உ. தனியரசு

இந்திய அரசியல்வாதி
(உ.தனியரசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

உ. தனியரசு (U.Thaniyarasu), ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். தாராபுரத்தை சேர்ந்த இவர் 2016 முதல் 2021 வரை காங்கேயம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்தார்.

உ.தனியரசு
பதவியில்
May 2016 – May 2021
சட்டமன்ற உறுப்பினர்
தொகுதிகாங்கேயம் (சட்டமன்றத் தொகுதி)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமார்ச் 20, 1967
தாராபுரம்
அரசியல் கட்சிதமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை
துணைவர்உமாராணி
பிள்ளைகள்இரண்டு
பெற்றோர்உடையாக்கவுண்டர், பழனியம்மாள்
வாழிடம்(s)21/A, கவுண்டச்சிபுதூர், எல்லீஸ்நகர் - 638 657, தாராபுரம் வட்டம், திருப்பூர் மாவட்டம்.
கல்விமுதுகலை அரசியல் அறிவியல்
வேலைஅரசியல்

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

ஈரோடு மாவட்டம் ( தற்போதைய திருப்பூர் மாவட்டம் ) தாராபுரம் வட்டம், கவுண்டச்சிபுதூர் என்ற கிராமத்தில் உடையாக்கவுண்டர், பழனியம்மாள் தம்பதிக்கு இரண்டாவது மகனாக மார்ச் 20 1967ல் பிறந்தார்.[1] கவுண்டச்சிபுதுரில் ஆரம்ப கல்வியும், மேல்நிலைப்பள்ளி தாராபுரத்திலும் கற்றார்.

அரசியல்

தொகு

முதுகலை அரசியல் அறிவியல் பயின்றார். தன் இனத்திற்கான அரசியல் அதிகாரத்திற்காகவும் சமூக பாதுகாப்பிற்காகவும் தொடங்கப்பட்ட இயக்கங்கள், கட்சிகள் தோல்வியுற்று, முடங்கியதால், அரசியல், பொருளியியல், சமுக பாதுகாப்பு, இட ஒதுக்கீடு, ஆட்சி அதிகாரத்தில் தன் இனத்திற்குரிய பங்கீடு தேவை என்று கருதி மார்ச் 14 2001ம் ஆண்டு கோவை S.N.அரங்கத்தில் நூற்றுக்கும் குறைவான உறுப்பினர்களை வைத்து தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை என்ற அமைப்பை தொடங்கினார்.

வேளாளர், கவுண்டர் இன சாமானிய மக்களிடையே சமநீதி ஏற்படுத்தி அரசியல் விழிப்புணர்வு பெற்று அதிகாரம் பெற வேண்டி 7 மாநாடுகள் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் சார்பாக நடத்தி உள்ளார்.[சான்று தேவை]

சட்டமன்ற உறுப்பினர்

தொகு

கடந்த 2011ம் ஆண்டு 14ம் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் உ.தனியரசு அவர்கள் நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதியில், போட்டியிட்டு 31,018 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.[2][3]

2016ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் உ.தனியரசு தலைமையிலான தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, அதிமுகவுடன் கூட்டணி வைத்து காங்கேயம் தொகுதியில் 13,135 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. https://nocorruption.in/politician/thaniyarasu-u/
  2. http://dinamani.com/tamilnadu/article789601.ece
  3. http://www.thehindu.com/news/national/tamil-nadu/kongu-ilaignar-peravai-given-one-seat/article1530123.ece
  4. "Kangayam Assembly Election 2016 Latest News & Results". India.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-29.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உ._தனியரசு&oldid=3943051" இலிருந்து மீள்விக்கப்பட்டது