பூட்டப்பட்ட குழலாசனம்
பூட்டப்பட்ட குழலாசனம் (ஆங்கிலம்: locked breech) என்பது, பின்குண்டேற்ற சுடுகலனுடைய இயக்கத்தின் வடிவமைப்பை விவரிக்கப் பயன்படும், சுடுகலனைச் சார்ந்த ஒரு சொல் ஆகும். ஒரு தானே-குண்டேற்றிக் கொள்ளும் சுடுகலனின் இயங்குமுறையை புரிந்துகொள்வதற்கு, இச்சொல் மிக முக்கியமானது. எளிமையாகச் சொன்னால், சுடப்படுகையில், தானே-குண்டேற்றிக்கொள்ளும் சுடுகலனின் குழலாசனம் திறக்கப்படும் வேகத்தை குறைப்பதற்கு, இதுவும் ஒரு வழி ஆகும். பின்னுதைப்பு தான், இந்த நகர்வுக்கு ஆற்றல்-மூலமாக விளங்கும் (கீழே காண்க).
எறியத்தை சுடும் எளிய தத்துவம் என்னவென்றால், அறைக்குள் உள்ள உந்துபொருள் (அதாவது பொதியுறையிலுள்ள வெடிமருந்து) பற்றவைக்கப் படுகையில், அது மிகக்குறுகிய நேரத்தில் சட்டென எரியும். இந் நிகழ்வு எறியத்தை (தோட்டா) குழலைவிட்டு வெளித்தள்ளுவதற்கு தேவையான அழுத்தத்தை உருவாக்குகிறது. இதில் மிகக்குறுகிய நேரத்தில் ஏற்படும், அழுத்தங்கள் எல்லாமுமே மிக அதிகமானதாகவே இருக்கும். இந்த அதி-அழுத்த வாயுவை சிறிதுநேரம் அடைத்து வைக்காவிடில், அது பெரும் சேதத்தை ஏற்படுத்தும். குறிப்பாக சுடுகலனின் பாகங்கள் இத்தகைய அழுத்தங்களை தாக்குப்பிடிக்காது, இதனால் சுடுநருக்கும் ஆபத்து ஏற்படலாம். 'பூட்டப்பட்ட குழலாசனம்' கொண்ட குழலின் சிறப்பம்சமே, அதில் அதி-அழுத்த வாயுவை அடைக்க முடியும் என்பது தான். உந்துபொருள் மிகக்குறுகிய நேரத்தில் எரிந்துவிடும், அதனால் உந்துதலும் மிகக்குறுகிய நேரம் தான் இருக்கும், ஆக வாயுக்கள் குழலிலேயே விரிவடைந்து குளிர்ந்துவிடும். அழுத்தம் குறைந்துவிட்டதால், எறியம் இடம்பெயர்வதால் உண்டாகும் பின்னுதைப்பு நிலைமத்தைக் கொண்டு, தானே-குண்டேற்றிக்கொள்ளும் சுடுகலனின் பின்னடைப்பு திறக்கப்படலாம்.
மற்ற வகைகளுடனான ஒப்பீடு
தொகு- பின்தள்ளுதல்: பாதுகாப்பான அளவுகளுக்கு அழுத்தம் குறையும் வரை, குழலாசனம் திறக்கப்படுவதை தாமதப்படுத்துவதற்கு, இந்த இயங்குமுறை பின்னடைப்பின் எடையைச் சார்ந்திருக்கும். இதில் இருப்பது பூட்டப்பட்ட குழல் அல்ல; குழலாசனத்தின் மேல் வெடியுறையை லேசாக அழுத்தியபடி வைத்து செயல்படும்; மேலும், அறையில் அழுத்தம் ஏற்படும்போது மட்டுமே, இது நகரும். நழுவி/பின்னடைப்பின் எடையினால் உறை சட்டென்று நகர்த்தப்படும், ஆனால் ஆபத்துமிக்க அழுத்தங்கள் வெளியேறும் அளவிற்கான வேகத்தில் அல்ல.[1]
- தாமத பின்தள்ளுதல்: இந்த இயங்குமுறை லேசான பின்னுதைப்பு கொண்டவைகளில் காணப்படும். பின்னுதைப்பு லேசான இருப்பதால், முழுமையாக பூட்டப்பட்ட குழலாசனம் அவசியமற்றது. மேலுள்ள எளிய பின்தள்ளுதல் போலவே, பொதியுறையின் நகர்வு தான் குழலாசனத்தை திறக்கிறது. இது எளிய பின்தள்ளுதலை விட உறுதியான வடிவமைப்பு ஆகும். நழுவி/பின்னடைப்பின் எதிர்ப்பு-நிலைமத்தை அதிகரித்து, பாதுகாப்பான நேரம் வரை பொதியுறையை அறைக்குள்ளேயே வைத்திருப்பதற்கு, ஒரு சுருள்வில் பூட்டிய நெம்புகோல் சிலநேரம் பயன்படுத்தப்பட்டது.[1]
