உஸ்மானாபாத் மாவட்டம்
உஸ்மானாபாத் மாவட்டம் இந்தியாவில் உள்ள மகாராஷ்டிராவில் உள்ளது. இது அவுரங்காபாத் மண்டலத்திற்கு உட்பட்டது. இதன் தலைமையகம் உஸ்மானாபாத் நகரில் உள்ளது. புகழ் பெற்ற துளஜாபவானி கோயில் இந்த மாவட்டத்தில் உள்ளது. இந்த மாவட்டம் 7569 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. [2] இந்த மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் மலைகளில் அமைந்துள்ளன. தாராசிவா குகைகள் இம்மலைகளில் உள்ளது.
Osmanabad District உஸ்மானாபாத் மாவட்டம் عثمان آباد ضلع उस्मानाबाद जिल्हा | |
---|---|
Osmanabad District உஸ்மானாபாத்மாவட்டத்தின் இடஅமைவு மகாராஷ்டிரா | |
-18°24′N 76°24′E / 18.40°N 76.40°E | |
மாநிலம் | மகாராஷ்டிரா, இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | அவுரங்காபாத் கோட்டம் |
தலைமையகம் | உஸ்மானாபாத் |
பரப்பு | 7,569 km2 (2,922 sq mi) |
மக்கட்தொகை | 1660311 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 219.0/km2 (567/sq mi) |
படிப்பறிவு | 76.33% |
பாலின விகிதம் | 920 |
வட்டங்கள் | 1. உஸ்மானாபாத் 2. துளஜாபூர் 3. உமர்கா, 4. லோஹாரா 5. களம்பு 6. பூம் 7. பராண்டா 8. வாசி |
மக்களவைத்தொகுதிகள் | உஸ்மானாபாத்[1] |
முதன்மை நெடுஞ்சாலைகள் | தேசிய நெடுஞ்சாலை 9, தேசிய நெடுஞ்சாலை 211 |
சராசரி ஆண்டு மழைபொழிவு | 730 mm |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
வட்டங்கள்
தொகுஇந்த மாவட்டத்தை எட்டு வட்டங்களாகப் பிரித்துள்ளனர். [3]
- உஸ்மானாபாத்
- துளஜாபூர்
- உமர்கா
- லோஹாரா
- களம்பு
- பூம்
- வாசி
- பராண்டா
மக்கள் தொகை
தொகு2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது 1,660,311 மக்கள் வாழ்ந்தனர். [2]
இந்த மாவட்டத்தில் சதுர கிலோமீட்டருக்குள் 219 பேர் வாழ்வதாக மக்கள் அடர்த்தி கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. [2] ஆயிரம் ஆண்களுக்கு நிகராக 920 பெண்கள் இருப்பதாக பால் விகிதக் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. [2] இங்கு வாழ்வோரில் கல்வியறிவை 76.33% பேர் பெற்றுள்ளனர்.[2]
அரசியல்
தொகுசிவ சேனா , காங்கிரசு, தேசியவாத காங்கிரசு, பாரதிய ஜனதா, பகுஜன் சமாஜ் ஆகியன இங்குள்ள பெரிய கட்சிகள் [4][5]
இந்த மாவட்டத்தை பாராளுமன்றத்தில் முன்னிறுத்துபவர் உஸ்மானாபாத் மக்களவைத் தொகுதியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். [6]
போக்குவரத்து
தொகுஇந்த மாவட்டத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலைகள் வழியாக பிற இடங்களுக்கு செல்லலாம். இங்கு ரயில் நிலையங்களும் உள்ளன.
சான்றுகள்
தொகு- ↑ "Parliamentary Constituencies Maharashtra" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 2009-03-06. பார்க்கப்பட்ட நாள் 2014-07-13.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 "District Census 2011". Office of The Registrar General & Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
- ↑ "Blocks of Osmanabad, Maharashtra". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 2011-11-13. பார்க்கப்பட்ட நாள் 2014-07-13.
- ↑ "Election Information in Osmanabad Parliament . Dr. Padamsingh bajirao Patil is member of parliament from 2009. Constituency". Party Analyst (IT GRIDS, India). Archived from the original on 2013-10-04. பார்க்கப்பட்ட நாள் 2014-07-13.
- ↑ "State Assembly Elections 2009: Maharashtra: Osmanabad". Indian Election Affairs. Archived from the original on 2013-05-18. பார்க்கப்பட்ட நாள் 2014-07-13.
- ↑ Cite web|title=Map: Parliamentray Constituencies Maharashtra|publisher= Election Commission of India|url=http://164.100.9.199/ecimaps/ecipdf/state_pc_Map/Maharashtra.pdf பரணிடப்பட்டது 2009-03-06 at the வந்தவழி இயந்திரம்
இணைப்புகள்
தொகு- மாவட்ட அரசு பரணிடப்பட்டது 2009-04-10 at the வந்தவழி இயந்திரம்
- துளஜாபவானி கோயில் பரணிடப்பட்டது 2015-04-02 at the வந்தவழி இயந்திரம்