கேஜ் (குடைவு விட்டம்)
கேஜ் (ஆங்கிலம்: gauge) என்பது, துப்பாக்கிக் குழலின் உள்விட்டத்தை (குடைவு விட்டம்) விவரிக்க பயன்படும் ஒரு அலகு ஆகும். சுடுகலனின் குழலுள் பொறுந்துகின்ற, ஈயத்தால் ஆன, ஒரு திண்மக் கோளத்தின் எடையில் இருந்து தான் கேஜ் தீர்மானிக்கப் படுகிறது; மேலும் இது (கேஜ்), ஒரு பவுண்டின் பின்னப்பகுதியாக அளக்கப்படும் (கோளத்தின்) எடையின், பெருக்கல் நேர்மாறாக எழுதப்படும், எ.கா., ஒரு 12-கேஜ் குடைவுடன், ஒன்றின்கீழ்-பன்னிரண்டு பவுண்டு எடையுள்ள பந்து தான் பொறுந்தும். ஆக ஒரு பவுண்டுக்கு, பன்னிரண்டு 12-கேஜ் குண்டுகள் இருக்கும். இச்சொல் பீரங்கி அளவையியலில் இருந்து வந்தது; பீரங்கிகளும் அதன் இரும்புக் குண்டினை வைத்து தான் அளக்கப்பட்டன, எ.கா. ஒரு 8 பவுண்டர், 8 பவுண்டு (3.6 கிகி) பந்தை சுடும்.
இன்று சிதறுதுமுக்கிகளை குறிப்பிடுவதற்கு, கேஜ் பொதுவாக பயன்படுத்தப் படுகிறது.
கேஜ்ஜை சுருக்கமாக "கே." (ஆங்கிலத்தில், "ga.", "ga", அல்லது "G") என குறிப்பிடலாம். எழுதுகையில் எண்ணையும், சுருக்கத்தையும் சேர்த்து எழுத வேண்டும், எ.கா. "12கே" (ஆங்கிலத்தில், "12ga").
கேஜ் கணித்தல்
தொகுஒரு n-கேஜ் விட்டம் உள்ள ஈயப் பந்தின் (அடர்த்தி 11.3 கி/செமீ3 அல்லது 6.6 அவு/அங்3) திணிவு, சர்வதேச ஏவர்தெபுவா (avoirdupois) பவுண்டின் (454 கிராம்) 1/n பாகம் ஆக இருக்கும், அதாவது, ஒரு பவுண்டு எடையுள்ள ஈயத்தை கொண்டு, ஒரே மாதிரியான n ஈயப் பந்துகளை வார்க்க முடியும். ஆக, ஒரு n-கேஜ் சிதறுதுமுக்கி அல்லது n-போர் புரிதுமுக்கியின் தோராயமான குடைவு விட்டத்தை (அங்குலத்தில்) அளிக்கும் சூத்திரம் பின்வருமாறு:
dn-ன் மதிப்பை தரும், கணித சூத்திரத்தின் தெளிவுரை:
- ஒவ்வொரு பந்தின் திணிவை அறிய, 454-ஐ (1 பவுண்டு ஏவர்தெபுவாவில் நிகரான கிராம்) n-ஆல் வகுக்கவும்.
- பந்தின் கனவளவை அறிய, அதை 11.3-ஆல் (ஈயத்தின் அடர்த்தி) வகுக்கவும்.
- சென்டிமீட்டரில், அதன் ஆரத்தை அறிய, அதை ௦.75-ஆல் பெருக்கி, பை-ஆல் வகுத்தபின், அதன் கனமூலத்தை (கோள கனவளவின் சூத்திரத்தில் இருந்து) அறியவும்.
- சென்டிமீட்டரில் விட்டத்தை அறிய, அதை 2-ஆல் பெருக்கவும்.
- அங்குலத்தில் விட்டத்தை அறிய, அதை 2.54-ஆல் வகுக்கவும்.
இதை எளிய பாணியில் எழுதினால்:
n-கேஜ் சிதறுதுமுக்கியுடைய குழலின் உள்-விட்டத்தை (அங்குலத்தில்), இதை கொண்டு கணிக்கலாம்.
ஆக, விட்டம் அங்குலத்தில் இருக்குமானால்,
கேஜ் அளவுச் சூத்திரத்தின் மற்றொரு ஆதாரத்தை, குண்டுபொதி பக்கத்தில் காண்க.
பயன்பாட்டில் உள்ள அளவுகள்
தொகுஐக்கிய அமெரிக்காவின் ஒட்டுமொத்த சிதறுதுமுக்கிச் சந்தையில் 50%-க்கு மேல் ஆக்கிரமித்துள்ள, 12 கேஜ் தான் மிக பொதுவான அளவு ஆகும்[1]. இதற்கு அடுத்தபடியாக, 28 கேஜ் மற்றும் .410 போர் ஆகியவை உள்ளன. 10 கேஜ் மற்றும் 16 கேஜ், குறைந்த பயன்பாட்டில் இருந்தாலும், ஐக்கிய அமெரிக்காவில் எளிதில் கிடைக்கக் கூடியதே ஆகும்.
