உருத்தேனியம்(II) குளோரைடு
உருத்தேனியம்(II) குளோரைடு (Ruthenium(II) chloride) RuCl2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும்.[1][2]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
உருத்தேனியம் இருகுளோரைடு, இருகுளோரோருத்தேனியம்
| |
இனங்காட்டிகள் | |
13465-51-5 | |
ChemSpider | 132403 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 150195 |
| |
பண்புகள் | |
Cl2Ru | |
வாய்ப்பாட்டு எடை | 171.97 g·mol−1 |
தோற்றம் | பழுப்பு நிற படிகங்கள் |
சிறிதளவு கரையும் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகு250° செல்சியசு வெப்பநிலையில் உருத்தேனியமும் குளோரினும் வினைபுரிந்து உருத்தேனியம்(II) குளோரைடு உருவாகிறது. :[3]
- Ru + Cl2 → RuCl2
பிளாட்டினம் கருப்பு மற்றும் ஐதரசன் குளோரைடு முன்னிலையில் எத்தனாலில் உள்ள ஐதரசனுடன் உருத்தேனியம் முக்குளோரைடு வினைபுரிந்தாலும் உருத்தேனியம்(II) குளோரைடு உருவாகிறது.:
- 2RuCl3 + H2 → 2RuCl2 + 2HCl
இயற்பியல் பண்புகள்
தொகுஉருத்தேனியம்(II) குளோரைடு பழுப்பு நிற படிகங்களாக உருவாகிறது.
உருத்தேனியம்(II) குளோரைடு குளிர்ந்த நீரில் சிறிதளவில் கரைகிறது. ஆனால் எத்தனாலில் நன்கு கரைகிறது.
வேதியியல் பண்புகள்
தொகுஉருத்தேனியம்(II) குளோரைடு அரோமாட்டிக்கு ஐதரோகார்பன்களுடன் சேர்ந்து அணைவுச் சேர்மங்களை உருவாக்குகிறது.[4]
ஐதரசனுடன் வினைபுரியச் செய்து இச்சேர்மத்தை தனிம உருத்தேனியமாக குறைக்கலாம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Ruthenium(ii) chloride" (in ஆங்கிலம்). NIST. பார்க்கப்பட்ட நாள் 31 March 2023.
- ↑ Rose, D.; Wilkinson, G. (1 January 1970). "The blue solutions of ruthenium(II) chloride: a cluster anion" (in en). Journal of the Chemical Society A: Inorganic, Physical, Theoretical: 1791–1795. doi:10.1039/J19700001791. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-4944. https://pubs.rsc.org/en/content/articlelanding/1970/j1/j19700001791. பார்த்த நாள்: 31 March 2023.
- ↑ Howe, Jas. Lewis; Howe, James L.; Ogburn, S. C. (February 1924). "Ruthenium Dichloride" (in en). Journal of the American Chemical Society 46 (2): 335–342. doi:10.1021/ja01667a008. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. https://pubs.acs.org/doi/abs/10.1021/ja01667a008. பார்த்த நாள்: 31 March 2023.
- ↑ Arthur, T.; Stephenson, T. A. (31 March 1981). "Synthesis of triple halide-bridged arene complexes of ruthenium(II) and osmium(II)" (in en). Journal of Organometallic Chemistry 208 (3): 369–387. doi:10.1016/S0022-328X(00)86722-4. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-328X. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0022328X00867224. பார்த்த நாள்: 31 March 2023.