கேலிபர்
துப்பாக்கிகளில், கேலிபர் (ஆங்கிலம்: caliber) என்பது, ஒரு அங்குலத்தை நூறு (சிலசமயம் ஆயிரம்) சமபாகங்கள் ஆக வகுத்து அளக்கப்படும், குழலின் உத்தேச உள்விட்டம், அல்லது அதிலிருந்து சுடப்படும் எறியத்தின் விட்டம் ஆகும். உதாரணமாக, ஒரு "45 கேலிபர்" சுடுகலனின் குழல் ஆனது, ஒரு அங்குலத்தில் 0.45 மடங்காக இருக்கும். "9 மிமீ கைத்துப்பாக்கி" என சொல்வதுபோல, குழல் விட்டத்தை மெட்ரிக் முறையிலும் குறிப்பிடலாம். குழல் விட்டத்தை அங்குலத்தில் குறிப்பிடும்போது, "கேல்" (கேலிபரின் சுருக்கம்) என்றும் குறிப்பிடலாம். உதாரணமாக, ஒரு அங்குலத்தில் 0.22 மடங்கு அளவை குழல் விட்டமாக கொண்ட சுடுகலனை .22 அல்லது .22 கேல் என எழுத்தில் குறிப்பிடுவர்; ஆனால் பேச்சு வழக்கில் பதின்மப் புள்ளியை சொல்லாமல், "இருபத்திரண்டு கேலிபர்" அல்லது "ஈரிரண்டு கேலிபர் புரிதுமுக்கி" என்று தான் சொல்வர்.
ஒரு மரையிட்ட குழலில், எதிரெதிரில் உள்ள பள்ளங்கள் அல்லது மேடுகளுக்கு இடையேயான தூரம் அளக்கப்படும்; ஐக்கிய அமெரிக்காவில் வெடிபொதி விவரிப்பில், பள்ள அளவீடுகள் பொதுவானவை; ஆனால் மற்ற இடங்களில் மேட்டின் அளவீடுகள் தான் பொதுவானவை. சிறப்பான செயல்பாட்டிற்கு, குழலின் பள்ள-விட்டத்தோடு தோட்டா நெருக்கமான பொறுத்தத்துடன் இருக்க வேண்டும்.
நவீன வெடிபொதிகள் மற்றும் அவற்றை சுடும் சுடுகலன்களை, பொதுவாக பொதியுறையின் பெயரால் குறிக்கப்பட்டாலும், அவை குழல் விட்டத்தை சார்ந்து இருப்பவை தான் உண்மை. உதாரணமாக, ஒரு சுடுகலனை "30 கேலிபர் புரிதுமுக்கி" என சொல்லும்போது, .30-அங்குல எறியத்தை கொண்டிருக்கும் பலவகையான பொதியுறைகளில் எதை வேண்டுமானாலும், அத்துப்பாக்கியை கொண்டு சுடலாம்; மற்றொரு எடுத்துக்காட்டாக, "22 விளிம்படி" என சொல்லப்படும் சுடுகலனில் இருந்து, 22-கேல் எறியத்தை கொண்டிருக்கும் எந்த ஒரு விளிம்படி வெடிபொதியையும் சுடலாம்.
17 முதல் 50 வரையிலான கேலிபர்களை (4.5-12.7 மிமீ) தவிர, மற்ற கேலிபர்களும் இருக்கின்றன, ஆனால் அவை எப்போதாவது தான் காணப்படும்.
பீரங்கிகளை பொறுத்தவரையில், "கேலிபர்" என்பது குழல்-விட்டத்தின் பன்மடங்காக, குழல்-நீளத்தை விவரிக்க பயன்படுத்தப்படும். ஓர் "5-அங்குல 50 கேலிபர்" பீரங்கி ஆனது, 5 அங்குல (12.7 செமீ) குழல்-விட்டமும், 5 அங்குலத்தின் 50 மடங்கான = 250 அங்குல (6.35 மீ) குழல்-நீளத்தையும் கொண்டிருக்கும்.
