உலும்பாங் கோயில், மத்திய சாவகம்

உலும்பாங் கோயில் (Lumbung) அல்லது கண்டி உலும்பாங் என்பது இந்தோனேசியாவின் மத்திய ஜாவாவின் பிரம்பானன் கோயில் சுற்றுலா பூங்காவின் வளாகத்திற்குள் அமைந்துள்ள 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் கோயில் வளாகமாகும். இந்தக் கோயிலின் உண்மையான பெயர் தெரியவில்லை, எனினும் உள்ளூரில் இக்கோயிலை ஜாவானிய மொழியில் கண்டி உலும்பாங் என்று அழைக்கின்றனர். உலும்பாங் என்பதற்கு வழிமுறையாக ஜாவானிய மொழியில் "அரிசி கொட்டகையின் கோயில்" என்று பொருளாகும்.[1]

உலும்பாங் முதன்மைக் கோயில்

அமைவிடம் தொகு

இது பிரம்பானான் கோயிலிலிருந்து பல நூறு மீட்டர் வடக்கே, புப்ரா கோவிலுக்கு அடுத்ததாக அமைந்துள்ளது. இந்த கோயில் பிரம்பனன் அல்லது கெவு சமவெளியில் அமைந்துள்ளது. இப் பகுதி அதிக எண்ணிக்கையிலான 8 ஆம் நூற்றாண்டு மற்றும் 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, இந்து பௌத்தக் கோயில்களைக் கொண்ட, தொல்லியல் தளங்கள் அதிகமாக நிறைந்த பகுதியாகும்.

வரலாறு தொகு

இந்த கோயில் கட்டட அமைப்பில், அதற்கு அருகில் அமைந்துள்ள சேவு கோயிலுடன் மிகவும் ஒத்த நிலையைக் கொண்டு அமைந்துள்ளது. தவிர இது சிறிய அளவில் உள்ளது. இந்த கோயிலுக்கு அருகே 704 சாகா (பொ.ச. 782) நாளிட்ட கேலுராக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. மஞ்சுஸ்ரீ போதிசத்துவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் வளாகத்தை நிர்மாணிப்பது பற்றி இந்தக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள கோயில் உலும்பாங் கோயிலுக்கு பதிலாக சேவு கோயிலாக இருக்க வாய்ப்பு உள்ளது. சேவு கோயிலின் கட்டுமான அமைப்புகளுட்ன் ஒப்பு நோக்கும்போது, இக்கோயில் 9 ஆம் நூற்றாண்டில் பண்டைய மாதரம் இராச்சியத்தின் போது கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. [2] இது சேவு மற்றும் புப்ரா கோயில் கட்டப்பட்ட அதே காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம். இருந்தாலும், இக்கோயில் பிரம்பானான் கோயிலைவிட பழமையானது ஆகும்.

அமைப்பு தொகு

இந்த கோயில் வளாகமானது 16 பெர்வாரா (சிறிய) கோயில்களால் சூழப்பட்ட ஒரு முதன்மைக் கோயிலைக் கொண்டு அமைந்துள்ளது. இக்கோயிலின் கட்டடக்கலை பாணியானது அருகிலுள்ள சேவு கோயில் வளாகத்தைப் போன்றது. சேவு மற்றும் பிரம்பனன் கோயில்களைப் போலவே, இந்த கோயிலும் கிழக்கு நோக்கிய நிலையில் உள்ளது. இந்தக் கோயிலின் முதன்மை பிரதான நுழைவாயிலுடன் கோயில் வளாகம் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இருப்பினும் அனைத்து கார்டினல் புள்ளிகளிலிருந்தும் கோயிலை அடையலாம். கோயிலின் அமைப்பு அமைப்பு ஸ்தூபங்களால் முடிசூட்ட நிலையில் காணப்படுகிறது. அருகிலுள்ள புப்ரா கோயிலின் இடிபாடுகளுடன் ஒப்பிடும்போது, உலும்பாங் கோயிலின் வளாகம் இன்னும் நல்ல நிலையில் உள்ளதை அறியமுடிகிறது.

 
கிழக்கிலிருந்து உலும்பாங் கோயில் வளாகத்தின் தோற்றம்

அருகிலுள்ள இடங்கள் தொகு

உலும்பாங் கோயிலுக்குச் செல்பவர்கள் அப்பகுதியில் அருகே உள்ள பல இடங்களைக் காண முடியும். அருகில் பிரம்பானான் தொல்லியல் பூங்கா உள்ளது. இப்பகுதி யுனெஸ்கோவால் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்ட பகுதியாகும். அருகிலுள்ள யோக்யாகர்த்தாவிற்கு செல்லலாம். அங்கிருந்து சோலோ எனப்படுகின்ற சுராகர்த்தாவிற்கும் செல்ல வாய்ப்பு உள்ளது. அருகிலுள்ள பெரம்பனான் பூங்கா போன்ற பகுதிக்குச் செல்லும்போது உடன் சுற்றுலா வழிகாட்டிகளை அழைத்துச்சென்றால் இவ்விடங்களைப் பற்றிய கூடுதல் செய்திகளை அறியமுடியும். இடத்தின் அமைப்பில் உலும்பாங் கோயில் இவ்வகையில் முக்கியத்துவம் பெறுகிறது. இக்கோயிலுக்கு வருவது மூலமாக இக்கோயிலை மட்டும் அன்றி அருகிலுள்ள சேவு கோயில், புப்ரா கோயில் ஆகிய கோயில்களையும் காண முடியும். அங்கிருந்து இந்துக்கோயிலான பிரம்பானான் செல்லலாம். அங்கு 240க்கும் மேற்பட்ட கோயில்கள் காணப்படுகின்றன. அங்கு பிரம்மன் கோயில், விஷ்ணு கோயில், சிவன் கோயில் ஆகிய கோயில்களும் உள்ளன. இவை இந்த இடத்தின் சிறப்பினை உணர்த்துகின்றன. [3]

குறிப்புகள் தொகு

  1. "SEAlang Library Javanese Lexicography". sealang.net. பார்க்கப்பட்ட நாள் 2019-04-19.
  2. V.M.Y. Degroot, Candi, Space and Landscape: "A Study on the Distribution, Orientation and Spatial Organization of Central Javanese Temple Remains", 2010, Sidestone Press
  3. Lumbung Temple (Candi Lumbung) Tours