எக்காளக் கூத்து
எக்காளம் என்பது ஒரு இசைக்கருவி , இவ்விசைக்கருவியை இசைத்துக்கொண்டே ஆடும் ஆட்டம் எக்காளக் கூத்து என்று அழைக்கபடுகிறது. நாயக்கர் மரபில் வரும் தொட்டிய நாயக்கர் இனத்தவர்களால் ஆடப்படுவது இந்த ஆட்டம்.வழக்கு ஒழிந்த ஒரு ஆட்டமாக, இக்கலை இருக்கிறது.[1]
எக்காள கருவி
தொகுவனப்பகுதியில் உள்ள காட்டு எருமைகளின் கொம்பால் செய்யப்படும் ஒருவகையான கருவியால் இம்மக்கள் ஓசை எழுப்புவர் . இவ்வாறாக எழுப்பும் நேரத்தில் இசைக்கு தகுந்தவாறு ஆட்டம் ஆடுவர் . மற்றபடி இவ்வாட்டத்தை ஆட பெரிய விதமான கட்டுப்பாடுகள் இல்லை .
தொட்டிய நாயக்கர்கள்
தொகுவேட்டையாடுவதை குலத்தொழிலாக கொண்டு இருக்கும் ராஜகம்பளம் மக்கள், தாங்கள் வேட்டையாடும் நேரத்தில் கிடைக்கும் விலங்குகளின் கொம்புகளை வைத்து இசை எழுப்புவர் , இவ்வாறாக இசைக்கும் நேரத்தில் மக்கள் அனைவரும் ஆட தொடங்குவர் . வேட்டைக்கு சென்று வந்த களைப்பை போக்கவும், புத்துணர்ச்சி அடையவும் இவ்வாறான கலை நிகழ்ச்சிகளை செய்கின்றனர். மிகத் திறமையாக தொழில்நுட்பத்துடன் வேட்டையாடும் திறன்மிக்க இச்சமூக மக்கள் வில், அம்பு, கருக்கருவாள், ஈட்டி, தொரட்டி உள்ளிட்ட ஆதி பயன்பாட்டுப் பொருட்களைப் பயன்படுத்தியே வேட்டையாடுவார்கள்.
வேட்டை ஆடும் உணவை பகிர்ந்து கொடுப்பது
தொகுதாங்கள் வேட்டையாடும் விலங்குகளை அனைவருக்கும் கொடுக்கும் சமயத்தில் எக்காள இசை இசைத்துக்கொண்டு ஆட்டம் ஆடுவர், அப்பொழுது தேவராட்டம் , சேவயாட்டம் முதலியவையும் நடைபெறும்
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழ்நாட்டு நாட்டுப்புறக் கலைகள்". Archived from the original on 2012-01-11. பார்க்கப்பட்ட நாள் 2012-07-17.