பின்னடைப்பு (சுடுகலன்)
பின்னடைப்பு (சுருக்கமாக அடைப்பு) என்பது, சுடும் தருணத்தில், ஆயுதத்தின் (துப்பாக்கியோ அல்லது பீரங்கியோ) குழலுடைய பின்பகுதியை மூடும், (சுடுகலன் இயக்கத்தின்) ஒரு பாகம் / கூறு ஆகும்.[1][2]
வகைகள்
தொகுஎந்த ஒரு பின்குண்டேற்ற ஆயுதத்திலும், குழலாசனம் (breech) அல்லது அறையை மூடும் முறை தான் முக்கியமானது ஆகும். இதை சாத்தியமாக்க, துப்பாக்கியின் முன்பாகங்களை (குழல், முன்தண்டு), பின்பகுதியுடன் (தண்டு, விசை இயங்குமுறை) கீல் கொண்டு இணைக்கப் பட்டிருக்கும் உடைவு-இயக்கம் தான், மிக எளிய முறை ஆகும். உடைவியக்கத்தில், பின்னடைப்பு என்ற பாகமே இருக்காது. ஒரு பின்னடைப்பு குழல்-ஆசனத்தை அடைக்க வல்லதாக இருக்க வேண்டும்; ஆனால் குண்டேற்றவதற்கு, அல்லது சுடும் முன்பு வெடிபொதியை நீக்க, அல்லது சுட்டபின் காலி-உறையை நீக்க, அது நகர்த்தும்படியும் இருத்தல் வேண்டும்.
துப்பாக்கியின் இயங்குமுறை என்பது முற்றிலும் வேறு ஆகும். அதில் ஒரு பகுதியான பின்னடைப்பு வடிவத்துக்கு தான், இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது.
சுழலும் ஆணி
தொகுஒரு சுழலும் ஆணி அடைப்பாக செயல்படுவதால், இதை அடைப்பு என்று சொல்லாமல் 'ஆணி' என்றே தான் குறிப்பிடுவர். இந்த ஆணி, வாங்கிக்குள் குழலின் ஊடச்சினை ஒத்தவாறு இழைந்துச் செல்லும்; மேலும் குழலாசனத்தை பூட்டவும், திறக்கவும் கூட அதே ஊடச்சை மையமாகக் கொண்டு தான் சுழலும். இது தான், ஆணியுடன் இணைந்திருக்கும் ஒரு கைப்பிடியால் அதனை சுழற்றவும், பின்னிழுக்கவும் வகை செய்யும் -- ஆணி இயக்கத்துக்கு அடிப்படையாக ஆனது.
-
வெள்ளொளிர்வு விளக்கை அதன் தாங்கியில் பொருத்துவதை போலவே சுழலும் ஆணியும் பூட்டப்படும்.
-
ஆணியின் முகப்புக்கு சற்றுபின்னே இருக்கும் இரண்டு பூட்டும் துருத்தங்களை காட்டும், ஒரு மௌசர் 98-ன் ஆணி.
-
ஆணியின்மேல் பல பூட்டும் துருத்தங்களை காட்டும், ஏ.ஆர்.-15-ன் ஆணி வாங்கி.
-
ஆணி வாங்கியில் இருந்து கழற்றப்பட்ட, ஒரு ஏ.ஆர்.-15-ன் ஆணி.
-
ஆணி பின்னால் இழுக்கப்பட்டிருக்கும், ஒரு லீ-என்ஃபீல்டு மார்க் III புரிதுமுக்கி.
-
.22 லாங் ரைஃபிள் வெடிபொதியை புகட்டும் அறையுடைய, ஒரு டோஸ்-17 புரிதுமுக்கி முழுவது பிரிக்கப்பட்ட நிலையில் உள்ளது. ஆணிப்பிடியை வாங்கியில் இருக்கும் பள்ளத்தில் அழுத்தி, ஆணி பூட்டப்படும்.
