உரிக்கார நாயக்கர்

எனப்படுவோர் இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா பகுதிகளில், வ

உரிக்கார நாயக்கர் (Urikkara Naicker) எனப்படுவோர் இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா பகுதிகளில், வாழுகின்ற தெலுங்கு பேசும் இனக்குழுவினர் ஆவார்[1].

உரிக்கார நாயக்கர்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா
மொழி(கள்)
தமிழ், தெலுங்கு
சமயங்கள்
இந்து

இவர்கள் விஜயநகர ஆட்சியின் காலத்தில் ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்தனர்.இச்சமூகத்தினரின் தெலுங்கு மொழியை தாய்மொழியாகக் கொண்டோராவர்.[2] தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியலில், இவர்கள் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ளனர்.[3]

பிரிவுகள்:

உரிக்கார நாயக்கர்கள் தங்களுக்குள்ளே பல குலங்களாக

பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.அவை,

1) திருப்த்ரி குலம்

2)கருத்தால்வார் குலம்

3) நீச்சார் குலம்

4)ராச்சார் குலம்

போன்ற குலங்களாக பிரிந்து வாழுகின்றனர்.

மக்கள் வேறு குல பெண்களை திருமணம் செய்து வருகின்றனர்.

தெய்வ வழிபாடு:

இவர்களின் குலதெய்வ வழிபாடு ஆனது பழங்கால முறையான 21 தெய்வம் 64 பந்தி என்று சொல்ல கூடிய பழமையான வழிபாடு முறையை இன்றளவும் பின்பற்றுகின்றனர்.இவர்கள் மாயவன் என்று சொல்ல கூடிய பெருமாளை வணங்கி வந்தனர்.மேலும் இவர்கள் வாழ்ந்து இறந்த பெண்களை தங்களின் குல தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.

தெய்வங்கள்:

இராஜ காளியம்மன் இவர்களின் முதன்மை தெய்வம் ஆகும்.மேலும் பாப்பாத்தி அம்மன்,எல்லம்மாள், காமாட்சி அம்மன் போன்ற தெய்வங்களை வழிபட்டு வருகின்றனர்.

இருப்பிடம்:

இன்றும் தமிழ் நாட்டில், திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், கோவிலூர் ஊராட்சி,வெம்பூர் கிராமம் பண்ணைக்குளம் என்ற சிற்றூரில் இவர்களுக்கான பாரம்பரிய ஆலயம் உண்டு.

சொற்பிறப்பு தொகு

உரிக்கார நாயக்கர் இனத்தை சேர்ந்தவர்கள் கயிற்றினால் உறி செய்வது அவர்களின் பாரம்பரிய தொழிலாகும். நாயக்கர் என்பது அச் சமூகத்தினரின் பட்டமாகும்.[4]

தொழில் தொகு

இவர்களின் பெரும்பான்மையோர் சவுரி மூடி கட்டும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.[5] தற்போது சிலர் தனியார் பணிகளில் ஈடுபடுகின்றனர்.

மேற்கோள்கள் தொகு

  1. Gilbert Slater, தொகுப்பாசிரியர் (1998). India's Communities: N - Z. Oxford University Press. பக். 3545. https://books.google.co.in/books?id=jHQMAQAAMAAJ&dq=Urikkar+telugu+community+. "URIKKAR NAIKER A Telugu - speaking community in Tamil Nadu , their name is connected to their traditional occupation ; naicker is the title adopted by them . Their traditional occupation is to manufacture pot - hangers ( uri ).Now they are engaged in the manufacture of pigtails ( savaralu ) . They speak Telugu within the community and Tamil with others . They use the Tamil script . They are non - vegetarian who take pork , mutton and chicken ." 
  2. அறிஞர் குணா, தொகுப்பாசிரியர் (Aug 1994). தமிழின மீட்சி ஒரு - வரலாற்றுப் பார்வை. பக். 110. 
  3. "List of Backward Classes approved by Government of Tamil Nadu".
  4. Gilbert Slater, தொகுப்பாசிரியர் (1998). India's Communities: N - Z. Oxford University Press. பக். 3545. https://books.google.co.in/books?id=jHQMAQAAMAAJ&dq=Urikkar+telugu+community+. "URIKKAR NAIKER A Telugu - speaking community in Tamil Nadu , their name is connected to their traditional occupation ; naicker is the title adopted by them . Their traditional occupation is to manufacture pot - hangers ( uri ).Now they are engaged in the manufacture of pigtails ( savaralu ) . They speak Telugu within the community and Tamil with others . They use the Tamil script . They are non - vegetarian who take pork , mutton and chicken ." 
  5. மருத்துவர் ராமதாஸ், தொகுப்பாசிரியர் (1992 செப்டம்பர் 10,11,12). பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் 'தமிழர் வாழ்வுரிமை மாநாடு சிறப்பிதழ்'. பாட்டாளி படிப்பகம். பக். 5000. https://books.google.co.in/books?id=FmzpAAAAMAAJ&q=%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF&dq=%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF&hl=en&sa=X&ved=2ahUKEwjDsonh04HvAhVTJHIKHbRxCYEQ6AEwAHoECAAQAw. "உரிக்கார நாயக்கர் சவுரி மூடிகட்டுவோர்" 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உரிக்கார_நாயக்கர்&oldid=3872583" இலிருந்து மீள்விக்கப்பட்டது