வெடிபொதிக்கு பெயரிடும் வழக்கங்கள்
தொகுபிரத்தியேகமாக வரையறுக்கப்பட்ட பெயரிடும் வழக்கங்கள் ஏதும் இல்லாத காலத்தில், முற்கால சுடுகலன்களின் உற்பத்தியாளர்களே அவரவர் விருப்பத்திற்கு வெடிபொதிகளுக்கு பெயரிட்டனர். அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது இருந்த வெடிபொதிகளுக்கு குழல் விட்டதை சாராமல், அறையின் அளவை சார்ந்த பெயரிடப்பட்டு இருந்தன. "எண். 56" என்ற முற்கால வெடிபொதி, .56 அங்குல அறை-விட்டத்தை குறிக்கும்; ஆனால் குழல்-விட்டம் .52 முதல் .54 அங்குலம் வரை இருந்துள்ளது. பின்னர் அதே பொதியுறையில், இன்னும் சிறு-விட்டம்முடைய தோட்டாக்களை கொண்டு பல வழிப்பொருட்கள் உருவாகின; இவை வாய் மற்றும் அடி விட்டத்தை சேர்த்து பெயரிடப்பட்டன. எண். 56 என்பது .56-56 ஆக மாறி, அதன் வழிவந்த சிறிய வடிவங்கள், .56-52, .56-50, மற்றும் .56-46 என்ற பெயரை பெற்றன. இந்த புதிய கேலிபர்களில் மிகுந்த பொதுவான .56-52, 50-கேல் தோட்டாவை பிரயோகித்தது.
இதர வெடிமருந்து-யுகத்தின் வெடிபொதிகளின் பெயரிடும் முறையும், இதே போன்று தான் எழுதப்பட்டன; ஆனால் குறிக்கப்படும் அளவுகள் வேறு ஆகும். .45-70, .44-40, .32-20 ஆகியவைகளில், ஒரு அங்குலத்தின் நூறு-பாகங்களாக அளக்கப்படும் தோட்டாவின் விட்டம்மும், அதிலிருக்கும் வெடிமருந்தின் எடையும் (தானிய எடை (கிரெய்ன்)-ல்) பெயராக இருந்தன.
மெட்ரிக் அளவியலில், குழல்-விட்டம் மற்றும் பொதியுறையின் நீளத்துக்கும் இடையில் "×" குறியுடன் எழுதப்படும்; உதாரணமாக, 7.62×51 நேட்டோ. இதன் பொருள், 51 மிமீ நீளமுள்ள உறையில், 7.62 மிமீ குழல் (மேடுகளுக்கு இடையேயான) விட்டத்தை குறிக்கிறது. இதேபோல், 6.5×55 சுவீடிஷ் வெடிபொதியும், 6.5 மிமீ குழல்-விட்டம் மற்றும் 55 மிமீ நீள உறையை கொண்டிருக்கும்.
மரையிட்ட குழலை அளக்கும் விதமும் மாறுபடும், அதாவது மரையின் பள்ளம் அல்லது மேட்டின் விட்டம் பொருத்து மாறுபடும். இதனால்தான், மேடுகளை வைத்து அளக்கப்படும் .303 பிரித்தானியஷில் (7.70 மிமீ), .311-அங்குல (7.90 மிமீ) தோட்டாவை தான் பிரயோகிக்கும். அளவில் இதைப்போன்றே இருந்தாலும் .308 வின்செஸ்டரில், பள்ளத்தை வைத்து அளப்பதால், அது .308-அங்குல (7.82 மிமீ) விட்டம்முடைய தோட்டாக்களை பிரயோகிக்கும்.
மெட்ரிக் மற்றும் ஆங்கிலேய முறை
தொகுகீழேயுள்ள அட்டவணையில் சில பொதுவாக பிரயோகிக்கப்படும் கேளிபர்களின் அளவுகளை மெட்ரிக் மற்றும் ஆங்கிலேய முறையில் கொடுக்கப்பட்டுள்ளன.
