உருத்தேனியம் நாற்குளோரைடு
உருத்தேனியம் நாற்குளோரைடு (Ruthenium tetrachloride) RuCl4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். உருத்தேனியமும் ஐதரோகுளோரிக் அமிலமும் சேர்ந்து வினைபுரிவதால் இந்த உலோக உப்பு உருவாகிறது.[1][2][3] பழுப்பு நிறத்தில் படிகங்களாக இச்சேர்மம் உருவாகிறது. குளிர்ந்த நீரில் கரைந்து நீரேற்றை உருவாக்குக்கிறது.[4]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
உருத்தேனியம்(IV) குளோரைடு, உருத்தேனியம்(4+) நாற்குளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
13465-52-6 | |
ChemSpider | 14807928 |
EC number | 236-697-5 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 44145691 |
| |
பண்புகள் | |
Cl4Ru | |
வாய்ப்பாட்டு எடை | 242.87 g·mol−1 |
தோற்றம் | பழுப்பு நிறப் படிகங்கள் |
கரையும் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஉருத்தேனியம் ஏழாக்சைடின் மீது ஐதரசன் குளோரைடு வினைபுரிந்தால் உருத்தேனியம் நாற்குளோரைடு உருவாகும்:
- RuO4 + 8HCl → RuCl4 + 2Cl2 + 4H2O
இயற்பியல் பண்புகள்
தொகுஉருத்தேனியம் நாற்குளோரைடு பழுப்பு நிறத்தில் நீருறிஞ்சும் படிகங்களாக உருவாகிறது. RuCl4·5H2O என்ற நீரேற்றாகவும் உருத்தேனியம் நாற்குளோரைடு உருவாகிறது. குளிர்ந்த நீரிலும் எத்தனாலிலும் இச்சேர்மம் கரையும்.
வேதியியல் பண்புகள்
தொகுமந்தவாயுச் சூழலில் உருத்தேனியம் நாற்குளோரைடை சூடுபடுத்தினால் சிதைவடையும்:
- RuCl4 → Ru + 2Cl2
சூடான நீருடன் வினைபுரிந்தாலும் இச்சேர்மம் சிதைவுக்கு உட்படும்:
- RuCl4 + H2O → [Ru(OH)Cl3] + HCl
காற்றில் உருத்தேனியம் நாற்குளோரைடை சூடுபடுத்தினால் ஆக்சிசனால் இது ஆக்சிசனேற்றமடைகிறது:
- RuCl4 + O2 → RuO2 + 2Cl2
பயன்கள்
தொகுவேதி வினைகளில் இச்சேர்மம் ஆக்சிசனேற்றியாகப் பயன்படுத்தப்படுகிறது.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ Harmonized commodity description and coding system: explanatory notes (in ஆங்கிலம்). U.S. Department of the Treasury, Customs Service. 1986. p. 309. பார்க்கப்பட்ட நாள் 31 March 2023.
- ↑ Comey, Arthur Messenger (1896). A Dictionary of Chemical Solubilities Inorganic: xx, 515 p (in ஆங்கிலம்). Macmillan & Company. p. 349. பார்க்கப்பட்ட நாள் 31 March 2023.
- ↑ "Ruthenium tetrachloride". Alfa Chemistry. பார்க்கப்பட்ட நாள் 31 March 2023.
- ↑ Howe, Jas. Lewis (November 1901). "CONTRIBUTIONS TO THE STUDY OF RUTHENIUM, IV. 1 THE CHLORIDES." (in en). Journal of the American Chemical Society 23 (11): 775–788. doi:10.1021/ja02037a001. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. https://pubs.acs.org/doi/pdf/10.1021/ja02037a001. பார்த்த நாள்: 31 March 2023.
- ↑ Bingham, Eula; Cohrssen, Barbara (31 July 2012). Patty's Toxicology, 6 Volume Set (in ஆங்கிலம்). John Wiley & Sons. p. 690. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-41081-3.