உரூப்ஜோதி குர்மி
உரூப்ஜோதி குர்மி (Rupjyoti Kurmi-பிறப்பு 24 சூலை 1977)[1] பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் மே 2021-இல் நடைபெற்ற அசாம் சட்டமன்றத் தேர்தலில் மரியனி சட்டமன்றத் தொகுதியிலிருந்து அசாம் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021 அசாம் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் ரமணி தந்தியை 2,446 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[2][3][4][5] சூன் 2021-இல், உருப்ஜோதி இந்திய தேசிய காங்கிரசிலிருந்து கட்சியில் இளைஞரை பதவி உயர்வு செய்வதில் கருத்து வேறுபாடு காரணமாகவும் இவரது கட்சி விரோத நடவடிக்கைகளுக்காகவும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.[6] இதன் பின்னர் அசாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.[7] இவர் முன்னாள் அமைச்சர் ரூபம் குர்மியின் மகன் ஆவார்.[1] இவர் ஏப்ரல் 2023-இல் தாஜ்மஹால் மற்றும் குதுப்மினாரை இடித்து இவற்றின் இடங்களில் இந்துக் கோயில்களைக் கட்டும்படி கேட்டுக்கொண்ட சர்ச்சையில் சிக்கினார்.[8]
உரூப்ஜோதி குர்மி | |
---|---|
உரூப்ஜோதி குர்மி (நடுவில்) பதாகையுடன் | |
உறுப்பினர்- அசாம் சட்டப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2006 | |
முன்னையவர் | அலோக் குமார் கோசு |
தொகுதி | மரியனி சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 24 July 1977 அசாம் மருத்துவக் கல்லூரி, அசாம் | (வயது 47)
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி (2021-முதல்) |
பிற அரசியல் தொடர்புகள் | இந்திய தேசிய காங்கிரசு (1999-2021) |
துணைவர்(கள்) | மஞ்சூரியா போர்தோலொய் (தி. 2006) |
பிள்ளைகள் | நிர்வான் குர்மி |
பெற்றோர் | செனிராம் குர்மி (தந்தை) உருபம் குர்மி (தாய்) |
வாழிடம்(s) | மரியானி, ஜார்கட், அசாம் |
கல்வி | 12 தேர்ச்சி |
முன்னாள் கல்லூரி | ஜகநாத் பாரோக் கல்லூரி |
தொழில் | வணிகம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Who's Who". 2021-06-29. Archived from the original on 29 June 2021. பார்க்கப்பட்ட நாள் 2022-03-10.
- ↑ "Rupjyoti Kurmi (Criminal & Asset Declaration)". MyNeta.com. பார்க்கப்பட்ட நாள் 2021-06-08.
- ↑ "Assam Cong MLA Rupjyoti Kurmi's Exit Is a Bigger Loss Than Prasada". The Quint. பார்க்கப்பட்ட நாள் 2021-06-20.
- ↑ "Four-time Assam Congress MLA Rupjyoti Kurmi resigns, to join BJP". Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2021-06-20.
- ↑ "Assam Congress MLA Rupjyoti Kurmi resigns, says Rahul Gandhi unable to shoulder leadership". India Today. பார்க்கப்பட்ட நாள் 2021-06-08.
- ↑ "Big Breaking: APCC expels Mariani MLA Rupjyoti Kurmi from Congress membership".
- ↑ "Former Congress MLA Rupjyoti Kurmi joins BJP". India Today. பார்க்கப்பட்ட நாள் 2021-06-21.
- ↑ "Assam: BJP MLA Rupjyoti Kurmi Requests PM To Demolish Taj Mahal And Build Temple Instead".