-
சுழலும் ஆணியை பிரயோகிக்கும் வின்செஸ்டர் ரகம் 1200.
-
சுழலும் ஆணியை பிரயோகிக்கும் பிரௌனிங் பி.எல்.ஆர்.
நழுவும் அடைப்பு
தொகுநழுவும் அடைப்பு அமைப்பில் குழல்-ஆசனத்தை மூட வேண்டுமானால், குழலின் முகப்போடு அதிலுள்ள பின்னடைப்பு இழையும்படி இருக்க வேண்டும். அந்த இழைவியக்கம் குழலின் ஊடச்சுக்கு செங்குத்தான போக்கில் இருக்கும். குழலாசனத்தை வெளிக்காட்டுவதற்கு பின்னடைப்பு கீழ்நோக்கி சரியுமானால், இது வீழும்-அடைப்பு என்று குறிப்பிடப்படும் (கீழுள்ள ஷார்ப்ஸ் புரிதுமுக்கியின் படத்தை காண்க) . பீரங்கிகளில் நழுவும் அமைப்பு பொதுவானது ஆகும். இது ஒரு வலிமையான வடிவமைப்பு ஆகும். அடைப்பு வாங்கிக்குள் நன்றாக நழுவிச் செல்லும்படி இருக்கும், மேலும் சுடும்போது ஏற்படும் தேவையற்ற விசைகள் அனைத்தும் அடைப்பை பாதிக்காத வகையில், குழலாசனத்தை திறந்து-மூடும் இயங்குநுட்பம் இருக்கும்.
-
ஷார்ப்ஸ் புரிதுமுக்கியின் குழலாசனத்தை காண்க.
-
ஷார்ப்ஸ் புரிதுமுக்கி.
-
ரூகர் நெ.1 ஒரு-வெடி வீழும் அடைப்பு புரிதுமுக்கி.
-
ஆர்டினன்சு கியூ.எப். 25-பவுண்டரின் திறந்த குழலாசனம்.
-
எம்101 ஹாவித்சரின் குழலாசனம்.
பக்கவாட்டு-கீல் அடைப்பு
தொகுஸ்னைடர்-என்ஃபீல்டு மற்றும் வார்னர் கார்பைன் ஆகியவைகளில் பக்கவாட்டில் கீல் இடப்பட்ட அடைப்பு இருக்கும். குழலின் ஊடச்சுக்கு இணையாக போக்கில் அடைப்பின் கீல் இருப்பதால், அடைப்பு பக்கவாட்டில் சுழன்று குழலாசனத்தை வெளிக்காட்டும். சுடுவதால் ஏற்படும் விசையை அடைப்பின் பிற்பகுதி கிரகித்துக் கொள்ளும்.
பொதுவாக ஸ்ப்ரிங்ஃபீல்டு புரிதுமுக்கியுடன் தொடர்பு படுத்தப்படும் இது, குழலாசனத்தின் முகப்புக்கு மேலே, அடைப்பின் ஒரு முனை கீல் இடப்பட்டிருக்கும்; மேலும், குழலாசனத்தை வெளிக்காட்டுவதற்கு, ஒரு தரைக் கதவைப் போல இது திறக்கும். அடைப்பின் மறுமுனையில் இருக்கும் ஒரு பிடியால் குழலாசனம் பூட்டப்படும். இதை ஆங்கிலத்தில் ட்ராப்-டோர் (trapdoor) அடைப்பு என்பர்.