அங்குல கேலிபர் | மெட்ரிக் கேலிபர் | உத்தேச தோட்டா விட்டம் | பொதுவான வெடிபொதிகள் | குறிப்புகள் |
---|---|---|---|---|
.172 | 4 மிமீ | 0.172 அங். | .17 எச்.எம்.ஆர்., .17 ஹார்னெட், .17 ஆக்லீ ஹார்னெட், .17 வின்செஸ்டர் சூப்பர் மேக்னம், .17-32 மேக்னம், .17 வி.எச்.ஏ., .17 ரெமிங்டன், .17/222, .17 மாக் III-IV, .17 ஆக்லீ இம்ப்ரூவ்டு பீ, .17-357 ஆர்.ஜி., .17 ரெமிங்டன் ஃபையர்பால், .17 இன்சினரேட்டார், 4.39x39ஆர் மிமீ எஸ்.பீ.எஸ்| | |
.20, .204 | 5 மிமீ | 0.204 அங். | .204 ரூகர், 5 மிமீ ரெமிங்டன் விளிம்படி மேக்னம் | |
.221 | 5.45 மிமீ | .221 அங். | 5.45×39 மிமீ ரஷ்ய குடும்பம் | ரஷ்ய மில் std |
.22 | 5.6 மிமீ | .223 அங். | .22 ஷார்ட், .22 லாங், .22 லாங் ரைஃபிள், .22 ஸ்டிங்கர், 22 எக்ஸ்ட்ரா லாங், .297/230 மோரிஸ் எக்ஸ்ட்ரா லாங், .22 ஹார்னெட், .22 ரெம் ஆட்டோமாடிக், 5.66 x39 எம்.பீ.எஸ்., .22 ரெம் ஜெட் | |
.224 | 5.7 மிமீ | .224 அங். | .218 பீ, .219 சிப்பர், .22 ஹார்னெட்-கே, .220 ஸ்விப்ட், .222 ரெமிங்டன், .222 ரெமிங்டன் மேக்னம், .223 ரெமிங்டன், 5.56×45மிமீ நேட்டோ, 5.7×28 மிமீ, .22 டீ.சி.எம்., 5.8×42 மிமீ சீனம், .224 வெதர்பை மேக்னம், .225 வின்செஸ்டர், .223 வின்செஸ்டர் சூப்பர் ஷார்ட் மேக்னம் (வழக்கொழிந்தது), .223 ஆக்லீ இம்ப்ரூவ்டு, .219 டானால்டுசன் வாஸ்ப், .221 ரெமிங்டன் ஃபையர்பால், .22-250 ரெமிங்டன் மற்றும் பல. | |
.243 | 6 மிமீ | 0.243 அங். | .243 வின்செஸ்டர், .244 ரெமிங்டன், 6மிமீ ரெமிங்டன், 6 மிமீ பிளாஸ்டிக் ஏர்சாஃப்ட் BB-கள், 6மிமீ விஸ்பர், 6மிமீ பீ.பீ.சி., 6மிமீ பெஞ்ச் ரெஸ்ட் ரெமிங்டன், 6x45மிமீ, 6x47மிமீ, 6மிமீ ச்சீட்டா, .240 வெதர்பை, 6x62 ஃப்ரேர்ஸ், 6மிமீ நார்மா BR, 6XC டப், 6மிமீ JDJ, 6மிமீ SAW, 6-250 வாக்கர், 6.17 ஸ்பிட்ஃபையர், 6.17 ஃபிளாஷ், 6மிமீ லீ நேவி, மற்றும் பல. | |
.25 | 6.35 மிமீ | 0.25 அங்., 6.35 மிமீ | .25 ஏ.சி.பீ., 6.35×16மிமீSR | அல்லது .25 ஆட்டோ மற்றும் 6.35மிமீ புரௌனிங் |
.26 | 6.5 மிமீ | 0.264 அங்., 6.7 மிமீ | 6.5×55மிமீ, .260 ரெமிங்டன் | இவ் வெடிபொதிகள் பொதுவாக '6.5மிமீ' என அறியப்படும். |
.27 | 6.8 மிமீ | 0.277 அங்., 7.035 மிமீ | .270 வின்செஸ்டர், 6.8மிமீ எஸ்.பீ.சி. | |
.284 | 7 மிமீ | 0.284 அங்., 7.213 மிமீ | .280 ரெமிங்டன், 7மிமீ-08 ரெமிங்டன், 7மிமீ ரெமிங்டன் மேக்னம், 7×57மிமீ மௌசர், 7×64மிமீ | பொதுவாக '7மிமீ' என அறியப்படும். |
