உலக நோய்த்தடுப்பு வாரம்

உலக நோய்த்தடுப்பு வாரம் (World Immunization Week) என்பது உலகெங்கிலும் உள்ள நோய்களுக்கு எதிராகத் தடுப்பூசி-தடுக்கக்கூடிய நன்மைகளை எடுத்துக்கூறி நோய்களுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் வாரமாகும். நோய்த்தடுப்பு விகிதங்களை அதிகரிப்பதற்கான உலகளாவிய ஒரு பொதுச் சுகாதார பிரச்சாரம் இதுவாகும். இது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் கடைசி வாரத்தில் நடைபெறுகிறது.

உலக நோய்த்தடுப்பு வாரம்
World Immunization Week
கடைபிடிப்போர்அனைத்து உறுப்பு நாடுகள், உலக சுகாதார நிறுவனம்
நாள்ஏப்ரல் கடைசி வாரம்
நிகழ்வுஆண்டுதோறும்

தொண்டை அடைப்பான், தட்டம்மை, தொடர் இருமல், இளம்பிள்ளை வாதம், நரப்பிசிவுநோய் மற்றும் கோவிட் -19 பெருந்தொற்று உள்ளிட்ட நோய்களுக்கு எதிராகக் குழந்தை பருவத்திலிருந்து முதுமை வரை வழங்கப்படும் நோய்த்தடுப்பு மருந்துகள் 25 வெவ்வேறு தொற்று அல்லது நோய்களிலிருந்து பாதுகாப்பினை தருகின்றன. உலக சுகாதார அமைப்பு (WHO) மதிப்பீட்டின் படு தடுப்பூசி மூலம் ஒவ்வொரு ஆண்டும் 2 முதல் 3 மில்லியன் இறப்புகள் தடுக்கப்படுகின்றன. இருப்பினும், வளரும் நாடுகளில் சுமார் 22.6 மில்லியன் குழந்தைகளுக்கு இன்னும் அடிப்படை தடுப்பூசி கூட பெற வாய்ப்பில்லாமல் உள்ளது.[1] போதிய அளவில் சுகாதார அமைப்பின்மை மோசமான மேலாண்மை மற்றும் போதிய கண்காணிப்பு இத்தகையப் போக்கு நிகழ்கின்றது. உலக நோய்த்தடுப்பு வாரத்தின் குறிக்கோள், நோய்த்தடுப்பு எவ்வாறு உயிர்களைக் காப்பாற்றுகிறது என்பது குறித்த பொது விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, தமக்கும் தங்கள் குழந்தைகளுக்கும் ஆபத்தான நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகளைப் பெற எல்லா இடங்களிலும் உள்ள மக்களுக்கு ஆதரவளிப்பதாகும்.

உலக நோய்த்தடுப்பு வாரம் ஒரு வாரகால நோய்த்தடுப்பு விழிப்புணர்வு நினைவுகூரலுக்காக பல்வேறு நாடுகளிலும் பிராந்தியங்களிலும் நடைபெற்று வரும் முயற்சிகளிலிருந்து உருவானது. உலக சுகாதார அமைப்பின் பதினோரு அதிகாரப்பூர்வ பிரச்சாரங்கள் ஒன்று உலக நோய்த் தடுப்பு வாரமாகும். இதில் உலக சுகாதார நாள், உலக குருதிக் கொடையாளர் நாள், உலக புகையிலை எதிர்ப்பு நாள், உலக காசநோய் நாள், உலக மலேரியா நாள், உலக நோயாளியின் பாதுகாப்பை நாள், உலக கல்லீரல் அழற்சி நாள், உலக ஆண்டிமைக்ரோபியல் விழிப்புணர்வு வாரம், உலக சாகஸ் நோய் நாள் மற்றும் உலக எய்ட்சு நாள் ஆகும்.[2]

வரலாறு

தொகு
 
ஒரு குழந்தை போலியோவுக்கு எதிராக நோய்த்தடுப்பு செய்யப்படுகிறது.

உலக சுகாதார அவை 2012 மே கூட்டத்தில் உலக நோய்த்தடுப்பு வாரத்திற்கு ஒப்புதல் அளித்தது.[3] முன்னதாக, நோய்த்தடுப்பு வார நடவடிக்கைகள் உலகின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு தேதிகளில் நடைபெற்றன. உலகளவில் 180க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களின் பங்களிப்புடன், நோய்த்தடுப்பு வாரம் 2012 இல் முதன்முறையாக ஒரே நேரத்தில் தற்பொழுது நடைபெறுகிறது.[4][5]

கருப்பொருள்

தொகு

ஒவ்வொரு உலக நோய்த்தடுப்பு வாரமும் ஒரு கருப்பொருளை மையமாகக் கொண்டுள்ளது. [6][7]

  • 2021: ”தடுப்பூசிகள் நம்மை நெருங்கச் செய்கின்றன”
  • 2020: "தடுப்பூசிகள் அனைவருக்கும் பயனளிக்கின்றன"
  • 2018 & 2019: "ஒன்றாகக் பாதுகாக்கப்படுகிறது: தடுப்பூசிகள் வேலை செய்கின்றன!"
  • 2017: "தடுப்பூசிகள் வேலை"
  • 2015 & 2016: "நோய்த்தடுப்பு இடைவெளியைக் குறைக்கவும்"
  • 2014: "நீங்கள் புதுப்பித்தவரா?"
  • 2013: "உங்கள் உலகைப் பாதுகாக்க - தடுப்பூசி போடுங்கள்"
  • 2012: "நோய்த்தடுப்பு உயிர்களைக் காப்பாற்றுகிறது"

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
  1. World Health Organization, Immunization coverage. WHO Fact sheet N° 378, updated February 2014. Accessed 9 April 2014.
  2. World Health Organization, WHO campaigns. Accessed 20 October 2020.
  3. World Health Organization, World Immunization Week essentials. Accessed 9 April 2014.
  4. Canadian Public Health Association, The World’s First “World Immunization Week”. பரணிடப்பட்டது 2016-11-05 at the வந்தவழி இயந்திரம் Accessed 9 April 2014.
  5. US Centers for Disease Control and Prevention, World Immunization Week. Accessed 9 April 2014.
  6. World Health Organization, World Immunization Week 2014. Accessed 9 April 2014.
  7. World Health Organization, World Immunization Week 2016. Accessed 27 January 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக_நோய்த்தடுப்பு_வாரம்&oldid=3235623" இலிருந்து மீள்விக்கப்பட்டது