உலகம் சுற்றலாம் வாங்க (நூல்)
உலகம் சுற்றலாம் வாங்க என்னும் நூல் பேராசிரியர் சோ. மோகனா என்பவரால் எழுதப்பட்ட 11 கட்டுரைகளின் தொகுப்பு ஆகும். ஊர் சுற்ற யாருக்குத்தான் பிடிக்காது. உலகம் முழுக்க சுற்றிப் பார்க்க எல்லோருக்கும் வாய்க்காது. உலக நாடுகளை சுற்றிப் பார்க்க அழைத்துச் செல்கிறது என்னும் குறிப்போடு இந்நூல் வெளிவந்திருக்கிறது.
உலகம் சுற்றலாம் வாங்க | |
---|---|
நூல் பெயர்: | உலகம் சுற்றலாம் வாங்க |
ஆசிரியர்(கள்): | பேரா. சோ. மோகனா |
வகை: | கட்டுரைத் தொகுப்பு |
துறை: | நிலவியல் |
காலம்: | 21ஆம் நூற்றாண்டின் முதற் பத்தாண்டுகள் |
இடம்: | சென்னை |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 64 |
பதிப்பகர்: | புக்ஸ் ஃபார் சில்ரன் 421 அண்ணாசாலை தேனாம்பேட்டை சென்னை 600 018 |
பதிப்பு: | முதல் பதிப்பு: நவம்பர்,2006 |
ஆக்க அனுமதி: | பேரா. சோ. மோகனா |
கங்காருகளின் நாடு
தொகு47000 ஆண்டு தொன்மையும் 1800 ஆண்டு பழமை வாய்ந்த கலைகளைக்கொண்ட 200 மொழிகள் பேசும் அபார்ஜின்கள் என்னும் பழங்குடியினர்களின் நாடு ஆசுதிரேலியா. அந்நாட்டைப் பற்றிய சிறிய அறிமுகம் இக்கட்டுரை.
பனிப் பாலைவனம்!
தொகுநாற்புறமும் தென்திசையைக் கொண்டிருக்கும் வடதுருவப் பகுதியான ஆர்ட்டிக் வட்டத்தை அறிமுகம் இக்கட்டுரை இது.
வளம் நிறைந்த ஆப்பிரிக்கா!
தொகுமேற்குலகம் இருண்ட கண்டம் எனப் பெயரிட்டு அழைக்கிற, ஆனால் தொன்மையான நாகரிகங்களும் அளப்பரிய வளமும் நிறைந்த ஆப்பிரிக்கா கண்டத்தைப் பற்றிய அறிமுகம் இக்கட்டுரை.
கண்டுபிடிப்புகளின் பிறப்பிடம்!
தொகுதமது அயராத உழைப்பால் உலகுக்குக் கணக்கற்ற கண்டுபிடிப்புகளை வழங்கிய சீனாவைப் பற்றிய கட்டுரை இது.
மணம் பரப்பும் ஃபிரான்ஸ்!
தொகுஐரோப்பாவின் வடமேற்கு ஓரத்தில் அறுகோண அமைப்பில் அமைந்துள்ள பிரான்சு நாட்டைப் பற்றிய கட்டுரை.
நாகரிகத்தின் தொட்டில்
தொகுஅன்றைய மெசபடோமியா என்னும் இன்றைய ஈராக் பற்றிய கட்டுரை இது.
எழில் கொஞ்சும் இலங்கை!
தொகுஜனநாயகத்தின் பிறப்பிடம்
தொகுரோமானியப் பேரரசு பிறந்து வளர்ந்த இத்தாலி நாட்டைப் பற்றிய கட்டுரை.
பணக்கார நாடு!
தொகுபணக்கார நாடு என்னும் பிம்பத்தை உடைய அமெரிக்க ஐக்கிய நாட்டைப் பற்றிய கட்டுரை இது.
மிகப்பெரிய நாடு!
தொகுபொதுவுடமைக் கோட்பாடு அரசாக உருவான உருசியா நாட்டைப் பற்றிய அறிமுகம்.
உலகிலேயே அழகான நாடு!
தொகுகடிகாரங்கள் உற்பத்தியாகும் சுவிட்சர்லாந்து நாட்டைப் பற்றிய அறிமுகம் பற்றிய கட்டுரை இது.