உருளும் அடைப்பு
தொகுஉருளும் அடைப்பு என்பத்தை, குழலாசனத்துக்கு கீழே கீல் இடப்பட்டிருக்கும் ஒரு கால்வட்ட வடிவ அடைப்பு என சொல்லலாம். இந்த கால்வட்டம் தோரயமாக 90°-க்கு சுழன்று, குழலாசனத்தை திறப்பதற்கும், மூடுவதற்கும் பயன்படும். மூடப்பட்ட நிலையில், அதை அப்படியே மூடியபடி (திறக்காத வண்ணம்) பூட்டி வைக்க, பல்வேறு கருவிகளை பயன்படுத்தலாம். ரெமிங்டன் உருளும் அடைப்பு புரிதுமுக்கியில் இவ் வடிவத்தை காணலாம், இதில் அடைப்பை பூட்ட, அதன் பின்னால் இன்னொரு கால்வட்டத்தின்மீது அமர்த்தப்பட்ட சுத்தியல் இருக்கும். ஸ்பென்சர் மீளச்சுடும் புரிதுமுக்கியிலும் இந்த உருளும் அடைப்பை தான் உள்ளது.
-
ரெமிங்டன் உருளும்-அடைப்பு புரிதுமுக்கியின் குழலாசனம்.
பீபாடி-மார்டினி
தொகுஆரம்பத்தில் பீபாடி புரிதுமுக்கியில், பயன்படுத்தப்பட்ட இது, மார்ட்டினி-ஹென்றி மற்றும் மார்ட்டினி-என்ஃபீல்டில், இவற்றை தொடர்ந்து பின்னர் பரவலான பிரயோகிக்கப் பட்டது. பின்னால் கீல் இடப்பட்ட, வீழும்-அடைப்பு வடிவமைப்பை கொண்டது; இதில் கீலை மையமாகக் கொண்டு அடைப்பு சுழற்றப்பட்டு, அதன் முன்பகுதியை தாழ்த்துவதன் மூலம், குழலாசனம் திறக்கப்படும். இது க்ராகு-பீட்டர்சன் புரிதுமுக்கியிலும் பயன்படுத்தப்பட்டது.
-
மார்ட்டினி-ஹென்றியின் பகுதி.
-
மார்ட்டினி-ஹென்றியின் திறந்த மற்றும் மூடிய குழலாசனம்.
-
மார்ட்டினி-ஹென்றி மார்க் I.
-
வெளிப்புற சுத்தியல் கொண்ட பீபாடி புரிதுமுக்கி.
சாய்வு அடைப்பு
தொகுநேர்கோட்டு அடைப்பு
தொகுகுழலின் ஊடச்சுக்கு நேர்கோட்டில் நகரும் அடைப்பினால் குழலாசனம் திறக்கப்படும், மேலும் இயக்கவழங்கி, ஆப்பு அல்லது நெம்புகோல் போன்றவைகளைக் கொண்டு தடங்கல் ஏற்படுத்தவதன் மூலம், இதை மூடிய நிலையில் பூட்டுப்படும். ஹெக்லர் & கோச்சால் தயாரிக்கப்பட்ட சுடுகலன்கள் பொதுவாக உருளை பூட்டினைக் கொண்டிருந்தன.
பின்னடைப்பின் நகர்வு, குழல்-ஊடச்சுக்கு கச்சிதமான நேர்கோட்டில் இல்லாதபோதும், எம்1895 லீ நேவி இந்த வகையாக வரையறுக்கப்பட்டுள்ளது.
-
எம்1895 லீ நேவி - பூட்டிய நிலை.
-
எம்1895 லீ நேவி - திறந்த நிலை
-
பின்னடைப்பை அதன் இடத்தில் வைத்து பூட்டுவதற்கு, ஒரு இருநிலைமாற்றியை (toggle) பிரயோகிக்கும் ஹென்றி புரிதுமுக்கி.
