உலக எயிட்சு நாள்
உலக எய்ட்ஸ் நாள் (World AIDS Day) ஆண்டுதோறும் திசம்பர் முதல் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஒரு கருப்பொருளின் அடிப்படையில் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்நாள் எய்ட்ஸ் நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. எய்ட்ஸ் நாள் பற்றிய எண்ணக்கரு முதலாவதாக 1988 இல் நடைபெற்ற, எய்ட்ஸ் பற்றிய உலக சுகாதார அமைச்சர் மாநாட்டில் உருவானது. அதன் பிறகு அரசுகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இந்நாளை உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தி வருகின்றன.
1981-இலிருந்து 2007- வரை எய்ட்ஸ் நோயால் இறந்தவரின் எண்ணிக்கை 250 லகரங்களுக்கு மேல்.[1] 2007-ஆம் ஆண்டு வரை 332 லகரம் மக்கள் இந்நோயுடன் வாழ்ந்து வருகின்றனர். இதனால் இந்நோய் வரலாற்றிலேயே மிக கொடூரமான தொற்றுநோயாக கருதப்படுகிறது. சமீபத்திய சிகிச்சை முறைகளின் முன்னேற்றம் மற்றும் கண்காணிப்பின் கீழ் இருந்தும், எய்ட்ஸ் நோயால் உலகெங்கிலும் 2007-ஆம் ஆண்டில் 20 லகரம் உயிரிழப்பு ஏற்பட்டது[2] ,இதில் 270,000 குழந்தைகள்.[3]
வரலாறு
தொகுசுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் அமைந்துள்ள உலக சுகாதார அமைப்பில் எயட்சிர்க்கான உலகளாவிய நிகழ்ச்சியின் பொது தகவல் அதிகாரிகளான ஜேம்ஸ் பன்ஸ் மற்றும் தாமஸ் நெட்டேர் எனும் இருவரால் 1987-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உருவாக்கப்பட்டதே உலக எய்ட்ஸ் தினம்.[4][5] . தங்கள் யோசனையை எயட்சிர்கான உலகளாவிய நிகழ்ச்சியின் இயக்குநர் முனைவர் ஜோனதன் மன்னிடம் கொண்டு சென்றனர் இருவரும். முனைவர்.மன்னுக்கு இது பிடித்து போகவே,அவர் இதை அங்கீகரித்து , 1988-ஆம் ஆண்டு டிசம்பர் முதலாம் நாளை உலக எய்ட்ஸ் தினமாக கடைபிடிக்க பரிந்துரை செய்தார்.
டிசம்பர் முதலாம் நாளை அத்தினமாக கடைபிடிக்க பன் தான் யோசனை வழங்கினர்,ஏனெனில் அப்பொழுது தான் மேற்கத்திய செய்தி நிறுவனங்களின் கவனம் அவ்வருடம் (1988) நடைபெறும் தேர்தலை முழுமையாக ஒலிபரப்பு செய்து ஓய்ந்திருக்கும்.ஆதலால்,புது செய்திக்காக காத்திருக்கும் அமெரிக்க செய்தி நிறுவனங்களை கொண்டு இந்நாளை உலகம் முழுதும் கடைபிடிக்க அணுகவது செரியானது என்று தீர்மானித்தார்கள்.மேலும், டிசம்பர் ஒன்று என்பது தேர்தல் முடிந்து சில நாட்களுக்கு பின்னும், கிறிஸ்த்துமஸ் விடுமுறை தொடங்க சில நாட்களுக்கு முன்னும் வருவதால், அதுவே உலக நாள்காட்டியில் சரியான நாளாக அமையும் என்று பன்ஸ் மற்றும் நெட்டேர் உணர்ந்தார்கள்.
எச். ஐ. வி/எய்ட்ஸ்க்காக கூட்டு ஐக்கிய நாடுகள் நிகழ்ச்சி 1996-ஆம் ஆண்டு செயல்பாட்டிற்கு வந்தது, மேலும் இதுவே உலக எய்ட்ஸ் தினத்திற்கான திட்டம் மற்றும் ஊக்குவிப்பை செய்தது[6]. ஒரே நாளில் செய்வதற்கு பதிலாக1997-ஆம் ஆண்டு இந்நிகழ்ச்சி உலக எய்ட்ஸ் பிரச்சாரத்தை உருவாக்கி,அதன் மூலமாக வருடம் முழுவதும் செய்திப்பரிமாற்றம்,தடுப்பு மற்றும் கல்வி வழங்கின[6][7].