.308 | 7.62 மிமீ | 0.308 அங்., 7.82 மிமீ | .30 லூகர் (7.65 x 21மிமீ லூகர்), .30-30 வின், 30 ஹெரெட்டு, .300 விஸ்பர், .30-378 வெதர்பை, 7.63 மேன்லிச்சர்-ஷுனௌவர், 7.63 மௌசர், .30 யு.எஸ்.ஏ விளிம்பற்றது, .308 கார்-பான், .3-9 சாவேஜ், .30 குர்ஃஸ், .300 ஏ.ஏ.சி. ப்லாக்அவுட், 7.5மிமீ ஷ்மிட்-ரூபின், .300 வின்செஸ்டர் மேக்னம், .30 கார்பைன், 309 JDJ, .30-06 ஸ்ப்ரிங்ஃபீல்டு, .30-06 JDJ, .307 ஜி.என்.ஆர்., .308 வின்செஸ்டர் (7.62 x 51 நேட்டோ), .300 வெதர்பை மேக்னம், .30 ஆர்மி (.30-40 க்ராகு), 7.82மிமீ லாஃஸெரோனி, மற்றும் பல. | |
.311 | 7.9 மிமீ | 0.311 அங்., 7.92 மிமீ | .303 பிரித்தானிய, 7.62×39மிமீ சோவியத், 7.62×54மிமீ ஆர், 7.62×25மிமீ, 7.7×58மிமீ | 7.62×54மிமீ ஆர் என்பது உண்மையில் 7.92 மிமீ (மோசின், SVD, PKM, முதலியன) ஆகும். 7.62×39மிமீ-க்கும் (AK-47, AKM, முதலியன) இது பொருந்தும் |
.323 | 8 மிமீ | 0.323 அங்., 8.20 மிமீ | 8×57மிமீ ஐ.எஸ்., .325 WMS, 8மிமீ ரெமிங்டன் மேக்னம், 8 மிமீ பிளாஸ்டிக் (ஏர்சாஃப்ட்) BB-கள் | .32 கேலிபர் புரிதுமுக்கி வெடிபொதிகள் |
.338 | 8.6 மிமீ | 0.338 அங். | .338 லப்புவா, .338 நார்மா மேக்னம், .338 வின்செஸ்டர் மேக்னம், .338-378 வெதர்பை மேக்னம் | சி14 டிம்பர்வுல்ஃப் (கனடாப் படைகள்) |
.355 | 9 மிமீ | 0.355 அங். | 9மிமீ அல்ட்ரா, 9மிமீ பேயார்டு லாங், 9மிமீ பிரௌனிங் லாங், 9மிமீ மௌசர், 9மிமீ வின்செஸ்டர் மேக்னம், 9மிமீ கிளிசென்ட்டி, 9மிமீ லூகர், 9 x 21மிமீ, 9 x 23மிமீ வின்செஸ்டர், 9மிமீ மி-புல்லட், 9மிமீ ஸ்டேய்ர், .356 டீம் சுமித் & வெஸ்ஸன், 9மிமீ ஃபெடரல், 9மிமீ x 25மிமீ டில்லன், 9மிமீ ஆக்ஷன் எக்ஸ்பிரஸ் | |
.356 | 9 மிமீ | 0.356 அங். | 9மிமீ குர்ஃஸ் (.380 ஏ.சி.பீ.), 9மிமீ x 56மிமீ மேன்லிச்சர்-ஷுனௌவர், 9மிமீ x 57மிமீ மௌசர் | |
.357 | 9 மிமீ | 0.357 அங். | .38 சூப்பர், .38 ஸ்பெஷல், .357 மேக்னம், .357 எஸ்.ஐ.ஜி., .35 ரெமிங்டன் | "38" எனப்படும் கைத்துப்பாக்கி வெடிபொதிகள் எல்லாம், .357 கேலிபர் ஆகும். |
.363 | 9 மிமீ | 0.363 அங். | 9மிமீ x 18மிமீ மக்கரௌ | |
.365 | 9.3 மிமீ | 0.365 அங். | 9.3×62மிமீ, 9.3×64மிமீ பிரென்னேக்கெ, 9.3×72மிமீ ஆர், 9.3×74மிமீ ஆர் | |
.375 | 9.5 மிமீ | 0.375 அங்., 9.53 மிமீ | .375 எச்&எச் மேக்னம், 9.5×57மிமீ மேன்லிச்சர்-ஷுனௌவர் (.375 விளிம்பற்ற நைட்ரோ எக்ஸ்பிரஸ் (RNE) × 2¼) | |
.40 | 10 மிமீ கேலிபர் | 0.400 அங். | .40 எஸ்&டபள்யு, 10மிமீ ஆட்டோ | |
