உரிமைகளின் சட்டம் (ஐக்கிய அமெரிக்கா)
ஐக்கிய அமெரிக்கா உரிமைகளின் சட்டம் (United States Bill of Rights) என்பது ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பின் முதல் 10 மாற்றங்களை குறிக்கும். இந்த 10 மாற்றங்கள் அமெரிக்க மக்களின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், ஆயுதத்தை சொந்தமாக்கிக்கொள்ள சுதந்திரம், பதிப்பகச் சுதந்திரம் போன்ற முக்கிய உரிமைகளை காக்கும். அமெரிக்க மத்திய அரசின் வலிமையையும் குறைக்கும். முதலாம் ஐக்கிய அமெரிக்கக் காங்கிரஸ் நடக்கும்பொழுது ஜேம்ஸ் மாடிசன் இந்த 10 மாற்றங்களை முன்மொழி செய்துள்ளார்.

அமெரிக்காவின் உரிமைகள் சட்டம்
மாற்றங்கள்தொகு
எண் | ஆண்டு | விளக்கம் |
---|---|---|
1வது | 1791 | அமெரிக்க அரசு அமெரிக்க மக்களின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், பதிப்பகச் சுதந்திரம், சமயச் சுதந்திரம், விண்ணப்பம் செய்ய சுதந்திரம், கூட்டங்கூட்டச் சுதந்திரம் ஆகிய உரிமைகளை காக்கவேண்டும். அமெரிக்க அரசு ஒரு மதத்தை மற்ற மதங்களைவிட மேம்படுத்தக்கூடாது. |
2வது | 1791 | "சுதந்திர நாட்டின் பாதுகாப்புக்காக சரியாக ஒழுங்கப்பட்ட போர் வீரர் அணி தேவை. இதனால் மக்களின் ஆயுதங்களை சொந்தமாக்க உரிமையை அரசு தடை செய்யக்கூடாது." அமெரிக்க மக்களுக்கு துப்பாக்கி போன்ற ஆயுதங்களை சொந்தமாக்கிக்கொள்ள உரிமை உண்டு. |
3வது | 1791 | தனியார் வீடுகளின் முதலாளிகளை கேட்காமல் அரசு படையினர்கள் தங்கமுடியாது. |
4வது | 1791 | ஒருவர் குற்றம் செய்தார் என்று "நிகழக்கூடிய காரணம்" (probable cause) இல்லைனால் அரசால் அவரை கைது செய்யமுடியாது, அவரது சொத்தில் தேடல் செய்யமுடியாது. |
5வது | 1791 | பெரிய நடுவர் குழு (grand jury) குற்றம் சாட்டினால் தான் அரசு ஒருவரின் குற்றத்துக்கு நீதிமன்ற விசாரணை செய்யலாம். ஒரே குற்றத்துக்கு ஒருவர் மேல் இரண்டு தடவை நீதிமன்ற விசாரணை செய்யமுடியாது. ஒருவர் மேல் நீதிமன்ற விசாரணை செய்யும்பொழுது அவர் தனக்கு எதிராக சான்று கூறவேண்டாம். |
6வது | 1791 | ஒருவர் மேல் அரசு குற்றம் சாட்டினால் நடுவர் குழுவால் விரைவான நீதிமன்ற விசாரணை செய்யவேண்டும். குற்றம்சாட்டப்பட்டவருக்கு எந்த குற்றத்துக்கு கைது செய்யப்பட்டார் என்று சொல்லவேண்டும். அவரால் வழக்கறிஞரின் உதவி வேண்டுமென்றால் பயன்படுத்தமுடியும். அவருக்கு எதிரான சாட்சிகளை சோதனை செய்யமுடியும். |
7வது | 1791 | உரிமை கோரிக்கை வழக்குகளில் நடுவர் குழு நீதிமன்ற விசாரணை தேவை. |
8வது | 1791 | அரசால் கொடூரமான, வழக்கத்திற்கு மாறான தண்டனைகளை பயன்படுத்தமுடியாது. |
9வது | 1791 | உரிமைகளின் சட்டத்திலுள்ள ஒரு உரிமை இல்லையென்றால் மக்களுக்கு அந்த உரிமை இல்லை என்று அர்த்தம் இல்லை. இந்த உரிமைகள் தவிர மக்களுக்கும் மாநிலங்களுக்கும் வேறு உரிமைகளும் உள்ளன. |
10வது | 1791 | அரசியலமைப்பு மத்திய அரசுக்கு கொடுக்காத உரிமைகள் மாநிலங்களுக்கு மக்களுக்கும் உள்ளன. மாநிலங்களிடம் இருக்கக்கூடாது என்று அரசியலமைப்பால் குறிப்பிட்ட உரிமைகள் இதில் உள்ளடக்கவில்லை. |