முதல் இரண்டு வருடங்களில்,எய்ட்ஸ் தினத்திற்கான கருப்பொருள் குழந்தைகள் மற்றும் இளம் வயதினரையே சுற்றி இருந்தது. எய்ட்சால் அவதியூருபவர்கள் மற்றும் ஹெட்ச்.ஐ.வியால் பாதிக்கப்படுபவர்கள் எல்லா வயதினருமே என்பதனால் இந்த கருப்பொருள்கள் பின்பு கடினமாக எதிர்க்கப்பட்டன.
2004-ஆம் ஆண்டு உலக எய்ட்ஸ் பிரச்சாரம் ஒரு சுதந்திர சங்கமாக மாறியது.[6][7][8]
ஒவ்வொரு வருடமும், போப்பரசர்கள் இரண்டாம் ஜான் பால் மற்றும் பதினாறாம் பெனெடிக்ட் உலக எய்ட்ஸ் தினத்தன்று நோயாளிகள் மற்றும் மருத்துவர்களுக்கு வாழ்த்துச் செய்தி வெளியிடுவார்கள்[9][10][11][12][13][14].
நோக்கம்
தொகுஎயிட்சு மேலும் பரவாமல் தடுக்கவும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை குறைக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிவு காட்டவும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான் உலகளாவிய இந்த தினத்தின் நோக்கமாகும். எயிட்சு பாதிப்புக்கு உள்ளானவர்களின் உணர்வுகளை மதிக்கவும் அவர்களின் உரிமைகளை மதிக்கவும் மக்களை பழக்குவதும் இதன் முக்கிய குறிக்கோளாகும். 'கல்வி மற்றும் விழிப்புணர்வு' மட்டுமே எயிட்சு தடுப்பிற்கான சிறந்த மற்றும் சரியான சமூக மருந்து என்பதை உணர்ந்து விழாக்கள், நாடகங்கள், நாட்டியங்கள் ஆகியவற்றில் எயிட்சு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு அம்சங்களை இடம் பெற செய்து மக்களுக்கு விழிப்புணர்வு கருத்துகளை பரப்ப செய்வதே இந்நாளின் நோக்கமாகும்.
எச் ஐ வி பாதிப்பின் விவரங்கள்
தொகுஎச் ஐ வி பாதிப்புக்குள்ளான மக்களை அதிகம் கொண்டுள்ள இரண்டாவது நாடு இந்தியா ஆகும். 35 % எயிட்சு நோயாளிகள் 15 முதல் 24 வயதிற்கு உட்பட்டவர்களே. 86 % பாதுகாப்பு அற்ற உடலுறவின் மூலமாகவும், 4 % எச் ஐ வி தொற்று உள்ள கர்ப்பிணிகளின் மூலமாகவும், 2 % சரியாக சுத்தம் செய்யப்படாத ஊசிகளை பயன்படுத்துவதின் மூலமும், 2 % பரிசோதனை செய்யப்படாத ரத்தத்தின் வழியாகவும், மீதி 6 % பிற காரணங்களாலும் பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. (NACO 2004).
இந்தியாவில் எயிட்சு தடுப்பு முயற்சிகள்
தொகு- எயிட்சு-ஐ வெற்றிகொள்ள யுவா என்னும் இளைஞர் தேசிய இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. யுவா என்பது 'Youth Unite for Victory on Aids என்பதன் சுருக்கமாகும். அதாவது எயிட்சு-ஐ வெல்ல ஒன்றுபட்ட இளைய பாரதம். இத்திட்டம் 27.06.2006 -இல் குடியரசு துணைத் தலைவரால் தொடங்கப்பட்டது. நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை,நேரு யுவ கேந்த்ரா,சாரணர் இயக்கம்,இளைஞர் செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்ட 7 தேசிய இளைஞர் அமைப்புகள் அங்கம் வகிக்கின்றன. மொத்தமாக 21 மில்லியன் தனார்வ தொண்டர்கள் சேவை புரிகின்றனர்.
