உருபீடியம் அயோடைடு

வேதிச்சேர்மம்

உருபீடியம் அயோடைடு (Rubidium iodide) என்பது RbI என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். உருபீடியம் மற்றும் அயோடின் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இந்த உப்பு உருவாகிறது. 642 பாகை செல்சியசு வெப்பநிலையில் இது உருகும். உருபீடியம் அயோடைடு வெண்மையாக திண்மப் பொருளாக காணப்படுகிறது.

உருபீடியம் அயோடைடு
ருபீடியம் அயோடைடு Rubidium iodide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ருபீடியம் அயோடைடு
இனங்காட்டிகள்
7790-29-6 Y
ChemSpider 74226 Y
InChI
  • InChI=1S/HI.Rb/h1H;/q;+1/p-1 Y
    Key: WFUBYPSJBBQSOU-UHFFFAOYSA-M Y
  • InChI=1/HI.Rb/h1H;/q;+1/p-1
    Key: WFUBYPSJBBQSOU-REWHXWOFAR
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 3423208
வே.ந.வி.ப எண் VL8925000
  • [Rb+].[I-]
பண்புகள்
IRb
வாய்ப்பாட்டு எடை 212.3723 கி/மோல்
தோற்றம் திண்மம்
அடர்த்தி 3.110 கி/செ.மி 3
உருகுநிலை 646.85 °C (1,196.33 °F; 920.00 K)
கொதிநிலை 1,304 °C (2,379 °F; 1,577 K)
152 கி/100 மி.லி
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
Lethal dose or concentration (LD, LC):
4708 மி.கி/கி.கி (வாய்வழி எலி)
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் ருபீடியம் புளோரைடு
ருபீடியம் குளோரைடு
ருபீடியம் புரோமைடு
ஏனைய நேர் மின்அயனிகள் ஈலித்தியம் அயோடைடு
சோடியம் அயோடைடு
பொட்டாசியம் அயோடைடு
சீசியம் அயோடைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

தயாரிப்பு

தொகு

உருபீடியம் அயோடைடை பல வழிகளில் தயாரிக்க முடியும். உருபீடியம் ஐதராக்சைடை ஐதரயோடிக் அமிலம்/ஐதரசன் அயோடைடு ஆகியவற்றின் கலப்பு வினையின் மூலம் தயாரிப்பது ஒரு வழியாகும். [1]

RbOH + HI → RbI + H2O

உருபீடியம் கார்பனேட்டை ஐதரயோடிக் அமிலத்துடன் சேர்த்து வினைபுரியச் செய்து தயாரிப்பது இரண்டாவது தயாரிப்பு முறையாகும்:[1]

Rb2CO3 + 2HI → 2RbI + H2O + CO2

அயோடினுடன் நேரடியாக வினைபுரிய உருபீடியம் உலோகத்தைப் பயன்படுத்துவது மற்றொரு தயாரிப்பு முறையாகும். ஆனால் உருபீடியம் உலோகம் மிகவும் விலை உயர்ந்ததாக இருப்பதால், இது மிகவும் குறைவாகப் பயன்படுத்தப்படும் முறையாகும். இதுமட்டுமல்லாமல் உருபீடியம் ஆலசன்களுடன் தீவிரமாக வினைபுரிந்து தீப்பற்றும் அபாயமும் உள்ளது.:[1]

2Rb + I2 → 2RbI

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "WebElements". Archived from the original on 2008-04-18. பார்க்கப்பட்ட நாள் 23 February 2006.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருபீடியம்_அயோடைடு&oldid=4155879" இலிருந்து மீள்விக்கப்பட்டது