உருளும் அடைப்பு

உருளும்-அடைப்பு இயக்கம் (ஆங்கிலம்: rolling block) என்பது, ஒரு ஊசியின்மீது சுற்றக்கூடிய, பிரத்தியேக வடிவமுள்ள பின்னடைப்பினால், குழலாசனம் அடைக்கப்படும் சுடுகலன் இயக்கத்தின் ஒரு வடிவமாகும். ஒரு வட்டப்பகுதியின் வடிவில் பின்னடைப்பு இருக்கும். இந்த இயக்கத்தில், சுத்தியலைக் கொண்டு பின்னடைப்பு பூட்டப்படுவதால்; சுடும் தருணத்தில் வெடிபொதியின் பின்நோக்கிய நகர்வை தவிர்க்கலாம். சுத்தியலை பின்னிழுப்பதால், (ஆயுதத்தை மீள்குண்டேற்றவதற்கு) பின்னடைப்பை எளிமையாக சுற்ற முடியும்.[1][2][3]

ரெமிங்டன் உருளும்-அடைப்புடைய குழலாசனம்

வரலாறு 

தொகு

19-ஆம் நூற்றாண்டின் உலோகவியல் நுட்பங்களால், இந்த இயங்குமுறையை கொண்டு உற்பத்தியான புரிதுமுக்கிகளும், கைத்துப்பாக்கிகளும் நவீன, அதி-ஆற்றல் மிக்க போர்த்தளவாடத்துக்கு ஒத்து வராது.  

இதுவரை உருவாக்கப்பட்ட மிகுந்த வெற்றிகரமான ஒற்றைவெடி ஆயுதங்களுள், ரெமிங்டன் உருளும் அடைப்பு புரிதுமுக்கியும் ஒன்று ஆகும். இது ஒரு வலிய, மற்றும் எளிய இயக்கம், மிக நம்பகமானது, மற்றும் முரட்டுப் பயன்பாட்டால் அல்லது தூசியால் கூட இது செயலிழக்காது. 

1867-ல் பாரிஸ் விரித்துரைப்பில், இந்த வடிவத்தைச் சார்ந்த முதல் புரிதுமுக்கி அறிமுகமானது. அடுத்த ஒரு வருடத்தில், (சுவீடன், நார்வே, டென்மார்க் உட்பட) பல தேசங்களின் செந்தர இராணுவப் புரிதுமுக்கியாக ஆனது.

நவீன ஆணி-இயக்க வடிவமைப்புகளின் தோன்றுதலுக்கு முன்பிருந்த காலங்களில், பல முற்கால மூடியடி சுடுகலன்கள், உருளும் அடைப்பு வடிவத்திற்கு மாற்றப்பட்டன.   

சுவீட-நார்வீஜிய ரெமிங்டன் எம்1867, மற்றும் அமெரிக்க ஸ்ப்ரிங்ஃபீல்டு ரகம் 1871 ஆகிய சுடுகலன்கள், இந்த இயங்குமுறையை கொண்டிருந்தன.

மேற்கோள்கள்

தொகு
  1. Rolling-block action
  2. "Remington Split Breech – Before It Was Famous". April 2018.
  3. Sawyer, Charles Winthrop (1920). Firearms in American History: Our Rifles. p. 260.

இதர நீள்துப்பாக்கிகளின் பின்குண்டேற்ற இயக்கங்கள் 

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருளும்_அடைப்பு&oldid=4164121" இலிருந்து மீள்விக்கப்பட்டது