம்.
- பாஸ்போ பாக்டீரியா: இது மண்ணில் உள்ள மணிச் சத்தை கரைத்து பயிர்களுக்கு வழங்குகிறது. சிலவகை அமிலங்களை இந்த பாக்டீரியா உற்பத்தி செய்து மண்ணிலுள்ள கரையாத பாஸ்பேட்டை கரைத்து செடிகளுக்கு கொடுக்கிறது. இதை பயன்படுத்துவதால் 20 சதவீதம் மணிச்சத்து தரும் ரசாயன உர பயன்பாட்டை குறைக்கலாம். வேர்கள் செழித்து வளரவும், திசுக்கள் வளம் பெற்று கதிர்கள் செழித்து வளரவும், தழைச்சத்தை அதிக அளவு ஈர்க்கவும் பாஸ்போ பாக்டீரியா பயன்படுகிறது.
- அசோலா: அசோலா ஒரு பெரணி வகைத் தாவரம் ஆகும். இதில் உள்ள அனபீனா எனப்படும் நுண்ணுயிர், காற்றில் உள்ள தழைச் சத்தை நிலைப்படுத்தி உரமாக அளிக்கிறது. இந்த அசோலாவை நாற்றங்கால்களில் இட்டு உற்பத்தி செய்து ஒவ்வொரு வாரமும் அறுவடை செய்யலாம். ஏக்கருக்கு 100 முதல் 250 கிலோ அசோலாவை நெல் நடவு வயலில் பரப்பி விட்டு ஒரு வாரம் தண்ணீர் தேக்கிவைத்து, பின் சேற்றில் மிதித்து விட வேண்டும். இதில் 6 சதவீதம் தழைச்சத்து உள்ளது. வேகமான வளர்ச்சியும், அதிக தழைச்சத்தும் இதன் சிறப்பம்சங்களாகும். ஒரு வாரத்தில் 10 மடங்கு இது பெருகுகிறது. இதன் மூலம் 25 சதவீதம் ரசாயன தழைச்சத்து உரங்களை குறைக்கலாம்.
- நீலப்பச்சை பாசி: இதில் உள்ள நைட்ரஜேனஸ் என்ற பொருள் வெளியில் உள்ள நைட்ரஜன் வாயுவை தழைச்சத்து உரமாக ஆக்குகிறது. இந்த வகை பாசியை உழவர்கள் தமது நிலங்களில் நாற்றாங்கால் அமைத்து, விதைத்து 15 நாள்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யலாம்.
தொடர்ந்து 4 பருவங்களுக்கு இந்த பாசியை வயலில் இட்டால் தானாக வளர்ந்து பெருகத் தொடங்கி விடும். இதன் மூலம் 25 சதவீதம் ரசாயன உரத்தை சேமிக்கலாம். அதில் தழைச்சத்து மட்டுமின்றி அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் போன்றவையும் உள்ளன. மேலும் மணிச் சத்தை கரையச் செய்து நெற்பயிருக்கு அளிக்கிறது.
உயிர் உரங்கள் விநியோகம்: உழவர்கள் இந்த உயிர் உரங்களை பரிந்துரைகளின்படி பயன்படுத்தினால் தழை, மணி போன்ற சத்துகள் கொண்ட ரசாயன உரங்களின் தேவையை குறைத்து அதிக மகசூல் பெறலாம்.
கிடைக்குமிடம்
தொகுஅனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இந்த வகை உயிர் உரங்கள் அந்தந்த சாகுபடி பயிர்களின் தேவைக்கேற்ப இருப்பு வைத்து விநியோகிக்கப்படுகிறது. சிலவகை உயிர் உரங்களுக்கு 50 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. இதைத்தவிர பெங்களூரில் உள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின் கீழ் இயங்கும் என்.பி.ஏ.எம். யில் பெறலாம்.
காண்க
தொகுEndophyte [1] Microbial inoculanthttps [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Vessey, J.k. 2003, Plant growth promoting rhizobacteria as bio-fertilizers. Plant Soil 255, 571-586
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2011-07-18. பார்க்கப்பட்ட நாள் 2013-10-22.
- ↑ http://www.springerlink.com/content/v2315pl5736061g7/fulltext.pdf[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ http://www.springerlink.com/content/q327j346t7233222/fulltext.pdf[தொடர்பிழந்த இணைப்பு]
வெளி இணைப்புகள்
தொகு- http://www.dinamani.com/agriculture/2014/08/21/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A/article2389709.ece
- greenbiotech-co.com
- Foliar BioFertilizer Recipe
- அங்கக வேளாண்மை உயிர் உர தொழில்நுட்பம்