உல்லாஸ்நகர் தாலுகா
உல்லாஸ்நகர் தாலுகா (Ulhasnagar taluka) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின், கொங்கண் கோட்டத்தில் அமைந்த தானே மாவட்டத்தின் 7 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1]இதன் நிர்வாகத் தலைமையிடம் உல்லாஸ்நகர் ஆகும். 13 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட உல்லாஸ்நகர் தாலுகாவின் மொத்த மக்கள் தொகை 5,06,098 ஆகும். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் 38,931 பேர் வீதம் வாழ்கின்றனர்.
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி,1,11,799 வீடுகளைக் கொண்ட உல்லாஸ்நகர் தாலுகாவின் மொத்த மக்கள் தொகை 5,06,098 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 2,69,048 மற்றும் பெண்கள் 2,37,050 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 881 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 51,267 (10.13%) ஆகும். சராசரி எழுத்தறிவு 78.63% ஆகும். பட்டியல் மற்றும் பழங்குடிகள் முறையே 17.13% மற்றும் 1.3% ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 4,17,438 (82.48%), இசுலாமியர்கள் 32,055 (6.33%), பௌத்தர்கள் 39,224 (7.75%), சமணர்கள் 467 (0.09%), கிறித்துவர்கள் 6,118 (1.21%), சீக்கியர்கள் 8,734 (1.73%) மற்றும் பிற சமயத்தினர் 0.49% ஆக உள்ளனர்.[2][3]