ஊடு கடற்கரை

இந்தியாவின் கர்நாடகாவில் உள்ள கடற்கரை

ஊடு கடற்கரை (Hoode Beach) இந்தியாவின் கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் கோடி பெங்கரே அருகே உள்ள ஒரு சிறிய மீன்பிடி கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கடற்கரை உடுப்பி நகரத்திலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் கடிகே கடற்கரைக்கும் டெல்டா கடற்கரைக்கும் இடையில் அமைந்துள்ளது. [1] இந்த கடற்கரை இயற்கை எழில் கொஞ்சும் இடமாகவும் திரைப்பட காட்சிகளை படமாக்குவதற்குரிய பிரபலமான இடமாகவும் அறியப்படுகிறது. [2]

சாகா அலைச்சறுக்கு மன்றம்

தொகு

சாகா அலைச்சறுக்கு மன்றம் இந்த பிராந்தியத்தில் அலைச்சறுக்கு விளையாட்டிற்கான பயிற்சியை வழங்கும் முதல் மற்றும் ஒரே அலைச்சறுக்கு விளையாட்டு நிறுவனம் ஆகும். [3] இந்த நிறுவனம் 2007 ஆம் ஆண்டில் துசார் பதியன் மற்றும் இசிதா மாளவியா ஆகியோரால் நிறுவப்பட்டது [4] இசிதா மாளவியா, இந்தியாவின் முதல் தொழில்முறை பெண் அலைச்சறுக்கு விளையாட்டு வீராங்கனையாக கருதப்படுகிறார். [5]

மேற்கோள்கள்

தொகு
  1. "5 Perfect Breaks to Beat the Pandemic Blues" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-15.
  2. "Udupi: 'Anweshi'—Hundreds throng beach for glimpse of movie stars" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-15.
  3. Desk, India TV News (2015-04-06). "India's first woman pro surfer fulfilled The Shaka Surf Club's dream- India TV News" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-15.
  4. George Ramsay. "India's first professional female surfer is changing her country's perception of the ocean". பார்க்கப்பட்ட நாள் 2021-09-15.
  5. Coldwell, Will (2014-02-05). "Surfing in India: catching waves from coast to coast" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊடு_கடற்கரை&oldid=3830563" இலிருந்து மீள்விக்கப்பட்டது