எங்க வீட்டுப் பிள்ளை
எங்க வீட்டுப் பிள்ளை (Enga Veettu Pillai) 1965ஆம் ஆண்டு சனவரி மாதம் 14 ஆம் தேதியன்று பொங்கல் நாளில் எம். ஜி. ஆர், நம்பியார், சரோஜா தேவி, கே. ஏ. தங்கவேலு , நாகேஷ் ஆகியோரின் நடிப்பில் வெளியான தமிழ்த் திரைப்படம்.[1][2] இதனை இயக்கியவர் தபி சாணக்யா. தயாரித்தவர் பி. நாகிரெட்டி, விஜயா புரொடக்சன்ஸ், சக்கரபாணி. எம்.ஜி.ஆர் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.[3] இது பெரும் வெற்றி பெற்றது.
எங்க வீட்டு பிள்ளை | |
---|---|
இயக்கம் | சாணக்யா |
தயாரிப்பு | பி. நாகிரெட்டி விஜயா புரொடக்சன்சு சக்கரபாணி |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் ராமமூர்த்தி |
நடிப்பு | எம். ஜி. ஆர் சரோஜா தேவி |
வெளியீடு | சனவரி 14, 1965 |
நீளம் | 5176 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ரத்னா, எஸ். வி. ரங்காராவ், மாதவி, பண்டரி பாய், எல். விஜயலட்சுமி ஆகியோரும் நடித்திருந்தனர். விஸ்வநாதன், ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர். ஆலங்குடி சோமு பாடலாசிரியராக இருந்தார்.
இந்தத் திரைப்படத்திற்கு வசனம் எழுதியவர், 'சக்தி' டி. கே. கிருஷ்ணசுவாமி ஆவார்.
பாடல்கள்
தொகு- நான் ஆணையிட்டால்...
பாடலை இயற்றியவர் கவிஞர் வாலி.
- நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்...
பாடலை இயற்றியவர் கவிஞர் வாலி.
- கண்களும் காவடி சிந்தாகட்டும்...
பாடலை இயற்றியவர் கவிஞர் ஆலங்குடி சோமு.
- பெண் போனாள்...இந்த பெண் போனால்...
பாடலை இயற்றியவர் கவிஞர் வாலி.
- மலருக்குத் தென்றல் பகையானால்...
பாடலை இயற்றியவர் கவிஞர் ஆலங்குடி சோமு.
- குமரிப் பெண்ணின் உள்ளத்திலே...
பாடலை இயற்றியவர் கவிஞர் வாலி.
மேற்கோள்கள்
தொகு- ↑ எங்க வீட்டுப் பிள்ளை 50 ஆண்டுகள் நிறைவு: மறுபடியும் முதல்லேருந்தா? இந்து தமிழ் நாளிதழ் 05 Jun 2015
- ↑ Ramachandran, T. M. (7 August 1965). "M. G. R.'s unique triumph". Sport and Pastime. Vol. 19. p. 51. Archived from the original on 3 February 2023. பார்க்கப்பட்ட நாள் 3 February 2023 – via Internet Archive.
- ↑ [எங்க வீட்டுப் பிள்ளை சினிமா விமர்சனம் 24.1.1965 ஆனந்த விகடன் - பொக்கிசம் பகுதி 25-03-2009]
நூல் பட்டியல்
தொகு- Balabharathi (2015). Tamil Cinema 80 – Part 1. Nakkheeran. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789381828403.
- Dhananjayan, G. (2011). The Best of Tamil Cinema, 1931 to 2010: 1931–1976. Galatta Media. இணையக் கணினி நூலக மைய எண் 733724281.