தொடர் இருமல்

தொடர் இருமல் (Whooping cough), அல்லது 100 நாள் இருமல் (100-day cough) என்றும் அழைக்கப்படும் கக்குவான் (pertussis), மிகவும் பயங்கரமான பாக்டீரியா தொற்றுநோயாகும்.[1][2] ஆரம்ப அறிகுறிகளில் மூக்குச் சளி, காய்ச்சல் மற்றும் லேசான இருமல் ஆகியவற்றுடன் கூடிய பொதுவான தடிமன் போலவே ஒத்திருக்கும். இதைத் தொடர்ந்து பல வாரங்கள் கடுமையான இருமல் ஏற்படும்.[3] இருமல் அதிகமாக இருப்பதால், பாதிக்கப்பட்டவர் சுவாசிக்கும்போது அதிக ஒலியுடன் "ஹூப்" என்ற சத்தத்தில் இருமல் ஏற்படலாம்.[3] இருமல் நூறு நாட்கள் அல்லது பத்து வாரங்களுக்கு மேல் நீடிக்கும். பாதிக்கப்பட்டவருக்கு மிகவும் அதிகமாக இருமலாம், அவர்கள் வாந்தியெடுக்கலாம், விலா எலும்புகள் உடையும் அளவு வலி ஏற்படலாம் அல்லது வேலை செய்தால் மிகவும் சோர்வடையலாம்.[2][2] ஒரு வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு இருமல் குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருக்கலாம், அதற்குப் பதிலாக அவர்களுக்குச் சுவாசச் சிக்கல்கள் இருக்கலாம்.[2] நோய்த்தொற்றுக்கும் அறிகுறிகளின் ஏற்படத் தொடங்குவதற்கும் இடையில் பொதுவாக ஏழு முதல் பத்து நாட்கள் ஆகும்.[2] தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு நோய் ஏற்படலாம், ஆனால் அறிகுறிகள் பொதுவாக மிதமாக இருக்கும்.[2]

தொடர் இருமல்
Whooping cough
ஒத்தசொற்கள்கக்குவான், 100-நாள் இருமல்
சிறப்புதொற்றுநோய்
அறிகுறிகள்மூக்கு ஒழுகுதல், காய்ச்சல், இருமல்
சிக்கல்கள்வாந்தி, உடைந்த விலா எலும்புகள், மிகவும் சோர்வு
கால அளவு~10 கிழமைகள்
காரணங்கள்போர்டடெல்லா பெர்த்தூசிசு (காற்று வழியாக பரவுகிறது)
நோயறிதல்Nasopharyngeal swab
தடுப்புகக்குவான் தடுப்பூசி
சிகிச்சைநுண்ணுயிர் எதிர்ப்பி
நிகழும் வீதம்16.3 மில். (2015)
இறப்புகள்58,700 (2015)

போர்ட்டெல்லா பெர்டுசிஸ் என்ற பாக்டீரியாவால் கக்குவான் ஏற்படுகிறது. இது காற்றுவழி பரவும் நோயாகும், இது பாதிக்கப்பட்ட நபரின் இருமல் மற்றும் தும்மினால் எளிதில் பரவுகிறது.[4] அறிகுறிகள் தொடங்கியதிலிருந்து இருமல் ஏற்படும் மூன்று வாரங்கள் வரை பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களுக்குத் தொற்றுநோய் ஏற்படுத்தும் மையமாக இருக்கிறார்கள். நுண்ணுயிர் எதிர்ப்பிகளால் சிகிச்சையளிக்கப்பட்டவர்கள் ஐந்து நாட்களுக்குப் பிறகு தொற்றுநோய் பரப்பும் மையமாக இருக்கமாட்டார்கள்.[5] மூக்கு மற்றும் தொண்டையின் பின்புறத்திலிருந்து சளி மாதிரியைச் சேகரிப்பதன் மூலம் நோய் கண்டறியப்படும். இந்த மாதிரியை கல்ச்சர் அல்லது பாலிமரேஸ் சங்கிலி வினை மூலம் சோதிக்க முடியும்.[6]

கக்குவான் தடுப்பூசி மூலம் தடுப்பூசி போடப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.[7] ஆறு முதல் எட்டு வாரக் குழந்தைகளுக்கு ஆரம்ப நோய்த்தடுப்பு பரிந்துரைக்கப்படுகிறது, இரண்டு வயதிற்குள் நான்கு டோஸ் கொடுக்கப்பட வேண்டும்.[8] இந்தத் தடுப்பூசி காலப்போக்கில் குறைவான செயல்திறன் கொண்டதாக மாறுவதால் வளரும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடையே பெரும்பாலும் கூடுதல் டோஸ்கள் பரிந்துரைக்கப்படுகின்றன.[9] நோய் பரவிய பகுதியில் உள்ளவர்கள் மற்றும் கடுமையான நோய் அபாயத்தில் உள்ளவர்களிடையே நோயைத் தடுக்க நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பயன்படுத்தப்படலாம்.[10] ஆரம்ப அறிகுறிகள் தொடங்கிய மூன்று வாரங்களுக்குள் சிலருக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பயனுள்ளதாக இருக்கும், ஆனால் பெரும்பாலான மக்களுக்கு இது குறைவான விளைவையே ஏற்படுத்தும். ஒரு வயதுக்கு குறைவான குழந்தைகளிலும், கர்ப்பமாக இருப்பவர்களிடமும் அறிகுறி தோன்றிய ஆறு வாரங்களுக்குள் பரிந்துரைக்கப்படுகிறது. பயன்படுத்தப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளில் எரித்ரோமைசின், அஜித்ரோமைசின் அல்லது ட்ரைமெத்தோபிரைம்/சல்பமெத்தொக்சசோல் ஆகியவை அடங்கும்.[5] இருமலுக்கான மருந்துகளின் செயல்திறனை ஆதரிப்பதற்கான சான்றுகள் மோசமாக உள்ளன.[11] ஒரு வயதிற்குக் குறைவான பல குழந்தைகளை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியிருக்கும்.[2]

