உருபீடியம் செருமேனியம் அயோடைடு

வேதிச் சேர்மம்

உருபீடியம் செருமேனியம் அயோடைடு (Rubidium germanium iodide) என்பது RbGeI3என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். உருபீடியம் மற்றும் செருமேனியம் ஆகிய தனிமங்களின் மும்மை ஆலைடு சேர்மம் என்று இது வகைப்படுத்தப்படுகிறது. ஒளிமின்னழுத்த பயன்பாடுகளுக்கான நச்சுத்தன்மை வாய்ந்த CH3NH3PbI3 சேர்மத்திற்கு இது ஒரு சாத்தியமான இணையாகக் கருதப்படுகிறது.[1]

உருபீடியம் செருமேனியம் அயோடைடு
இனங்காட்டிகள்
InChI
  • InChI=1S/Ge.3HI.Rb/h;3*1H;/q+2;;;;+1/p-3
    Key: BMENQWFJSMYCLV-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • [Ge+2].[I-].[I-].[I-].[Rb+]
பண்புகள்
GeI3Rb
வாய்ப்பாட்டு எடை 538.81 g·mol−1
உருகுநிலை 61 ° செல்சியசு (சிதைவடையும்)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தயாரிப்பு தொகு

செருமேனியம்(II) ஐதராக்சைடுடன் ஐதரயோடிக் அமிலத்தில் கரைக்கப்பட்ட உருபீடியம் அயோடைடு கரைசலைச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் உருபீடியம் செருமேனியம் அயோடைடை தயாரிக்கலாம்.:[2]

Ge(OH)2 + RbI + 2 HI → GeRbI3 + 2 H2O

பண்புகள் தொகு

உருபீடியம் செருமேனியம் அயோடைடு பல்வேறு சிதைந்த பெரோவ்சிகைட்டு போன்ற கட்டமைப்புகளுடன் பல்லுருவங்களில் காணப்படுகிறது. இது Ge2+ அயனியின் மையத்தில் உள்ள "பிணைப்பு அல்லாத" இணை எலக்ட்ரான்களின் செல்வாக்கை பிரதிபலிக்கிறது.[3]

அறை வெப்பநிலையில், உருபீடியம் செருமேனியம் அயோடைடு கருப்பு நிறத்தில் கனசதுர பெரோவ்சிகைட்டு வடிவத்தைக் கொண்டுள்ளது. -29 ° செல்சியசு வெப்பநிலை மற்றும் -52 °செல்சியசு வெப்பநிலைகளுக்கு இடையே கருப்பு செஞ்சாய் சதுர வடிவமும்; -52 °செல்சியசு வெப்பநிலை மற்றும் -92 °செல்சியசு வெப்பநிலைகளுக்கு இடையே போர்டாக்சு-சிவப்பு நேர்சாய்சதுர பெரோவ்சிகைட்டு வடிவமும்; மற்றும் -92 ° செல்சியசு வெப்பநிலைக்குக் கீழே எலுமிச்சை-மஞ்சள் நேர்சாய்சதுர வடிவமும் கொண்ட பண்புகளை உருபீடியம் செருமேனியம் அயோடைடு வெளிப்படுத்துகிறது.[4]

மேற்கோள்கள் தொகு

  1. Deepthi Jayan, K.; Sebastian, Varkey (2021-09-01). "Ab initio DFT determination of structural, mechanical, optoelectronic, thermoelectric and thermodynamic properties of RbGeI3 inorganic perovskite for different exchange-correlation functionals" (in en). Materials Today Communications 28: 102650. doi:10.1016/j.mtcomm.2021.102650. பன்னாட்டுத் தர தொடர் எண்:2352-4928. https://www.sciencedirect.com/science/article/pii/S2352492821006425. 
  2. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. p. 377. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
  3. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. p. 376. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
  4. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. pp. 376–377. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.