உள்ளுக்குறுக்கை
உள்ளுக்குறுக்கை (Ullugurukkai) தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம், கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்ததில் கெலமங்கலம்-ராயக்கோட்டை சாலையில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் ஆகும். இந்த ஊர் திம்ஜேப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது. இவ்வூரின் அஞ்சல் குறியீட்டு எண் 635113. காமராசர் முதல்வராக இருந்தபோது அமரர் இராமகிருஷ்ண முதலியார் விவசாயத்தில் குறுகிய பரப்பில் அதிக விளைச்சல் பெற்றதற்காக சிறந்த விவசாயிக்கான பட்டம் பெற்றார்.[சான்று தேவை]
இங்கு இசுலாமியர்கள் அதிகளவில் வசிக்கின்றனர்.[சான்று தேவை] இவ்வூர் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.[சான்று தேவை] 30 -க்கும் மேற்பட்ட சாதியைச் சேர்ந்த மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். ஆண்டிற்கொருமுறைக் கொண்டாடப்படும் அருள்மிகு பாட்ட கங்கையம்மன் ஆலயத் தேர்த்திருவிழா சிறப்பு வாய்ந்தது. பிரசித்திப்பெற்ற அருள்மிகு முத்தப்பா திருக்கோவிலும் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இசுலாமியர்களால் உருஸ் திருவிழாவும் மிகச்சிறப்பாகவே நடத்தப் பெறுகிறது.
பெயராய்வு
தொகுஒரு காலத்தில் இப்பகுதி அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. கருநாடகத்தில் இருந்து இப்பகுதிக்கு ஒரு காலத்தில் மக்கள் கால் நடை மேய்ச்சலுக்காக வந்து குடியேறினர். உள்ளு என்ற கன்னடச் சொல்லுக்குக் புல் என்பது பொருளாகும். குறி என்ற கன்னடச் சொல்லுக்கு ஆடு என்பது பொருளாகும். ஆட்டு மேய்சலுக்கான புல்வெளி பகுதி என்னும் பொருளில் இப்பெயர் வந்திருக்கலாம் என்கிறார் கோ. சீனிவாசன்.[1]