உரூத் ஆல்பெரின்-கடாரி
உரூத் ஆல்பெரின்-கடாரி ( Ruth Halperin-Kaddari ) ( பிறப்பு 15 மே 1966 ) ஓர் இஸ்ரேலிய சட்ட அறிஞரும் மற்றும் சர்வதேச பெண்களின் உரிமைகள் வழக்கறிஞரும் ஆவார். குடும்பச் சட்டம், பெண்ணியச் சட்டக் கோட்பாடு, சர்வதேச சட்டத்தில் பெண்களின் உரிமைகள் மற்றும் சமயம் மற்றும் பெண்கள் ஆகியவற்றில் பணியாற்றியதற்காக அறியப்பட்டவர். 2006 முதல் 2018 வரை பெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான ஐக்கிய நாடுகள் அவையின் குழு உறுப்பினராக இருந்தார். மேலும் பல காலகட்டங்களில் குழுவின் துணைத் தலைவராகவும் இருந்தார். பார்-இலன் பல்கலைக்கழகத்தில் சட்டப் பேராசிரியராகவும், பெண்களின் நிலையை மேம்படுத்துவதற்கான உரூத் மற்றும் இமானுவேல் ராக்மேன் மையத்தின் நிறுவன கல்வி இயக்குநராகவும் உள்ளார். இவர் பெண்கள், அரசு மற்றும் மதம் என்ற கருப்பொருளில் சர்வதேச கல்வி ஒத்துழைப்புகளில் ஈடுபட்டுள்ளார். மேலும் இஸ்ரேலிய குடும்பச் சட்டத்தில் நிபுணராக சர்வதேச வழக்குகளில் வாதாடுகிறார்.[1]
பேராசிரியர் உரூத் ஆல்பெரின்-கடாரி | |
---|---|
רות הלפרין-קדרי | |
2015இல் உரூத் ஆல்பெரின்-கடாரி | |
பெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான குழு உறுப்பினர் | |
பதவியில் 2006–2018 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 15 மே 1966 |
தேசியம் | இஸ்ரேலியர் |
முன்னாள் கல்லூரி | யேல் சட்டப்பள்ளி |
வேலை | சட்டப் பேராசிரியர் |
விருதுகள் | சர்வதேச வீரதீர பெண்கள் விருது |
2007 ஆம் ஆண்டில் சர்வதேச பெண்கள் உரிமைகள் குறித்த இவரது பணிக்காக அமெரிக்க வெளியுறவுச் செயலாளரின் சர்வதேச வீரதீர பெண்கள் விருது பெற்ற முதல் நபர்களில் இவரும் ஒருவர். 2018 ஆம் ஆண்டில் பாலின சமத்துவக் கொள்கையில் உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க நூறு நபர்களில் ஒருவராக இவர் தரவரிசைப்படுத்தப்பட்டார். [2]
தொழில் வாழ்க்கை
தொகுஆல்பெரின்-கடாரி, பார்-இலான் பல்கலைக்கழகத்தின் தலைவராக இருந்த புகழ்பெற்ற மொழியியலாளரும் பண்டைய செமித்திய மொழிகளில் நிபுணருமான மெனாச்செம் சிவி கடாரியின் மகளாவார்.
இவர் பார்-இலான் பல்கலைக்கழகத்தில் 1989இல் இளங்கலைச் சட்டம் பயின்றார். அமெரிக்காவில் உள்ள யேல் சட்டப் பள்ளியில் 1990 இல் முதுகலை பட்டமும், 1993 இல் ஆராய்ச்சி முனைவர் பட்டமும் பயின்றார். [3][4] [5] ஆல்பெரின் பார்-இலான் பல்கலைக்கழகத்தில் சட்டப் பேராசிரியராக உள்ளார். 2001 ஆம் ஆண்டில் உரூத் மற்றும் இமானுவேல் ராக்மேன் பெண்களின் நிலை முன்னேற்றத்திற்கான மையத்தை நிறுவினார். இது பாலின நீதியை மேம்படுத்தும் ஒரு சமூக-சட்ட மையமாகும். மேலும் அது நிறுவப்பட்டதிலிருந்து இவர் மையத்தின் கல்வி இயக்குநராக பணியாற்றினார்.
ஐக்கிய நாடுகள் அவையின் பங்கு
தொகு2006 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை ஒழிப்பதற்கான ஐக்கிய நாடுகள் அவையின் குழுவில் நான்கு ஆண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் 2009 முதல் 2010 வரை குழுவின் துணைத் தலைவராக இருந்தார். இவர் தேர்ந்தெடுக்கப்பட்ட நேரத்தில் குழுவின் இளைய உறுப்பினராக இருந்தார். 2010 ஆம் ஆண்டில் குழுவில் தனது இரண்டாவது பதவிக்காலத்திற்கும், 2014 ஆம் ஆண்டில் தனது மூன்றாவது பதவிக்காலத்திற்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். [6][7] மீண்டும் 2017 இல் குழுவின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தக் குழுவில் முன்னாள் பிரெஞ்சு பாலின சமத்துவ அமைச்சர் நிக்கோல் அமலின் மற்றும் பாலியல் வன்முறை தொடர்பான ஐ. நா. சிறப்பு பிரதிநிதி மற்றும் ஐ. நா துணை பொதுச்செயலாளர் பிரமிளா பாட்டென் ஆகியோருடன் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக பணியாற்றினார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "The Rackman Center". Archived from the original on 2019-08-20. பார்க்கப்பட்ட நாள் 2024-03-15.
- ↑ "Gender Equality Top 100: The Most Influential People In Global Policy". Archived from the original on 2018-06-14. பார்க்கப்பட்ட நாள் 2024-03-15.
- ↑ Home Truths: A Religious Feminist Trailblazer Tells It Like It Is, Haaretz
- ↑ Ruth Halperin-Kaddari பரணிடப்பட்டது 2018-03-27 at the வந்தவழி இயந்திரம், Bar-Ilan University
- ↑ Ruth Halperin-Kaddari, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம்
- ↑ Prof. Ruth Halperin-Kaddari Elected for Third Time to Prestigious UN Committee, BIU, 2014-07-02
- ↑ "Human Rights in Practice Series for International Women's Day: Professor Ruth Halperin-Kaddari | University of Minnesota Law School". law.umn.edu.