தமிழ்நாட்டில் எயிட்சு தடுப்பு முயற்சிகள்
தொகு- 2005 -06 ம் கல்வி ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் தமிழ்நாடு மாநில எயிட்சு கட்டுப்பாட்டு சங்கத்தின் நிதி ஆதரவில் ரெட் ரிப்பன் கிளப் தொடங்கப்பட்டு உள்ளது.
கருப்பொருட்களை தேர்ந்தெடுத்தல்
தொகு1988-2004 வரையான எய்ட்ஸ் நாள் யுஎன்எய்ட்ஸ் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு வந்தது. 2005 முதல் இப்பொறுப்பு "உலக எய்ட்ஸ் பிரச்சாரம்" (உலக எய்ட்ஸ் பிரச்சாரம் பரணிடப்பட்டது 2016-01-25 at the வந்தவழி இயந்திரம்) என்ற அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
1988 | தொடர்பாடல் |
1989 | இளைஞர் |
1990 | எய்ட்சும் பெண்களும் |
1991 | சவாலை பகிர்ந்து கொள்ளல் |
1992 | சமூகத்தின் ஈடுபாடு |
1993 | செயலாற்றுதல் |
1994 | எய்ட்சும் குடும்பமும் |
1995 | உரிமைகளையும் பொறுப்புகளையும் பகிர்ந்து கொள்ளல் |
1996 | ஒரு உலகம் ஒரு நம்பிக்கை |
1997 | எய்ட்சுடன் வாழும் குழந்தைகள் |
1998 | மாற்றத்துக்கான சக்தி: இளம் வயதினருடன் உலக எய்ட்ஸ் பிரச்சாரம். |
1999 | செவிகொடு, கற்றுக்கொள், வாழ்: குழந்தைகள் மற்றும் இளம் வயதினருடன் உலக எய்ட்ஸ் பிரச்சாரம். |
2000 | எய்ட்ஸ்: மாற்றம் செய்யும் மனிதர் |
2001 | நான் கவனிக்கிறேன்.நீங்கள்? |
2002 | வடு மற்றும் பாகுப்பாடு |
2003 | வடு மற்றும் பாகுப்பாடு |
2004 | பெண்கள், எச்.ஐ.வி., எய்ட்ஸ் |
2005 | எய்ட்சை நிறுத்து. சத்தியத்தை காப்பாற்று |
2006 | எய்ட்சை நிறுத்து. சத்தியத்தை காப்பாற்று- Accountability |
2007 | எய்ட்சை நிறுத்து. சத்தியத்தை காப்பாற்று |
2008 | எய்ட்சை நிறுத்து. சத்தியத்தை காப்பாற்று |
2009 | எய்ட்சை நிறுத்து. சத்தியத்தை காப்பாற்று |
2010 | எய்ட்சை நிறுத்து. சத்தியத்தை காப்பாற்று |
2011 | பூஜ்யத்தை அடைவோம் : எச்.ஐ.வி பாதிப்பு பூஜ்யமாக இருக்கட்டும்[15] |
2012 | ஒன்றாய் இணைந்து எய்ட்ஸை ஒழிப்போம் [16] |
2013 | பூஜ்ஜிய பாகுபாடு [17] |
2014 | இடைவெளியை குறைப்போம்[18] |
2015 | விரைவான வழியில் எய்ட்ஸ்க்கு முடிவளிப்போம் [19] |
மேலும் படிக்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ எச். ஐ. வி/எய்ட்ஸ்க்காக கூட்டு ஐக்கிய நாடுகள் நிகழ்ச்சி, உலகளாவிய தொற்றுநோய் பற்றிய 2008-ஆம் ஆண்டிற்கான அறிக்கை , (ஜெனீவா, சுவிட்செர்லாந்து: UNAIDS, ஜூலை 2008; ஆங்கிலம்), p. 15.
- ↑ எச். ஐ. வி/எய்ட்ஸ்க்காக கூட்டு ஐக்கிய நாடுகள் நிகழ்ச்சி, உலகளாவிய தொற்றுநோய் பற்றிய 2008-ஆம் ஆண்டிற்கான அறிக்கை , (ஜெனீவா, சுவிட்செர்லாந்து: UNAIDS, ஜூலை 2008; ஆங்கிலம்), p. 30.
