பிளந்தர்பசு

குண்டுக்குழாய்/ குண்டுக்குழல்/ பிளந்தர்பசு (blunderbuss)  என்பது குறைந்த குழல் நீளமும், பெரிய குழல் விட்டமும், கொண்ட வாய்வழி-குண்டேற்ற சுடுகலன் ஆகும். இதன் சன்னவாய்ப் பகுதி வெளிப்புறமாக விரிந்து காணப்படும். தகுந்த எண்ணிக்கையில் மற்றும் அளவுகளில் உள்ள சின்னசிறு ஈய குண்டுகளை இதில் எறியமாக பயன்படுத்தினர். இராணுவம் மற்றும் தற்காப்பிற்கு பயன்பட்ட பிளந்தர்பசை, குண்டுதுமுக்கியின் ஆரம்ப வடிவம் எனலாம்.[1] இலக்கு நெருக்கமாக இருந்தால் இதன் தாக்கம் மிகுதியாக இருக்கும்; ஆனால் தொலைவிலுள்ள இலக்குகளை தாக்கும் அளவிற்கு இது துல்லியத்தன்மையை கொண்டில்லை. பிளந்தர்பசின் கைத்துப்பாக்கி வடிவத்தை தான் டிராகன் என்றனர், இதை ஏந்திப் போரிடும் துருப்புகளை டிரகூன் என குறிப்பிட்டனர்.[2][3]

ஓர் ஆங்கிலேய தீக்கல்-இயக்க பிளந்தர்பசு 

சொற்பிறப்பு தொகு

 
ஸ்ரீரங்கப்பட்டணத்தின் திப்பு சுல்தானுக்காக உருவாக்கிய ஓர் தீக்கல்-இயக்க பிளந்தர்பசு, 1793–1794. திப்பு சுல்தான் பல மேற்கத்திய கைவினைஞர்களை பயன்படுத்தினார், மேலும் இந்த துமுக்கி அக் காலத்தில் இருந்த மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை காட்டுகிறது.[4]

"பிளந்தர்பசு" என்ற சொல், டச்சுச் சொல்லான donderbus-ல் இருந்து வந்தது. donder என்றால் "இடி", மற்றும் bus என்றால் "குழாய்" என பொருள். (நடு டச்சு: busse, பெட்டி, குழல், பிற்கால இலத்தினில் இருந்து, buxis, பெட்டி,[1] பண்டைய கிரேக்கத்தில் இருந்து pyxίs (πυξίς), பெட்டி: (குறிப்பாக மரப்பெட்டி).

கட்டமைப்பு  தொகு

 
இஸ்பங்கோல் என்றழைக்கப்பட்ட, ஒரு பிரெஞ்சு பிளந்தர்பசு, 1760, பிரான்சு.

பிளந்தர்பசை குண்டுத்துமுக்கியின் ஆரம்ப வடிவம் எனலாம், ஏனெனில் இவையிரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இயங்கின. குழல் விட்டத்தைவிட சிறிய அளவிலான, நிறைய  ஈய உருண்டைகளை கொண்டு தான் பிளந்தர்பசு பொதுவாக குண்டேற்றப்படும். குழல்கள் எஃகு அல்லது பித்தளையால் செய்யப்பட்டிருக்கும்.

சன்னவாய் (பலவற்றில் குழலும் கூட) விரிவடைந்து இருக்கும்படி இது வடிவமைக்கப்படும். இந்த விரிந்த வடிவின் நோக்கம், குண்டுகள் சிதறும் பரப்பை உயர்த்துவதற்கு மட்டுமல்லாது; வண்டியில் இருந்தோ அல்லது குதிரையின்மீது இருந்தோ, குண்டேற்றுவதை எளிதாக்குவதற்கும் தான். விரிந்த சன்னவாய் வடிவம், குண்டுகளின் சிதறலை எந்த வகையிலும் பாதிக்காது என்று நவீன செய்முறைகளால் நிருபிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பிளந்தர்பசின் விரிந்த சன்னவாய் தான், பெரிய கேலிபர் குறும்மசுகெத்தில் இருந்து அதை  வேறுபடுத்திக் காட்டும் அம்சம் ஆகும். மசுகெத்தூணும் விரிந்த சன்னவாயுடன், சிறுகுண்டுகளை தான் சுட்டது, ஆகையால் மசுகெத்தூணுக்கும் பிளந்தர்பசிற்கும் ஒன்றும் பெரிய வேறுபாடு இல்லை.[5][6][7] பிளந்தர்பசுகள் பொதுவாகவே சிறியது, மசுகெத்தின் குழல் 3 அடிக்கும் (91 செ.மீ.) மேலாக இருந்த காலத்தில், 2 அடிக்கும் (61 செ.மீ.) கீழான குழல் நீளத்துடன் இருந்தது பிளந்தர்பசு.[8][9]

பயன்பாடு  தொகு

 
மெக்ஸிகோவின் வெராக்ரூஸ் மாநிலத்தில் நடத்த செர்ரோ கோர்தோ போர்க்களத்தில் கண்டெடுக்கப்பட்ட டிராகன், அல்லது கையடக்க பிளந்தர்பசு.
 
ஓர் 1808 ஹர்பெரின் ஃபெர்ரி பிளந்தர்பசு. லெவிஸ் மற்றும் கிளார்க் போர்தொடரின் போது இருந்த வகை.

எடைகுறைவான , எளிதாக கையாளக்கூடிய சுடுகலன் தான் குதிரைப்படையின் தேவை, அதைப் பூர்த்தி செய்யும் பொருட்டு பிளந்தர்பசுகள் (அதிலும் குறிப்பாக டிராகன்கள்) குதிரைப்படைத் துருப்புகளுக்கு வழங்கப்பட்டது.[9] டிரகூன் என்றாலே ஏற்றப்பதாதிகள் தான் என்று எண்ணும் அளவிற்கு, டிராகன் குதிரைப்படை மற்றும் ஏற்றப்பதாதிகளுடன் ஒன்றிப்போனது.

மேற்கோள்கள்  தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Blunderbuss
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

குறிப்புகள்

  1. 1.0 1.1    "Blunderbuss". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press. 
  2. Sibbald Mike Lier (1868). The British Army: Its Origin, Progress, and Equipment. Cassell, Petter, Galpin. பக். 33, 302–304. 
  3. George Elliot Voyle, G. de Saint-Clair-Stevenson (1876). A Military Dictionary. W. Clowes & Sons. பக். 43, 114. https://archive.org/details/amilitarydictio00stegoog. 
  4. Exhibition at the Metropolitan Museum of Art, your New York.
  5. "Musketoon (AAA2517)". National Maritime Museum இம் மூலத்தில் இருந்து 2009-02-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090201113306/http://www.nmm.ac.uk/collections/explore/object.cfm?ID=AAA2517. 
  6. "Thunder Gun" இம் மூலத்தில் இருந்து 2010-06-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100613092820/http://lewis-clark.org/content/content-article.asp?ArticleID=2360. 
  7. Society of Antiquaries of Newcastle upon Tyne (1905). Proceedings. Society of Antiquaries of Newcastle-upon-Tyne. பக். 251. 
  8. See Brown Bess.
  9. 9.0 9.1 Charles Francis Hoban (1853). Pennsylvania Archives. , page 324, from a letter dated March 7, 1778
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளந்தர்பசு&oldid=3583653" இருந்து மீள்விக்கப்பட்டது