உலகளவில் 16 மில்லியன் மக்களை கக்குவான் பாதிக்கிறது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.[11] பெரும்பாலான பாதிப்புகள் வளரும் நாடுகளில் நிகழ்கின்றன மற்றும் எல்லா வயதினரும் பாதிக்கப்படலாம்.[7][11] 2013 ஆம் ஆண்டில் இந்த நோயால் 61,000 மரணங்கள் ஏற்பட்டன – அது 1990 ஆம் ஆண்டில் ஏற்பட்ட 1,38,000 மரணங்களை விடக் குறைவாகும்.[12] ஒரு வருடத்திற்கும் குறைவான வயது கொண்ட பாதிக்கப்பட்ட குழந்தைகளில் கிட்டத்தட்ட 2% பேர் மரணிக்கின்றனர்.[13] நோய் பரவல் முதல் முதலில் 16 ஆம் நூற்றாண்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நோய்த்தொற்றுக்குக் காரணமான பாக்டீரியா 1906 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தத் தடுப்பூசி 1940களில் கிடைக்கத் தொடங்கியது.[14]

மேற்கோள்கள்

தொகு
  1. Carbonetti NH (June 2007). "Immunomodulation in the pathogenesis of Bordetella pertussis infection and disease". Curr Opin Pharmacol 7 (3): 272–8. doi:10.1016/j.coph.2006.12.004. பப்மெட்:17418639. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 "Pertussis (Whooping Cough) Signs & Symptoms". May 22, 2014. பார்க்கப்பட்ட நாள் 12 February 2015.
  3. 3.0 3.1 "Pertussis (Whooping Cough) Fast Facts". cdc.gov. February 13, 2014. பார்க்கப்பட்ட நாள் 12 February 2015.
  4. "Pertussis (Whooping Cough) Causes & Transmission". cdc.gov. September 4, 2014. பார்க்கப்பட்ட நாள் 12 February 2015.
  5. 5.0 5.1 "Pertussis (Whooping Cough) Treatment". cdc.gov. August 28, 2013. பார்க்கப்பட்ட நாள் 13 February 2015.
  6. "Pertussis (Whooping Cough) Specimen Collection". cdc.gov. August 28, 2013. பார்க்கப்பட்ட நாள் 13 February 2015.
  7. 7.0 7.1 Heininger U (February 2010). "Update on pertussis in children". Expert review of anti-infective therapy 8 (2): 163–73. doi:10.1586/eri.09.124. பப்மெட்:20109046. 
  8. "Revised guidance on the choice of pertussis vaccines: July 2014.". Wkly Epidemiol Rec 89 (30): 337–40. Jul 2014. பப்மெட்:25072068. http://www.who.int/wer/2013/wer8930.pdf?ua=1. 
  9. "Pertussis vaccines: WHO position paper.". Wkly Epidemiol Rec. 85 (40): 385–400. Oct 1, 2010. பப்மெட்:20939150. 
  10. "Pertussis (Whooping Cough) Prevention". cdc.gov. October 10, 2014. பார்க்கப்பட்ட நாள் 13 February 2015.
  11. 11.0 11.1 11.2 Wang, K; Bettiol, S; Thompson, MJ; Roberts, NW; Perera, R; Heneghan, CJ; Harnden, A (22 September 2014). "Symptomatic treatment of the cough in whooping cough.". The Cochrane Database of Systematic Reviews 9: CD003257. doi:10.1002/14651858.CD003257.pub5. பப்மெட்:25243777. 
  12. GBD 2013 Mortality and Causes of Death, Collaborators (17 December 2014). "Global, regional, and national age-sex specific all-cause and cause-specific mortality for 240 causes of death, 1990-2013: a systematic analysis for the Global Burden of Disease Study 2013.". Lancet 385 (9963): 117–71. doi:10.1016/S0140-6736(14)61682-2. பப்மெட்:25530442. 
  13. "Pertussis (Whooping Cough) Complications". cdc.gov. August 28, 2013. பார்க்கப்பட்ட நாள் 12 February 2015.
  14. Atkinson, William (May 2012). Pertussis Epidemiology and Prevention of Vaccine-Preventable Diseases (12 ed.). Public Health Foundation. pp. 215–230. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780983263135.

வெளி இணைப்புகள்

தொகு
வகைப்பாடு
வெளி இணைப்புகள்
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கக்குவான்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொடர்_இருமல்&oldid=3898169" இலிருந்து மீள்விக்கப்பட்டது