- பூட்டப்பட்ட குழலாசனம்: குழலாசனம் மிக அதீத-வேகத்தில் திறக்கப்படும் அளவுக்கு, அறையிலுள்ள அழுத்தமானது அதிகாமாய் இருக்கும்பட்சத்தில், இந்த இயங்குமுறை தேர்வு செய்யப்படும். எளிய மற்றும் தாமத பின்தள்ளுதல்களில் இருப்பதை விட, அதீத வேகத்தில் திறக்கப்படும் குழலாசனத்தால், ஆயுதச் சேதம் அல்லது சுடுநருக்கு காயம் ஏற்படலாம்; இதை தவிர்க்க, பின்னடைப்பு குழலுக்குள்ளே வைத்து "பூட்டப்படும்". சுடப்படும் அத் தருணத்தில், குழலையும், நழுவி/பின்னடைப்பையும் ஒன்றாகச் சேர்த்தவாறு, நிலைமம் குறிப்பிட்ட தூரத்திற்கு அவைகளை பின்னோக்கித் தள்ளும். ஒன்றாகப் பூட்டப்பட்ட குழல் மற்றும் நழுவி/பின்னடைப்பின் ஒட்டுமொத்த எடையை, இவ் வகையான இயங்குமுறை பயன்படுத்திக் கொள்கிறது; இதன்மூலமாக வேகமான நகர்வை, அவற்றின் நிலைமம் தவிர்க்கும். இந்த பூட்டப்பட்ட இயங்குமுறையானது, ஒரு குறிப்பிட்ட தூர நகர்வுக்குப்பின் (பூட்டு) அவிழ்ந்துவிடும், இந்த இடைவேளையில் அழுத்தங்கள் நீர்த்துப் போய்விடும்.
முக்கியமான வேறுபாடு என்னவென்றால்: 'பூட்டப்பட்ட குழலாசன' இயங்குமுறையில் மிக வலுவான ஒரு பூட்டு இருக்கும்;இதற்கு மாறாக, பாதுகாப்பான இயக்கத்தை அளிப்பதற்கு, பின்தள்ளும் அமைப்புகள் சுருள்வில்கள் மற்றும் கூறுகளின் எடையை அதிகம் சார்துள்ளன. ஒரு சுடுகலனை வடிவமைப்பதற்கான நோக்கத்தைப் பொருத்து, சுடுகலன்-வடிவமைப்பாளர் அவற்றில் எவ்வகையான இயங்குமுறையை பிரயோகிப்பது என்று தீர்மானிப்பார்.[1]
பின்னுதைப்பு
தொகுநியூட்டனின் மூன்றாம் இயக்க விதியால் பின்னுதைப்புவிவரிக்கப்படும். அதாவது, ஒரு பொருளின் மீது செயல்படும் ஒவ்வொரு புறவிசைக்கும் அவ்விசைக்குச் சமமானதும், எதிர்த்திசையிலும் அமைந்த எதிர்விசை உருவாகும்.[2] ஒரு நபர் ஒரு கைத்துப்பாக்கி அல்லது புரிதுமுக்கியை சுடுகையில், இந்த விசையைத்தான் அவரின் கை அல்லது தோளில் உணர்வார்.
இயங்குநுட்பம்
தொகுகைத்துப்பாக்கிகள் மற்றும் புரிதுமுக்கிகளில் இருக்கும், பூட்டப்பட்ட குழலாசன அமைப்புகளில் நிறைய வேறுபாடுகள் உள்ளன. கைத்துப்பாக்கியின் பூட்டப்பட்ட குழலாசன அமைப்புகளின் பரிணாமத்தை விளக்கும் நான்கு கைத்துப்பாக்கிக் குழல்களை காட்டும் புகைப்படம். (படத்தில் I) ஜான் பிரௌனிங்கின் கடைசி வடிவம்; இது தான் பிரௌனிங் ஹை-பவர். படத்தில் இரண்டாவதும் கூட, இவ்வகை இயங்குமுறையை கொண்ட சி.சட். ரகம் 75 கைத்துப்பாக்கி தான். மூன்றாவது வகை குழல், எச்.கே. யு.எஸ்.பீ. கைத்துப்பாக்கி உடையது. நான்காம் குழல் (எஸ்.ஐ.ஜி. சாவர் அமைப்பை பிரயோகிக்கும்) G-லாக் உடையது.
