உரோகிணி காட்சே கேவால்கர்

உரோகிணி காட்சே கேவால்கர் (Rohini Khadse-Khewalkar) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் ஜள்காவ் மாவட்ட தேசியவாத காங்கிரசு கட்சியின் பெண் தலைவர் ஆவார். ஜள்காவ் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் உள்ளார். இவர் ஏக்நாத் காட்சேவின் மகள்.[1] 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மகாராட்டிரா சட்டமன்றத் தேர்தலில் ஜல்காவ் முக்தைநகர் தொகுதியில் உரோகிணி கேவால்கர் காட்சே போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

உரோகிணி காட்சே கேவால்கர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
ரோகினி ஏக்நாத் காட்சே

1 திசம்பர் 1982 (1982-12-01) (அகவை 42)
கோதாலி, முக்தைநகர், மாவட்டம். ஜல்கான் மகாராட்டிரா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிதேசியவாத காங்கிரசு கட்சி
துணைவர்பிரஞ்சல் கெவால்கர்
உறவுகள்ஏக்நாத் காட்சே
(தந்தை)
பிள்ளைகள்2 (சாரா & சமார்ஜித்)
பெற்றோர்ஏக்நாத் காட்சே (தந்தை), மந்தாகினி காட்சே (தாய்)
வாழிடம்(s)முக்தைநகர், ஜள்காவ், மகாராட்டிரம்
முன்னாள் கல்லூரிஇளம் வணிகவியல், இளங்கலைச் சட்டம், மும்பை பல்கலைக்கழகம் முதுநிலை சட்டம், புனே பல்கலைக்கழகம்
தொழில்அரசியல்வாதி
இணையத்தளம்http://www.rohinikhadse.in

வகித்தப் பதவிகள்

தொகு
  • உரோகிணி காட்சே கேவால்கர் 2015 முதல் 2021 வரை - ஜல்காவ் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராகவும், 2015 முதல் தற்போது வரை - மகாராட்டிரா மாநில கூட்டுறவு ஜவுளி கூட்டமைப்பின் துணைத் தலைவராகவும் 2013 முதல் தற்போது வரை - ஆதிசக்தி முக்தை சககாரி சூட் கிர்னி நிறுவனத் தலைவராகவும் உள்ளார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Srinavasan, Chandrashekhar (24 October 2019). "Maharashtra assembly election result : Rohini Khadse daughter of BJP leader Eknath Khdase loses in Muktainagar". NDTV. பார்க்கப்பட்ட நாள் 9 November 2019.