8 மற்றும் 4 கேஜ் போல, 10 கேஜ்ஜுக்கும் அதிகமான அளவுகளில் சிதறுதுமுக்கிகள் மற்றும் குண்டுபொதிகள், அரிதாகவே உள்ளன. ஐக்கிய அமெரிக்காவில், சில உற்பத்தியாளர்கள் மட்டுமே இது போன்ற பெரிய கேஜ்களை தயாரிக்கின்றனர்.
11, 15, 18, 2, மற்றும் 3 கேஜ் குண்டுபொதிகள் எல்லாம் அரிதிலும் அரிதானவை.[2]
அளவுமாற்ற வழிகாட்டி
தொகுபலவகை கேஜ் அளவுகளை மற்றும் அவற்றின் எடையையும் கொண்டுள்ள அட்டவணை பின்வருமாறு. சில நேரங்களில் சாரட் வண்டியின் பாதுகாப்புக்காக செய்யப்பட்ட பிளந்தர்பசு துப்பாக்கிகள், 4 கேஜ்ஜை கொண்டிருந்தது. .410 போர் மற்றும் 23மிமீ கேலிபர் ஆகியவை மட்டும் விதிவிலக்கு; அவை உண்மையில் குடைவின் அளவுகள் ஆகும், கேஜ் அல்ல. .410 மற்றும் 23மிமீ, ஆகிய இரண்டையும் வழக்கமான முறையில் அளக்கும் பட்சத்தில், முறையே 67.62 கேஜ் மற்றும் 6.278 கேஜ் ஆக இருக்கும்.
கேஜ் (குடைவு) |
விட்டம் | கலப்பில்லாத (தூய) ஈய பந்தின் எடை | |||
---|---|---|---|---|---|
(மிமீ) | (அங்.) | கிராம் | அவுன்சு | கிரெய்ன் | |
AA* | 101.60 | 4.000 | 6225.52 | 219.6 | 96,080 |
A½* | 76.20 | 3.000 | 2626.39 | 92.64 | 40,530 |
0.25* | 67.34 | 2.651 | 1814.36 | 64.000 | 28,000 |
0.5* | 53.45 | 2.103 | 907.18 | 32.000 | 14,000 |
A* | 50.80 | 2.000 | 778.19 | 27.45 | 12,010 |
0.75* | 46.70 | 1.838 | 604.80 | 21.336 | 9328 |
1* | 42.42 | 1.669 | 453.59 | 16.000 | 7000 |
B½* | 38.10 | 1.500 | 328.3 | 11.58 | 5066 |
1.5* | 37.05 | 1.459 | 302.39 | 10.667 | 4667 |
2* | 33.67 | 1.326 | 226.80 | 8.000 | 3500 |
3* | 29.41 | 1.158 | 151.20 | 5.333 | 2333 |
4 | 26.72 | 1.052 | 113.40 | 4.000 | 1750 |
B* | 25.40 | 1.000 | 97.27 | 3.43 | 1501 |
5* | 24.80 | .976 | 90.72 | 3.200 | 1400 |
6* | 23.35 | .919 | 75.60 | 2.667 | 1166 |
6.278 | 23.00 | .906 | 72.26 | 2.549 | 1114 |
7* | 22.18 | .873 | 64.80 | 2.286 | 1000 |
8 | 21.21 | .835 | 56.70 | 2.000 | 875 |
9* | 20.39 | .803 | 50.40 | 1.778 | 778 |
10 | 19.69 | .775 | 45.36 | 1.600 | 700 |
11* | 19.07 | .751 | 41.24 | 1.454 | 636 |
12 | 18.53 | .729 | 37.80 | 1.333 | 583 |
13* | 18.04 | .710 | 34.89 | 1.231 | 538 |
14 | 17.60 | .693 | 32.40 | 1.143 | 500 |
15* | 17.21 | .677 | 30.24 | 1.067 | 467 |
16 | 16.83 | .663 | 28.35 | 1.000 | 438 |
17* | 16.50 | .650 | 26.68 | 0.941 | 412 |
18* | 16.19 | .637 | 25.20 | 0.889 | 389 |
20 | 15.63 | .615 | 22.68 | 0.800 | 350 |
22* | 15.13 | .596 | 20.62 | 0.728 | 319 |
24 | 14.70 | .579 | 18.90 | 0.667 | 292 |
26* | 14.31 | .564 | 17.44 | 0.615 | 269 |
28 | 13.97 | .550 | 16.20 | 0.571 | 250 |
32 | 13.36 | .526 | 14.17 | 0.500 | 219 |
36 | 12.85 | .506 | 12.59 | 0.444 | 194 |
40 | 12.40 | .488 | 11.34 | 0.400 | 175 |
67.62 | 10.41 | .410 | 6.71 | 0.237 | 104 |
மேலும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Carter, Greg Lee (2002). Guns in American Society: An Encyclopedia. Santa Barbara, Calif.; Oxford: ABC-CLIO. p. 361. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-57607-268-4.
- ↑ Frank C. Barnes (2009), Layne Simpson editor, Cartridges of the World, 12th Ed.