இடதில் உள்ள படம், பூட்டும் அமைப்பின் வேறொரு வகையை காட்டுகிறது. இது தான் 'பீ.எக்ஸ்.4 ஸ்டார்ம்' கைத்துப்பாக்கியில் காணப்படும், பெரெட்டா சுழன்றுப் பூட்டிக்கொள்ளும் அமைப்பு ஆகும். வலதில் உள்ள அடுத்த படம், சி.சட். ரகம் 52 உடைய உருளை-பூட்டு அமைப்பை காட்டுகிறது. சில மூலங்களில், இதை தாமத பின்தள்ளும் இயங்குமுறை என தவறாக விவரிக்கப்பட்டுள்ளது, அனால் உண்மையில் இது ஒரு பூட்டப்பட்ட குழலாசனம் ஆகும்.
குறுகிய மற்றும் நீண்ட பின்னுதைப்பு - ஓர் ஒப்பீடு
தொகுகைத்துப்பாக்கிகள் போன்று, அளவில் சிறிய சுடுகலன்கள் பிரயோகிக்கும் பின்னுதைப்பு-அமைப்பினை, குறுகிய பின்னுதைப்பு என்பர்.[1][3] சிறிய கேலிபர்களுக்கு இதுவே போதுமானது. பிரௌனிங் எம்.2.எச்.பி. .50-கேலிபர் போன்று, பெரிய அளவிலான சுடுகலங்களில் கிட்டத்தட்ட அதேபோன்ற அமைப்புகளை நீண்ட பின்னுதைப்பு என்பர். ஒரு வெடிப்புக்குப் பின்பு, எவ்வளவு தூரம் குழலாசனம் நகர்கிறது, என்பது தான்; இவை இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசம்.
பூட்டப்பட்ட பின்னுதை அமைப்புகளில், பாதுகாப்பான இயக்கத்தை அளிக்க, சரியான நேரகணிப்பை தான் அவை சார்ந்து இருக்கும். நகரும்-விகிதத்தை மந்தமாக்க மற்றும் சுடும்-விகிதத்தை குறைக்க, (துணை-எந்திர துப்பாக்கிகளில் உள்ளது போல) ஒரு மிகக் கனமான ஆணி இயங்குமுறையை பயன்படுத்தலாம்.[4] இருப்பினும் அதிவேக மற்றும் அதிக-ஆற்றல் வெடிபொதிகள், இதற்கு விதிவிலக்கு. புரிதுமுக்கிகள் மற்றும் பெரும்பாலான கைத்துப்பாக்கிகளில் பின்னுதைப்பை பாதுகாப்புடன் கட்டுப்படுத்துவதற்கு, பூட்டப்பட்ட குழலாசன அமைப்புகள் பயன்படுத்துகின்றன.
பாதுகாப்பை உறுதிபடுத்த -- கூறுகளின் திணிவு, சுருள்வில்களின் வலிமை,[5] மற்றும் குழலும், நழுவியும் பின்நகர்வதற்கு அனுமதிக்கப்படும் தூரம், ஆகியவற்றை கவனமாக கணித்து, சோதிக்கப்படும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 Becke Martin Davis (May 23, 2014). "How "Automatic" Pistols Really Work by Adam Firestone". Romance University. Archived from the original on ஆகஸ்ட் 16, 2016. பார்க்கப்பட்ட நாள் July 5, 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Newton's Three Laws of Motion". utk.edu. பார்க்கப்பட்ட நாள் 4 July 2016.
- ↑ Editor, The (7 September 2010). "Firearms History, Technology & Development: Actions: Recoil Action: Short Recoil Operation". firearmshistory.blogspot.com. பார்க்கப்பட்ட நாள் 4 July 2016.
{{cite web}}
:|last=
has generic name (help) - ↑ "MP38 (Maschinenpistole 38) - Development and Operational History, Performance Specifications and Picture Gallery". militaryfactory.com. பார்க்கப்பட்ட நாள் 4 July 2016.
- ↑ "How Recoil Spring Rate Affects Timing - Shooting Times". shootingtimes.com. 7 January 2015. பார்க்கப்பட்ட நாள் 4 July 2016.