பின்தள்ளும் அடைப்பு
தொகுநேர்கோட்டில் உள்ள ஒரு அடைப்பை தான் பின்தள்ளும் இயக்கம் பிரயோகிக்கும்; அனால் இதில் குழலாசனம், அழுத்திப் பூட்டப்படுவதற்கு பதிலாக, சுருள்வில்லின் அழுத்தத்தால் மட்டுமே மூடிவைக்கப் பட்டிருக்கும். குறைந்த-ஆற்றல் கொண்ட வெடிபொதிகளை பிரயோகிக்கும், அரை-தானியக்க மற்றும் தானியக்க சுடுகலங்களில், இந்த பின்தள்ளும் அடைப்பு பயன்படுத்தப்படும். .22கேல் விளிம்படி வெடிபொதிகளை சுடும் அரை-தானியக்க சுடுகலன்கள், மற்றும் பல துணையெந்திர துப்பாக்கிகளில், இது பொதுப்படையானது. பின்னடைப்பு நகராமல், குழல் நகரும் பாணியை கொண்ட முன்னிழு இயக்கமானது, இதன் மாற்று வடிவமே ஆகும்.
மிதவை இயக்கங்கள்
தொகுபெரும்பாலான நீள்துப்பாக்கிகளில், குழல் நகராதபடி வாங்கியுடன் இணைக்கப்படும், மேலும் இயக்கத்தின்போது கூட குழல் வாங்கியை விட்டு நகராது. அதிக-ஆற்றல் கொண்ட கைத்துப்பாக்கி வெடிபொதிகளைச் சுடும் பெரும்பாலான அரை-தானியக்க கைத்துப்பாக்கிகள், பூட்டப்பட்ட குழலாசன வடிவமைப்பை பயன்படுத்தும். 'நழுவி'யை கைகளால் பின்நகர்த்தப்பட்டு இயக்கப்படும்.
இவ்வகையான பின்னடைப்பு மற்றும் பின்னுதைப்பு இயங்குமுறையானது கைத் துப்பாக்கிகளில் மட்டுமல்லாமல், தானியக்க பீரங்கிகளிலும் காணலாம்.
-
ஒரு எம்1911–ஏ1 கைத்துப்பாக்கி முற்றிலும் கழற்றிப்பட்டு, அதன் குழலின்மேல் உள்ள பூட்டும் பொளிவாய்களை காட்டும் படம்.
-
திறந்த குழலாசனம் கொண்ட, சுவிஸ் பாராபெல்லம் ரகம் 1900 லூகர். வளைந்த நிலையில் உள்ள பூட்டும் கரம் மற்றும் இருநிலைமாற்றியை காண்க.
-
சி.சட். 52-ன் உருளை-பூட்டுகள். சுடுகையில், நழுவியும் குழலும் பின்நோக்கி நகரும், ஆனால் நழுவியின் பூட்டும் துண்டு சுட்டிக் காட்டப்பட்டுள்ள ஒரு துருத்ததால் பிடித்து வைக்கப்படும்.
திருகு அடைப்பு
தொகுசுழலும் ஆணியின் மாற்று வடிவமான திருகடைப்பு, எளிய துருத்தகளை விட மேலும் வலிமையை அளித்தது, மேலும் பின்னடைப்பை விடுவிக்க பாதியளவிலான சுழற்சியே தேவைப்படும். வெலின் பின்னடைப்பும் இதைப்போன்றது தான்; இது 4 அங்குலம் முதல் 16 மற்றும் அதற்குமேலான அங்குலம் கொண்ட கேலிபர் பீரங்கிகளில் பயன்படுத்தப்படும்.
வீழும் திருகாணி அடைப்பு
தொகுகுழலின் ஊடச்சுக்கு செங்குத்தாக செருகப்பட்டிருக்கும் ஒரு கூம்பிய திருகாணியை அடைப்பாக ஃபெர்குசன் புரிதுமுக்கி பயன்படுத்துகிறது.புதுமையாகவும் திறன்மிக்கதாக இருப்பினும், இதன் அதிக விலையால் பிரபலம் அடையாமல் போனது.
-
ஃபெர்குசன் புரிதுமுக்கி.
மேலும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- பீரங்கிகளில் பின்குண்டேற்ற இயக்கங்கள் பரணிடப்பட்டது 2013-02-08 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கிலம்)