ஊதாமனை அடுப்பு ஊதுவதற்காகப் பயன்படும் ஒரு கருவியாகும். மர விறகுகள் அல்லது குச்சிகள் அல்லது மரப்பொடிகள் இவைகளைக் கொண்டு நெருப்பு அல்லது அடுப்பு மூட்டப்படும்போது (எரிக்கப்படும் போது) எளிதில் தீப்பற்றிக் கொள்வதற்காக ஊதும் ஒரு கருவியாகும். இது இரும்பால் செய்யப்பட்ட நீளக்குழல் போன்ற அமைப்பில் காணப்படும். எனவே இது ஊதுகுழல் எனவும் அழைக்கப்படுகிறது.

ஊதாமனை
ஊதாமனை அல்லது ஊதுகுழல்

இதன் ஒரு முனையில் விசையுடன் காற்றினை வாய்வழியாக லேசாக எரிந்து கொண்டிருக்கும் அடுப்புக்குள் பல முறை ஊதுவர். இதானல் லேசாக எரிந்து (கனன்று) கொண்டிருக்கும் தீயானது மேலும் நன்கு எரியவதற்கான காற்று அடுப்பிற்குள் செலுத்தப்பட்டு தீ நன்கு எரியும்.

விறகடுப்புக்கள் வேகமாக மறைந்து வரும் இக்காலச்சூழலில் இதன் பயன்பாடும் மிகவும் குறைவாகவே உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊதாமனை&oldid=4163451" இலிருந்து மீள்விக்கப்பட்டது