உருத்தேனியம்(III) அசிட்டேட்டு
உருத்தேனியம்(III) அசிட்டேட்டு (Ruthenium(III) acetate) என்பது C12H28BF4O18Ru3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மம் ஆகும். பொதுவாக கார உருத்தேனியம் அசிட்டேட்டு என்று வகைப்படுத்தப்படும்[1] இது [Ru3O(O2CCH3)6(OH2)3]+ என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட நேர்மின் அயனி உப்புக் குடும்பமாகக் கருதப்படுகிறது. டெட்ராபுளோரோபோரேட்டு உப்பின் [Ru3O(O2CCH3)6(OH2)3]BF4(H2O)2 ஈரைதரேட்டு என்பது இதன் ஒரு பிரதிநிதி வழித்தோன்றலாகும். மேலே உள்ள அட்டவணையில் உள்ள தரவுகளின் ஆதாரமும் இதுவேயாகும்.[2]
இனங்காட்டிகள் | |
---|---|
55466-76-7 [ECHA] | |
EC number | 259-653-7 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 91886549 |
| |
பண்புகள் | |
C12H28BF4O18Ru3 | |
வாய்ப்பாட்டு எடை | 850.35 g·mol−1 |
தோற்றம் | பச்சை நிற திண்மம் |
அடர்த்தி | 2.110 கி/செ.மீ3 |
கட்டமைப்பு | |
ஒருங்கிணைவு வடிவியல் |
எண்கோணம் |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H318, H400, H410 | |
P273, P280, P305+351+338, P310, P391, P501 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தொடர்புடைய உப்புக்கள் பச்சை நிறத்திலும், ஆல்ககாலில் கரையக்கூடியவையாகவும் காற்றில் நிலையான திண்மப் பொருளாகவும் உள்ளன.
கார உருத்தேனியம் அசிடேட்டில் எண்முக உருத்தேனியம்(III) மையங்கள், மூப்பால ஆக்சோ ஈந்தணைவி, ஆறு அசிடேட்டு ஈந்தணைவிகள் மற்றும் மூன்று நீர் ஈந்தணைவிகள் உள்ளன. இதே அமைப்பு இரும்பு, குரோமியம், இரிடியம் மற்றும் மாங்கனீசு ஆகியவற்றின் கார அசிடேட்டுகளுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.[1][2]
தயாரிப்பு
தொகுசோடியம் அசிடேட்டின் முன்னிலையில் அசிட்டிக் அமிலத்தில் கரைக்கப்பட்ட உருத்தேனியம் டிரைகுளோரைடை சூடாக்குவதன் மூலம் இது தயாரிக்கப்படுகிறது.[3] உருத்தேனியத்தின் கார அசிட்டேட்டுகள் 1950 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் பதிவாகியிருந்தாலும் அவை முறையாக உருவாக்கப்படவில்லை.[4]
வினைகள்
தொகுமுப்பீனைல்பாசுபீன் மற்றும் பிரிடின் போன்ற பல ஈந்தணைவிகளுடன் வினைபுரிகிறது. இந்த வழிப்பெறுதிகள் [Ru3O(O2CCH3)6L3]0 கலப்பு இணைதிறன் கொண்ட சேர்மங்களாகும்.[5]
தொடர்புடைய சேர்மங்கள்
தொகு- இருருத்தேனியம் டெட்ரா அசிட்டேட்டு குளோரைடு
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
- ↑ 2.0 2.1 O. Almog, A. Bino, D. Garfinkel-Shweky (1993). "The Structure of Oxo-Bridged Trinuclear Ruthenium and Iridium Hexacarboxylates". Inorg. Chim. Acta 213 (1–2): 99. doi:10.1016/S0020-1693(00)83819-0.
- ↑ J. C. Goeltz, S. D. Glover, J. Hauk, C. P. Kubiak (2010). Basic Ruthenium Acetate and Mixed Valence Derivatives. Inorganic Syntheses. Vol. 35. pp. 156–160. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/9780470651568.ch8. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780470651568.
{{cite book}}
:|journal=
ignored (help) - ↑ Martin, F. S. (1952). "Basic Trinuclear Ruthenium Acetate". Journal of the Chemical Society: 2682–4. doi:10.1039/jr9520002682.
- ↑ Cotton, F. A.; Norman, J. G., Jr. (1972). "Structural Characterization of a Basic trinuclear Ruthenium Acetate". Inorg. Chim. Acta 6: 411–419. doi:10.1016/S0020-1693(00)91829-2.