உறைப்பூச்சு

உறைப்பூச்சு (Cladding) ஒரு பொருளின் மேலாக வேற்று பொருள் பூச்சு போன்ற அடுக்காக ஒட்டப்படுவதைக் குறிப்பதாகும்.

கட்டிடங்கள் கட்டுமானம் பணி முடிவுறும் தறுவாயில் தளம் மற்றும் சுவர்களில் மேலாக மெல்லிய ஓடுகள் பூச்சு போன்ற அடுக்கு ஒட்டப்படுகின்றது.[1][2][3]

கட்டிடங்களில் கண்ணாடி சாளரங்களூடாக அளவுக்கு அதிகமான உட்புகும் சூரிய ஒளியும், அதனுடன் சேர்ந்து வெப்பமும் நுழைவதைக் கட்டுப்படுத்த கண்ணாடியின் மேலாக பூச்சு போன்ற அடுக்கு ஒட்டப்படுகின்றது.

அன்றாடம் உதவும் தளபாட பொருட்களான மர மேசை, கட்டில் மற்றும் அலங்காரத்துக்குரிய சாதனங்கள் போன்றவற்றை பாதுகாப்பாக வைக்க நெகிழி (பிளாஸ்டிக்) போன்ற மூலப்பொருட்களால் மெல்லிய அடுக்கு ஒட்டப்படுகின்றது.

மேற்கோள்கள்

தொகு
  1. Adam Boult (16 June 2017). "What is cladding, and why can it be a fire risk?". The Daily Telegraph. பார்க்கப்பட்ட நாள் 22 June 2017.
  2. "What is cladding and why is it used on buildings?". The Sydney Morning Herald. 15 June 2017. பார்க்கப்பட்ட நாள் 22 June 2017.
  3. Nik Vigener, PE and Mark A. Brown (5 October 2016). "Curtain Walls – WBDG". Whole Building Design Guide – National Institute of Building Sciences. பார்க்கப்பட்ட நாள் 22 June 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உறைப்பூச்சு&oldid=4164156" இலிருந்து மீள்விக்கப்பட்டது