- ↑ எச். ஐ. வி/எய்ட்ஸ்க்காக கூட்டு ஐக்கிய நாடுகள் நிகழ்ச்சி, உலகளாவிய தொற்றுநோய் பற்றிய 2008-ஆம் ஆண்டிற்கான அறிக்கை , (ஜெனீவா, சுவிட்செர்லாந்து: UNAIDS, ஜூலை 2008; ஆங்கிலம்), p. 37.
- ↑ நோய் தடுப்புக்கான அமெரிக்க மையம்,அகிலஉலக செய்தி , "இருபது வருடங்களுக்குப்பின் மனம் திறக்கிறார் உலக எய்ட்ஸ் தினத்தின் துணை-நிறுவனர் ", CDC HIV/Hepatitis/STD/TB தடுப்பு செய்தி , டிசம்பர் 12, 2007
- ↑ "இருபது வருடங்களுக்குப்பின் மனம் திறக்கிறார் உலக எய்ட்ஸ் தினத்தின் துணை-நிறுவனர்" ரோஸ் ஹோபன் , அமெரிக்காவின் குரல் , 06 டிசம்பர் , 2007
- ↑ 6.0 6.1 6.2 "Speicher, Sara. "தனிமையின் இருபதாவது வருடத்தை உலக எய்ட்ஸ் தினம் இன்று குறிக்கிறது." மெடிக்கல் நியூஸ் டுடே. 19 நவம்பர் 2008". Archived from the original on 2011-02-22. பார்க்கப்பட்ட நாள் 2009-12-01.
- ↑ 7.0 7.1 van Soest, Marcel. "உலக எய்ட்ஸ் தினத்தன்று ஓர் முக்கிய செய்தி" எச். ஐ. வி/எய்ட்ஸ்க்காக கூட்டு ஐக்கிய நாடுகள் நிகழ்ச்சி. 20 அக்டோபர் 2006.
- ↑ 2005-ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகள் ஆண்டுப்புத்தகம் . Vol. 59 ஜெனீவா,சுவிட்செர்லாண்டு: ஐக்கிய நாடுகள் பதிப்பு, 2007. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 92-1-100967-7
- ↑ முதல் உலக எய்ட்ஸ் தினம், 1988
- ↑ "உலக எய்ட்ஸ் தினத்திற்கான செய்தி". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2009-12-01.
- ↑ எய்ட்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கும்,அவர்கள் குடும்பத்துக்கும் அருகாமையிலேயே நான் இருக்கிறேன்:போப்பரசர்
- ↑ கரிடஸ் இண்டர்நேஷினல்சின் உலக எய்ட்ஸ் தின செய்தி 2006[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "ஆணுறை விஷயத்தை போப்பரசர் தன செய்தியில் கூறவில்லை". Archived from the original on 2010-04-24. பார்க்கப்பட்ட நாள் 2009-12-01.
- ↑ "உலக எய்ட்ஸ் தினத்தன்று போப்பரசரிடமிருந்து ஓர் செய்தி". Archived from the original on 2020-03-13. பார்க்கப்பட்ட நாள் 2009-12-01.
- ↑ World AIDS Day 2011 பரணிடப்பட்டது 2015-07-01 at the வந்தவழி இயந்திரம் World AIDS Campaign
- ↑ World AIDS Day 2012 UNAids
- ↑ World AIDS Day 2013 UNAids
- ↑ World AIDS Day 2014 UNAids
- ↑ World AIDS Day 2015 UNAids
வெளி இணைப்புகள்
தொகு- உலக எய்ட்ஸ் பிரச்சாரம் பரணிடப்பட்டது 2016-01-25 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழியில்)
- எவர்ட்.காம் தளத்தின் எய்ட்ஸ் நாள் பக்கம் (ஆங்கில மொழியில்)
- வேர்ட்ல் எய்ட்ஸ்.ஓர்க் தளம் (ஆங்கில மொழியில்)
- எய்ட்ஸ் நாள் பற்றிய விடியோ காட்சிகள் (ஆங்கில மொழியில்)