ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, காசிம்புதுப்பேட்டை

காசிம்புதுப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியானது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காசிம்புதுப்பேட்டை கிராமத்தில் அமைந்துள்ள அரசுப் பள்ளியாகும்.

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி- நுழைவாயில்
பள்ளியின் தோற்றம்- காசிம்புதுப்பேட்டை

நிர்வாகம்

தொகு

தமிழ்நாடு அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி திருவரங்குளம் வட்டாரக்கல்வி அலுவலர் அவர்களின் நிர்வாகத்தில் செயல்படுகிறது.ஒன்று முதல் எட்டாம் வகுப்பு இப்பள்ளியில் பயிற்றுவிக்கப்படுகிறது.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்

தொகு

இப்பள்ளியில் 136 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.ஒரு தலைமை ஆசிரியர், மூன்று பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இரண்டு இடைநிலை ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர். பள்ளியின் வளர்ச்சியில் இவ்வூர் மக்களின் பங்களிப்பு அளப்பறியது [1]. இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்களான விலையில்லா பாடநூல், சீருடை, குறிப்பேடுகள், காலணிகள், எழுதுபொருட்கள், உதவித்தொகைகள் போன்றவை வழங்கப்படுகின்றன.

கற்றல் முறைகள்

தொகு

இப்பள்ளியில் ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரை செயல் வழிக்கற்றல் முறையிலும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு எளிய படைப்பாற்றல் கல்வி முறையிலும் ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு படைப்பாற்றல் கல்வி முறையிலும் கற்றல் கற்பித்தல் நடைபெறுகிறது.[2]

செயல்பாடுகள்

தொகு

இப்பள்ளியில் கல்வி வளர்ச்சியை கண்காணிக்கவும் சுகாதாரத்தை பேனவும் பல்வேறு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன .

மன்ற செயல்பாடுகள்

தொகு

பள்ளியில் பல்வேறு நோக்கங்களுக்காக வெவ்வேறு மன்றங்கள் தோற்றுவிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. அவையாவன சுற்றுச்சூழல் மன்றம்[3] அறிவியல் மன்றம் மொழி மன்றம்

விழாக்கள்

தொகு

காசிம்புதுப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பல்வேறு விழாக்கள் நடத்தப்படுகின்றன.

  • ஆண்டு விழா
  • கல்வி வளர்ச்சி நாள் விழா (காமராசர் பிறந்த தினம்)[4][5]
  • அறிவியல் தினம்
  • உணவுத் திருவிழா


மேற்கோள்கள்

தொகு
  1. http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=472213&cat=504[தொடர்பிழந்த இணைப்பு]
  2. http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=32014&cat=1
  3. http://www.padasalai.net/2015/12/eco-club-activities.html
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-07-16. பார்க்கப்பட்ட நாள் 2017-05-08.
  5. http://tamil.webdunia.com/article/education-news-and-articles/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-108071500020_1.htm