ஊசிவால் வாத்து

ஊசிவால் வாத்து
ஆணும் பெண்ணும் (இடம்-வலம்)
Call
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
அனாடிடே
துணைக்குடும்பம்:
அனாடினே
பேரினம்:
அனாசு
இனம்:
அ. அகுடா
இருசொற் பெயரீடு
அனாசு அகுடா
லின்னேயசு, 1758
இளம் பச்சை — இனப்பெருக்க காலம்
நீலம் — குளிர்காலத்தில்
அடர் பச்சை  — நிலையாக
சிவப்பு  — அலைந்து திரிகின்ற
வேறு பெயர்கள்

டாபிலா அகுடா

அனாசு அகுடா முட்டைகள்

ஊசிவால் வாத்து (Northern Pintail - Anas acuta) வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா கண்டங்களில் இனப்பெருக்கம் செய்து பல்வேறு இடங்களுக்கும் வலசை போகும் ஒரு வாத்து. குளிர் காலத்தில் தென்னிந்தியாவுக்கு வலசை வருகின்றன, என்றாலும் கேரளத்தின் கடற்கரைப் பகுதிகளில் இவற்றைக் காண இயலாது.[2]

விளக்கம்

தொகு

இவை வீட்டு வாத்தைவிடச் சிறியவை. சுமார் 65 செ.மீ நீளமிருக்கும். இவற்றின் அலகு ஈய நிறத்திலும், விழிப்படலம் பழுப்பாகவும், கால்கள், கருப்பு நிறத்தில் இருக்கும். இந்தப் பறவைகளில் ஆண், பெண் பறவைகளுக்கு இடையில் குறிப்பிடதக்க வேறுபாடுகள் உள்ளன.

ஆண்பறவையின் உடலின் மேற்பகுதி கருஞ்சாம்பல் நிறத்தில் இருக்கும். தலை சாக்லெட் நிறத்தில் இருக்கும். தலையில் இருந்து இரு பக்கங்களிலும் வெள்ளை பட்டைகள் கீழ்நோக்கிச் சென்று கழுத்து வெள்ளையோடு சேரும். மார்பு, வயிறு ஆகியவை வெண்மையாக இருக்கும். இவற்றின் கூரிய நீண்ட வால் இவற்றை நன்கு அடையாளம் காண உதவுகிறது.

பெண் பறவையின் உடலின் மேற்பகுதி பழுப்பும் வெளிர் மஞ்சளுமான சிறு வட்டங்களைக் கொண்டிருக்கும். இதற்கு ஆண் பறவைக்கு உள்ளது போன்ற நீண்ட கூரிய வால் கிடையாது.

நடத்தை

தொகு

ஆணும் பெண்ணும் இணையாகவோ அல்லது சிறு கூட்டமாகவோ நாணல் புதர் நிறைந்த ஏரிகளில் திரியக்கூடியன. பிற வாத்துகளோடு கலந்தும் காணப்படும். இவை தானியங்களையும், தாவரப் பொருட்களையும் முதன்மை உணவாக கொள்கின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2013). "Anas acuta". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. pp. 37–38.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊசிவால்_வாத்து&oldid=3771951" இலிருந்து மீள்விக்கப்பட்டது