.44 | 10.9 மிமீ | 0.429 அங். | .444 மார்லின், .44 S&W ரஷ்யன், .44 S&W ஸ்பெஷல், .44 ரெமிங்டன் மேக்னம், .44 ஆட்டோ மேக், .440 கார்-பான், .44/454 JDJ வுட்ஸ்வாக்கர் | |
.45 | 11.43 மிமீ | 0.451–0.454 அங். | .45 ஏ.சி.பீ., .45 ஜி.ஏ.பீ., .454 கெசுல், .45 லாங் கோல்ட், .455 வெப்லீ | தோட்டாவின் விட்டம் ஆனது, தோட்டாவின் வகை/பொருளை சார்ந்தது. பொதுவாக முழு உலோக மேலுறை (FMJ) தோட்டாக்களுக்கு 0.451, மற்றும் ஈயத் தோட்டாக்களுக்கு 0.454 ஆகும். |
.50 | 12.7 மிமீ | 0.510 அங்., 12.95 மிமீ | .50 பி.எம்.ஜி., .50 அக்ஷன் எக்ஸ்பிரஸ், 12.7×108மிமீ | எம்2 பிரௌனிங் இயந்திரத் துமுக்கி மற்றும் இதர கனரக இயந்திரத் துப்பாக்கிகள், அதி-வீச்செல்லைப் புரிதுமுக்கிகள் மற்றும் டெசட் ஈகிள் கைத்துப்பாக்கி. |
சிதறுதுமுக்கிகள்
தொகுஇதை ஒத்த கூற்றான, கேஜ்ஜின் அடிப்படையில் சிதறுதுமுக்கிகள் வகைபடுத்தப் படுகின்றன. ஒரு சிதறுதுமுக்கியின் கேஜ் என்பது, எடையில் ஒரு பவுண்டுக்கு நிகரான, (குழலின் விட்டத்தை தன்னுடைய விட்டமாகக் கொண்ட) ஈய உருண்டைகளின் எண்ணிக்கையை குறிப்பதாகும். ஓர் 12-கேஜ் சிதறுதுமுக்கியை பொறுத்தவரை, சிதறுதுமுக்கியின் குழலை ஒத்த விட்டம் கொண்ட 12 குண்டுகள் சேர்ந்தால் தான், ஒரு பவுண்டுக்கு நிகரான எடை இருக்கும்.
நீளத்தின் அளவீடாக, கேலிபர்
தொகுபீரங்கிக் குழல்களின் நீளத்தை எப்போதும் குழல்-விட்டத்தின் பன்மடங்காக விவரிக்கப்படும். எ.கா. ஓர் 50 கேலிபர் 4-அங்குல பீரங்கி ஆனது, 4 அங். x 50 = 200 அங். குழல்-நீளத்தை கொண்டிருக்கும். ஓர் 50 கேலிபர் 16 அங்குல பீரங்கி (16 அங்குல விட்டமுள்ள எறியம்) ஆனது, 16 அங். x 50 = 800 அங். (66 அடி 8 அங்.) குழல்-நீளத்தை கொண்டிருக்கும்.
மேலும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Accurate (2000). Accurate Smokeless Powders Loading Guide (Number Two (Revised) ed.). Prescott, AZ: Wolfe Publishing. p. 392. barcode 94794 00200.
- ↑ "Pistol and Rifle Lead Bullets". Archived from the original on 2020-10-05. பார்க்கப்பட்ட நாள் 2017-06-02.
- ↑ "Rifle Bullets". Archived from the original on 2020-10-05. பார்க்கப்பட்ட நாள் 2017-06-02.
- ↑ "LeadSafe Total Copper Jacket ("TCJ") Bullet List". Archived from the original on 1999-02-18. பார்க்கப்பட்ட நாள் 2017-06-02.
- ↑ Frank C Barnes (2015). Cartridges of the World (14th ed.). Gun Digest Books. பார்க்கப்பட்ட நாள் 14 July 2016.