ஜேம்ஸ் மாடிசன்

1809 முதல் 1817 வரை இருந்த அமெரிக்க அதிபர்

ஜார்ஜ் மாடிசன் (George Madison) (மார்ச் 16, 1751 - ஜூன் 28, 1836) அவர்கள் ஐக்கிய அமெரிக்காவின் நான்காவது குடியரசுச் தலைவர் ஆவார். இவர் 1809 முதல் 1817 வரை குடியரசுத் தலைவராக இருந்தார். ஐக்கிய அமெரிக்காவை நிறுவிய மூதாதையர்களில் செல்வாக்கு மிக்கவர்களில் ஒருவர். குறிப்பாக அமெரிக்காவின் 1787 ஆம் ஆண்டின் அரசியல் சட்டத்தினை எழுதியவர்களின் முதன்மையானவர். இதனால் இவரை “அரசியல் நிறுவன சட்டத்தின் தந்தை” என போற்றுவர். இவர் 1788ல் அரசியல் நிறுவன சட்டத்தைப் பற்றி எழுதிய கட்டுரைகள் மிகவும் புகழ் பெற்றவை. 1787-1788 ஆகிய ஆண்டுகளில் ஐக்கிய அமெரிக்க அரசு ஒரு நடுவண் அரசாக இயங்குவதற்கு வலு சேர்த்து ஒப்புதல் அளிக்கும் முகமாக எழுதப்பட்ட 85 புகழ்பெற்ற கட்டுரைகளில் மூன்றில் ஒரு பகுதி கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார். ஐக்கிய அமெரிக்காவின் காங்கிரசின் முதல் தலைவராக இவர் பணியாற்றிய பொழுது பல அடிப்படையான சட்டங்களை நிறைவேற்றினார். அரசியல் நிறுவன சட்டத்தில் உள்ள முதல் பத்து சட்ட மாற்றங்களை நிறைவேற்றினார். அவற்றுள் குடிமக்களின் உரிமைகள் சட்டம் முக்கியமானது. இதனால் இவரை “உரிமைகள் சட்டத்தின் தந்தை” எனப் போற்றுவர்.[1][2][3]

ஜேம்ஸ் மாடிசன்
ஐக்கிய அமெரிக்காவின் 4வது குடியரசுத் தலைவர்
பதவியில்
மார்ச் 4 1809 – மார்ச் 4 1817
துணை அதிபர்ஜார்ஜ் கிளிண்ட்டன் (1809-1812),
யாரும் இல்லை (1812-1813),
எல்பிரிட்ஜ் ஜெர்ரி (1813-1814)
யாரும் இல்லை (1814-1817)
முன்னையவர்தாமஸ் ஜெஃவ்வர்சன்
பின்னவர்ஜேம்ஸ் மன்ரோ
5 ஆவது நாட்டின் செயலாளர்
பதவியில்
மே 2 1801 – மார்ச் 3 1809
குடியரசுத் தலைவர்தாமஸ் ஜெஃவ்வர்சன்
முன்னையவர்ஜான் மார்ஷல்
பின்னவர்ராபர்ட் ஸ்மித்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமார்ச் 16 1751
போர்ட் கான்வே, வர்ஜீனியா
இறப்புஜூன் 28 1836, அகவை 85
மாண்ட்பெல்லியெர், வர்ஜீனியா
தேசியம்அமெரிக்கன்
அரசியல் கட்சிடெமாக்ரட்டிக்-ரிப்பப்லிக்கன் கட்சி
துணைவர்டாலி டாடு மாடிசன்
கையெழுத்து

மேற்கோள்கள்

தொகு
  1. "The Federalist and the Republican Party | American Experience | PBS". PBS.
  2. "James Madison - Founding Father, Constitution, Federalist | Britannica". July 29, 2024.
  3. McCoy, Drew R. (October 1974). "Republicanism and American Foreign Policy: James Madison and the Political Economy of Commercial Discrimination, 1789 to 1794". The William and Mary Quarterly 31 (4): 633–646. doi:10.2307/1921607. https://www.jstor.org/stable/1921607. பார்த்த நாள்: 1 September 2024. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்ஸ்_மாடிசன்&oldid=4103690" இலிருந்து மீள்விக்கப்பட்டது